Wednesday, 11 June 2014


பெரம்பலூர் மாவட்டத்துக்கு ஜூன் 13-ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொது நிறுவனங்கள் குழுவினர் வருகை தர உள்ளனர்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் (பொ) வி. ராஜன்துரை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்துக்கு வருகை தரும் சட்டப்பேரவை குழுவினர் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூர் கிராமத்தில் உள்ள சர்க்கரை ஆலையில் ஜூன் 13-ம் தேதி ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
தொடர்ந்து. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், பெரம்பலூர் சர்க்கரை ஆலை நிறுவனம் மற்றும் மாவட்டத்தில் உள்ள பொதுத்துறை நிறுவன அலுவலர்களுடன் கலந்துரையாடல் மற்றும் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது என்றார் அவர் v.kalathur seithi .

0 comments:

Post a Comment