பெரம்பலூர் அருகே தண்ணீர் பந்தலில் ஞாயிற்றுக்கிழமை பேருந்து மோதி இளைஞர் உயிரிழந்தார். தொடரும் விபத்துகளைத் தடுக்க வேகத்தடை அமைக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் அருகேயுள்ள இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் கிருஷ்ணமூர்த்தி (29).
இவர், ஞாயிற்றுக்கிழமை மாலை திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தண்ணீர்ப் பந்தல் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சாலையைக் கடக்க முயன்றார். அப்போது, திருச்சியிலிருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் இறந்தவரின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். புகாரின்பேரில், பெரம்பலூர் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.
இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் ஆத்திரமடைந்து, அடிக்கடி விபத்து நிகழும் பகுதியில் வேகத்தடை அமைக்கக் கோரியும், அமைக்கத் தவறிய போலீஸாரை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதைத் தொடர்ந்து, மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதனால், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது v.kalathur seithi .
0 comments:
Post a Comment