பொறியியல் கலந்தாய்வுக்கான ரேண்டம் எண்ணை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள மாணவர் சேர்க்கை மற்றும் நுழைவுத் தேர்வு மையத்தில் காலை 9.45 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் ரேண்டம் எண்ணை வெளியிட்டார்.
மாணவர்கள் ரேண்டம் எண்களை, பல்கலைக்கழகத்தின் இணையதளமான www.annauniv.edu ல் தெரிந்துகொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு ஜூன் மாதம் 23-ஆம் தேதி தொடங்க உள்ளது. அன்றைய தினம் விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கப்பட்டு இரண்டு நாள்கள் நடைபெறும்.
பொதுப் பிரிவு கலந்தாய்வு ஜூன் 27-ஆம் தேதி தொடங்கி ஜூலை 28-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 16-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. முன்னதாக ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ரேண்டம் எண் எதற்கு? ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் ஒரே கட் ஆஃப் மதிப்பெண் பெறும்போது, அவர்களில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்ற கேள்வி எழும்.
அப்போது கணிதப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
கணிதப் பாடத்தை அடுத்ததாக இயற்பியல், வேதியல் பாடங்களின் மதிப்பெண்களும் பலருக்கு சமமாக இருக்கும்போது, பிளஸ்-2 நான்காவது பாட மதிப்பெண் பார்க்கப்படும்.
நான்காவது பாட மதிப்பெண்ணும் சமமாக இருக்கும்போது, பிறந்த தேதி கணக்கில் கொள்ளப்படும். பிறந்த தேதியில் யார் மூத்தவரோ, அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பிறந்த தேதியும் சமமாக இருக்குமானால், ரேண்டம் எண் (சம வாய்ப்பு எண்) பயன்படுத்தப்படும். இது கம்ப்யூட்டர் மூலம் ஒதுக்கப்படும் 10 இலக்க எண் ஆகும். இந்த ரேண்டம் எண் மதிப்பு அதிகம் உள்ளவர் கலந்தாய்வுக்கு முதலில் அழைக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொறியியல் கலந்தாய்வுக்கான முக்கிய தேதிகள்:
ரேண்டம் எண் வெளியீடு : ஜூன் 11
தரவரிசைப் பட்டியல் வெளியீடு : ஜூன் 16
விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் : ஜூன் 13 - 16
சரிபார்ப்பு
விளையாட்டுப் பிரிவினருக்கான தரவரிசை : ஜூன் 17
பட்டியல் வெளியீடு
விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு : ஜூன் 23, 24
மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு : ஜூன் 25
பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு : ஜூன் 27 முதல்
ஜூலை 28 வரை
பிளஸ்-2 தொழில் பிரிவு மாணவர்களுக்கான : ஜூலை 9 முதல்
கலந்தாய்வு 20 வரை v.kalathur seithi .

0 comments:
Post a Comment