தமிழக அரசு உத்தரவின் படி, 2014-15ம் கல்வியாண்டில் வேப்பந்தட்டையில் தொடங்கப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தற்போது மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கூட்டரங்கில் நடத்தப்பட்டு வருகிறது.
செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு பிகாம், பிஏ தமிழ் ஆகிய வகுப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்தப்படுகிறது. வேப் பந்தட்டை மற்றும் அரியலூர் அரசுக் கல்லூரிகளின் பேராசிரியர்கள் கொண்ட குழு கலந்தாய்வுப் பணிகளை மேற் கொண்டு தகுதியான மாணவர்களை சேர்க்க உள்ளனர். இதனை முன்னி ட்டு சம்பந்தப்பட்ட வகுப்புகளில் சேர்வதற்காக விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவிகளில் அழைப்புக் கடிதங்கள் பெற்றவர்களும், கடிதங்கள் கிடைக்க பெறாதவர்களும் கலந்துகொள்ளலாம்.
பிளஸ் 2 முடித்ததற்கான மதிப்பெண் சான்றிதழ், மாற் றுச் சான் றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண் டும். உரிய பாடத்திற்கு உரிய நேரத் தில் நடை பெறும் கலந்தாய்வில் கலந்துகொள்ளாதவர்கள் சேர்க்கை க்கான வாய்ப்பை இழந்துவிடுவர்.
எனவே, குறித்தநேரத்தில் தவறாமல் கலந்தாய்வில் கலந்துகொண்டு பயன் பெற வேண்டும் என்றார் v.kalathur seithi . 9
0 comments:
Post a Comment