Saturday, 14 June 2014


வில்லிவாக்கத்தில் இந்துமுன்னணியினர் போராட்டம்.
இன்னும் எவ்வளவு காலம்தான் ஜெயலலிதாவிற்கு அனுதபிகளாய் இருக்கப்போகிறோம்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் அதிமுக வெற்றி பெற அடிப்படை காரணமாக இருந்தது பாஜகவின் வேட்பாளர் குருமூர்த்தி வேட்ப்புமனு தாக்கல் செய்வதில் காட்டிய மெத்தனம் என்று ஊடகங்களாலும் , பாஜக தொண்டர்கள் ஒரு பகுதியினர் கருதினாலும் உண்மை என்ன என்பது நாம் எல்லோருக்கும் தெரியும்.

ஸ்பெக்ட்ரம் ராசாவை தோற்கடிக்கவேண்டும் என்ற ஒற்றை காரணத்தை வைத்து பாஜக - அதிமுக ரகசிய கூட்டு வைத்துக்கொண்டார்கள் என்ற வாதத்தில் உண்மை இல்லாமல் இல்லை. பாஜக வேட்பாளர் குருமூர்த்தி வேட்பு மனு தள்ளுபடிசெய்யப்பட்டு, பாஜக கூட்டணி போட்டியில் இல்லாத சூழ்நிலை உருவானபோது பாஜக தொண்டர்கள் சிலர்  , முகனூலில் பல பதிவர்கள் , பத்திரிக்கையாளர் சோ மற்றும் பாஜக கூட்டணி உருவாக காரணமாக இருந்த தமிழருவி மணியன் கூட அதிமுகவை கூட்டணி தொண்டர்கள் ஆதரிக்க வேண்டும் என கூறியது நினைவிருக்கலாம். அதோடு பாஜக தமிழக தலைமை யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பதை வெளிப்படையாக கூறாத நிலையில் மறைமுகமாக அதிமுகவுக்கு வாக்களிக்கும் சூழ்நிலையை உருவாக்கினார்கள்.

தேர்தல் முடிந்து கையில் வைத்த மை காயும் முன் தமிழக பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் அதிமுகவின் தேர்தல் வெற்றிக்கு ஜெயலதிதாவின் நிர்வாக திறமைதான் காரணம் என ஜால்ரா கொட்டினார் . ஆனால் ஜெயலலிதா கொடுத்த 200 ருபாய் பணம்தான் பாஜக வேட்பாளர்கள் தோற்க காரணமாக இருந்ததை வசதியாக மறந்தோ அல்லது மறைத்தோவிட்டார்.

தமிழக இந்து அமைப்புகளுக்கு என்றுமே ஜெயலலிதா மீது என்றுமே அனுதாபம் உண்டு , அவரின் சொந்த ஆன்மீக நாட்டங்களை வைத்து  நம் இந்து அமைப்புகளின் வளர்ச்சிக்கு ஜெயலலிதா உதவுவார் என்று இன்னமும் நாம் அப்பாவியாய் நம்ம்பிக்கொண்டிருப்பதன் பலனை இன்று ராமநாதபுரத்தில்  அனுபவிக்கிறோம்.... அனால் ஜெயலலிதா என்றுமே இந்துசமய அமைப்புகளை தனது அரசியல் ஆதாயத்திற்கு உபயோகப்படுத்தி வருகிறார் என்பது நம்மில் பலர்  ஏற்றுக்கொள்ள மறுக்கும் உண்மை. இன்னும் எவ்வளவு காலம் ஜெயலிதாவை நம்பப்போகிறோம்...

தென்தமிழக அளவில் RSS 'ன் பொறுப்பாளர்களின் பொதுக்குழுக்கூட்டம் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நடந்துவருகிறது. 14-15 ஜூன் ஆகிய இரு நாட்களில் நடைபெறும் இக்கூட்டத்தின் ஒரு பகுதியாக காலை மற்றும் மாலை நேரங்களில் ஷாகா என்னும் பண்பாட்டு பயிற்சி நடைபெறும் . நேற்று வழக்கம்போல் நடைபெற்ற ஷாகா வில் கலந்து கொண்ட மாநில மற்றும் தேசிய அளவிலான RSS பொறுப்பாளர்கள் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என காரணம் காட்டி கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment