Tuesday, 22 April 2014


v.kalathur அன்பான வ.களத்தூர் சொந்தங்களே...... நாளை நடக்க உள்ள மக்களவை தேர்தலில் நாம் வாக்களிக்க முக்கியமான விஷயம் நமது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கவேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில்தான் நாம் வாக்களிக்க முடியும்.
 இந்த பட்டியல் pdf கோப்பில் உள்ளது... மேலும் தேர்தல் ஆணைய இணையதள  இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது... இணைப்பில் சொடுக்கி (click) செய்து பார்க்கவும்..........

1.வி.களத்தூர் (வ.கி) மற்றும் வி.களத்தூர் (ஊ) 
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (பெண்கள்) வண்ணாரம்பூண்டி வடக்குபகுதி வடக்கு மெத்தை கட்டிடம் வ.களத்தூர்.

1-நடுத்தெரு வார்டு 1
2-தெற்கு தெரு வார்டு 1
99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்

http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147090.pdf

2.வி.களத்தூர் (வ.கி) மற்றும் வி.களத்தூர் (ஊ)
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (பெண்கள்) வண்ணாரம்பூண்டி வடக்குபகுதி வடக்கு மெத்தை கட்டிடம் வ.களத்தூர்

1-வி.களத்தூர் வடக்கு தெரு வார்டு 1
2-மில்லத் நகர் வார்டு 4
3-போஸ்டாபிஸ் தெரு வார்டு 2
4-அக்கரகாரத்தெரு வார்டு 3
99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்

http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147091.pdf

3.வி.களத்தூர் (வ.கி) மற்றும் வி.களத்தூர் (ஊ)
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வண்ணாரபூண்டி வடக்கு பார்த்த மேற்கு ஓட்டுக்கட்டிடம் வண்ணாரம்பூண்டி வி.களத்தூர்

1-அக்கரகாரத்தெரு வார்டு 3
99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்

http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147092.pdf

4.வி.களத்தூர் (வ.கி) மற்றும் வி.களத்தூர் (ஊ)


ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பெண்கள் தென்வடல் மெத்தைக்கட்டிடம் மேற்கு பார்த்தது வண்ணாரம்பூண்டி வி.களத்தூர்

1-மேலத் தெரு வார்டு 4
2-தெற்கு தெரு வார்டு 4
3-மேட்டுச் சேரி வார்டு 5
4-போஸ்டாபிஸ் தெரு வார்டு 2
99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்

http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147093.pdf

5.வி.களத்தூர் (வ.கி) மற்றும் வி.களத்தூர் (ஊ)
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (பெண்கள்) வண்ணாரபூண்டி கிழக்கு ஆஸ்பெஸ்டாஸ் கட்டிடம் வடக்குபகுதி தெற்கு பார்த்தது வி.களத்தூர்

1-காமராஜர் நகர் வார்டு 4
2-மில்லத்நகர்வார்டு 4
3-தெற்கு தெரு வார்டு 4
99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்

 http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147094.pdf

6.அயல்நாடு வாழ் வாக்காளர்கள்
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பகுதி 5 வடக்கு பார்த்த கிழக்கு ஆஸ்பெஸ்டாஸ் கட்டிடம் தெற்குபகுதி வண்ணாரம்பூண்டி வி.களத்தூர்

1-வி.களத்தூர் பள்ளிவாசல் வீதி வார்டு 1,2
99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்

http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147095.pdf

7.வி.களத்தூர் (வ.கி) மற்றும் வி.களத்தூர் (ஊ)
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பெண்கள் வடக்கு பார்த்த கற்போம் கற்பிப்போம் மெத்தை கட்டிடம் வண்ணாரம்பூண்டி வி.களத்தூர்

1-வண்ணாரம்பூண்டி ரேசன்தெரு வார்டு 4
2-மில்லத் நகர் வார்டு 4
3-வண்ணாரம்பூண்டி காலனிதெரு வார்டு 5
99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்

http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147096.pdf

8.வி.களத்தூர் (வ.கி) மற்றும் வி.களத்தூர் (ஊ)
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வண்ணாரபூண்டி கிழக்குபார்த்த ஒட்டு கட்டிடம் வ.களத்தூர்


1-ராயப்ப நகர் வார்டு 6
2-வள்ளியூர் வார்டு 6
3-இந்திரா நகர் வார்டு 6
99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்

http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147097.pdf
நாளை நடக்க உள்ள மக்களவை தேர்தலில் நாம் வாக்களிக்க முக்கியமான விஷயம் நமது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கவேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில்தான் நாம் வாக்களிக்க முடியும். பெரம்பலூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் விபரம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணைய தளத்தில் காண கிடைக்கிறது. PDF கோப்பாக கிடைக்கும் பட்டியலில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் மற்றும் பெரம்பலூர் நகர பட்டியல் விபரத்தை இனைய தளத்தில் வெளியிட்டுள்ளது. மொத்தம் 292 தலைப்பில் பெரம்பலூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. உடும்பியம் கிராமத்தில் ஆரம்பித்து படாலுரில் பட்டியல் முடிவடைகிறது. PDF கோப்பில் உள்ள இந்த பட்டியலை பின்வரும் இணைப்பில் சொடுக்கி (click) செய்து உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என அறிந்துகொள்ளுங்கள்.
 http://www.elections.tn.gov.in/pdf/ac147.htm
பெரம்பலூர் நகரில், திமுக முஸ்லிம்களுக்கு என்னவெல்லாம் செய்தது என்ற அடிப்படையில் திமுக விற்கு வாக்கு கேட்டு நோட்டிசு வினியோகிக்கப்பட்டுள்ளது...... அதில் முக்கிய அம்சம் முஸ்லிம்களுக்கு திமுக அளித்த இடஒதுக்கீடு பற்றியது.

திமுக தனது சாதனையாக கூறும் இந்த இடஒதுக்கீடு முறையால் பாதிக்கப்படப்போவது யார் தெரியுமா.....?

தமிழ் நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் என அழைக்கப்படும் BC இனத்தவர் ஐம்பது சதவீத மக்களுக்கு மேல் உள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த முப்பது சதவீத இடஒதுக்கீடு கிறித்தவர்களுக்கும, முஸ்லிம்களுக்கும் ஆளுக்கு 3.5 சதவீதம் என்ற அடிப்படையில் கருணாநியால் 2௦௦7ல் பங்குபோட்டு கொடுக்கப்பட்டதால் 23 சதவீதமாக குறைந்தது.

கிறித்தவர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடான 3.5% ல், பழைய இடஒதுக்கீடு முறையைப் போல் அதிக இடங்களை அரசு வேலைவாய்ப்பில் பெறமுடியாததன் காரணமாக எங்களுக்கு இட ஒதுக்கீடு தேவையில்லை என கருணாநிதியிடம் கிறித்தவ அமைப்புகள் கூறியதன் காரணமாக கிறித்தவர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு விலக்கிக்கொள்ளப்பட்டது. தற்பொழுது கிறித்தவர்கள் தமிழ்நாட்டில் அவர்களின் மக்கள்தொகை விகிதத்தைவிட அதிகமான இடங்களில் அரசு வேலைவாய்ப்பை பெற்றுவருகின்றனர்.

அனால் முஸ்லிம் மதத்தினர் இதற்க்கு மாறாக தற்போது வழங்கப்பட்டுவரும் 3.5 சத ஒதுக்கீட்டிலிருந்து ஏழு சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என கேட்கின்றனர். கிறித்தவர் இடஒதுக்கீடு வேண்டாம் என்கின்றனர் ஆனால் முஸ்லிம் மதத்தவர் இடஒதுக்கீடு தாற்போது வழங்கப்படும் 3.5% லிருந்து ஏழு சதவீதமாக உயர்த்த வேண்டும் என கூறும்போது, இதில் உள்ள சதிதிட்டதையும் இதனால் பாதிக்கபடபோவது யார் என்பதையும் நாம் அறிவது அவசியம்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இடஒதுக்கீட்டின் அதிகபட்சவரம்பு 5௦ சதவீதம் . ஆனால் தமிழ்நாட்டின் மொத்த இடஒதுக்கீடு 69 சதவீதம். இந்த முரண் நமக்கு ஆச்சர்யம் அளிக்கலாம். நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்படும் எந்த ஒரு சட்டமும் நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உட்பட்டது. நாடாளுமன்றத்தால் ஒரு சட்டம் நிறைவேற்றப்பாட்டாலும் அது அரசியலைமைப்பு சட்டத்தின் அடிப்படை தன்மையை பாதிக்கும் வைகையில் அமைந்தால் அதனை செல்லாது என அறிவிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு .

இந்த அதிகாரத்தை கட்டுப்படுத்த நாட்டின் முதல் சட்டத்திருத்தம் 1951 ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதன்படி புதிதாக 9 வது schedule கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின்படி தமிழ்நாட்டின் இடஒதுக்கீடு உச்சநீதிமன்ற வரைமுறையின் படி அல்லாமல் 69 சதவீதம் என கடைபிடிக்கப்பட்டு வருகிறது . அனால் உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு ஒன்பதாவது shedule ல் உள்ள சட்டங்களும் நீதிமன்ற பரிசீலனைக்கு உட்பட்டதுதான் என்றது. அதனால் தமிழ்நாட்டின் தற்போதைய இடஒதுக்கீடு முறையின் செல்லத்தக்க தன்மை நீதிமன்றத்தின் கருனைக்காக காத்துக்கிடக்கிறது.

தமிழ்நாட்டின் இடஒதுக்கீடு 69 சதவீதத்தில் MBC 2௦% , SC/ST- 19% மற்றும் BC-3௦%. இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்தவர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடானது பிற்படுத்தோர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 3௦ சதவீத ஒதுக்கீட்டில் இருந்துதான் பிடுங்கப்பட்டது. கருணாநிதியின் திமுக விற்கு வெற்றிவாய்ப்பு அமைந்தால் தற்போது இஸ்லாமிய அமைப்புகள் கேட்கும் ஏழு சதவீத இடஒதுக்கீடும் கொடுக்கப்படும்.

அதிமுக வும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என அதன் பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறுகிறார். இதனால் பாதிக்கப்படப்போவது தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமான உள்ள BC என்றழைக்கப்படும் , பிற்படுத்தப்பட்ட இனத்தைச்சேர்ந்த மக்களே. மேலும் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தமிழ்நாட்டின் இடஒதுக்கீடு முறை செல்லாது என வருமாயின் பாதிக்கப்படப்போவதும் இவர்களே.

இந்துசமுதாயத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட இந்துக்களே.... திமுக மற்றும் அதிமுக வின் கட்சிக்கொடியை சுமந்து அதன் வெற்றிக்காக உழைக்கும் பிற்படுத்தப்பட்ட இந்து தோழர்களே ... உங்கள் குழந்தைகளின் எதிகாலத்தை எண்ணி வாக்களியுங்கள். 



முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு பற்றி அதிமுக நிலை.

Sunday, 20 April 2014

3. பல துறைகளில் தில்லி, ஹரியானா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி குஜராத்துடன் ஒப்பிடும் படியாக அல்லது அதைவிட சிறப்பாக உள்ளதே..
தில்லி, ஹரியானா, கோவா போன்றவை மிகச் சிறிய மாநிலங்கள். அவற்றை குஜராத்துடன் ஒப்பிட முடியாது. மற்ற பெரிய மாநிலங்களைத் தான் ஒப்பிட முடியும்.
உதாரணமாக, மகாராஷ்டிரம், தமிழ்நாட்டை விடவும் வேட் (VAT – Value Added Tax) வரி வருமானம் குஜராத்தில் குறைவாக உள்ளது என்கிறார்கள். ஆனால் அது மேம்போக்கான ஒப்பீடு. இந்த மூன்று மாநிலங்களின் மக்கள் தொகையையும் கணக்கில் எடுத்துக்  கொண்டு,  மதுக் கடைகளினால் வரும் வரி வருமானத்தை கழித்து விட்டுப் பாருங்கள். மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத் முன்னணியில் இருக்கிறது. எனவே அதிக வரி வருமானம் என்ற பெயரில் தமிழக அரசு காட்டும் கணக்கு என்பது டாஸ்மாக் கடைகளால் சீரழிந்த எத்தனையோ குடும்பங்களின் கண்ணீராலும், இழந்த உயிர்களாலும், சீரழிந்த எதிர்காலங்களாலும் நிரம்பியுள்ளது.
TH-TASMAC_SHOP_1_1621736g
கிராம சுகாதாரம், கிராமக் குடிநீர் விநியோகம் இரண்டிலும் தமிழ்நாடு குஜராத்தை விட நல்ல நிலையில் உள்ளது என்பது உண்மையே. இவற்றை  துரித கதியில் குஜராத் அரசு இப்போது மேம்படுத்திக் கொண்டிருக்கிறது. அரசு மருத்துவர்களின் செயல்திறன், எண்ணிக்கை இரண்டிலும் இப்போது தமிழ்நாடு குஜராத்தை விட நல்லநிலையில் உள்ளது தான். ஆனால், மோதியின் அரசு சும்மா இருக்கவில்லை. இந்தப் பிரசினைக்கு முதன்மை அளித்து வேலை செய்து வருகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். இன்னும் சில வருடங்களிலேயே இவற்றில் தமிழ்நாட்டை குஜராத் மிஞ்சி விடலாம்.
மாநில அரசின் ஒட்டுமொத்த செயல்திறன், அரசாட்சியில் தொழில் நுட்பத்தின் பயன்பாடு ஆகியவற்றில் கட்டாயம் இந்த இரு மாநிலங்களை விடவும் குஜராத் மிகச் சிறப்பாக உள்ளது.
4. குஜராத் எப்போதுமே தொழில் வளர்ச்சியிலும் வர்த்தகத்திலும் முன்னேறிய மாநிலமாகத் தான் உள்ளது. மோதி பெரிதாக என்ன செய்தார்?
எப்போதுமே என்பது தவறு. 1980களின் நடுப்பகுதி வரை குஜராத்தில் ஓரளவு நல்ல மாநில அரசாட்சி இருந்த்து. பிறகு சீரழிவுக் காலம் தொடங்கியது. 1960ல் தனி மாநிலமாக ஆன குஜராத், 1991ல் முதன்முறையாக நிதிப் பற்றாக்குறை மாநிலம் என்று தன்னை அறிவிக்கும் நிலை ஏற்பட்டது. வளர்ச்சி குன்றிய தேக்க நிலை 1998 வரை நீடித்தது. பாஜக ஆட்சியைப் பிடித்து கேசுபாய் படேல் முதல்வரான உடன் தான் கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. 2001ல் மோதி முதல்வராகப் பதவியேற்கும் போதும் குஜராத்தின் நிலைமை படுமோசமாகத் தான் இருந்தது. மிகப் பெரும் அழிவையும் பொருளாதார சேதத்தையும் ஏற்படுத்திய கட்ச் பூகம்பமும் அதனுடன் சேர்ந்து கொண்டது.
ஆனால் மோதியின் அயராத உழைப்பினாலும், சிறந்த அரசாட்சி செயல்பாடுகளாலும், 1991க்குப் பிறகு 2006ல் தான் குஜராத் நிதி மிகை மாநிலமாக ஆகியது. 2007 முதல் 2012 வரையிலான காலத்தில் வருடந்தோறும் சராசரியாக 12 சதவீதம் குஜராத்தின் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. எந்த அளவீட்டை வைத்துப் பார்த்தாலும், இது ஒரு அசாதாரணமான சாதனை. மின்சக்தி, எரிசக்தி, விவசாயம், தொழில் உற்பத்தி என்று எல்லாத் துறைகளையும் தழுவியதாக இந்த வளர்ச்சி உள்ளது.
இது முழுக்க முழுக்க மோதியின் அரசியல் தலைமை மற்றும் உழைப்பால் விளைந்தது தான். அப்படி இல்லை என்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல.
5. மோதி ஆட்சிக்கு என்று தனிச்சிறப்பு ஏதாவது இருக்கிறதா என்ன?  மோதியின் மாடலுக்கும்,  தமிழ்நாடு மாடல், மகாராஷ்டிரா மாடல் போன்ற வளர்ச்சியடைந்த மாநிலங்களின் ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்?
மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. அரசாட்சியின் தரம், அரசின் தொலைநோக்குப் பார்வை, அரசு செயல்படும் முறை இந்த மூன்றிலும் மோதியின் குஜராத் மாடல், மற்ற மாநிலங்களில் இருந்து தனித்து நிற்கிறது.  சொல்லப் போனால், மற்ற மாநிலங்களின் விஷயத்தில் “மாடல்” என்று சொல்லத் தக்க வகையில் அந்த மாநில அரசுகளின் செயல்பாடுகள் இருக்கிறதா, ஏதேனும் புதிய சிந்தனை இருக்கிறதா என்பதே சந்தேகம்.
ஒரு உதாரணத்திற்காக, மின்சாரத்தை எடுத்துக் கொள்வோம்.
மகாரஷ்டிரத்திலும் தமிழ்நாட்டிலும் மின்சாரத் துறை என்பதே அரசியல் தரகு வேலைகளுக்கும், வாக்கு வங்கிகளை குஷிப் படுத்தவும் மட்டுமே பயன்படுத்தப் படுகிறது. ஆனால், மோதியின் குஜராத்தில், அது நல்லாட்சிக்கான ஒரு உதாரணமாக விளங்குகிறது.  குஜராத் ஊர்ஜா விகாஸ் நிகம் லிமிடட் (GUVNL) என்று புதிய பெயர் சூட்டப் பட்டுள்ள குஜராத் மின் வாரியம், இவ்வளவு காலமாக சேர்த்து வைத்திருந்த 2500 கோடி ரூபாய்கள் (2003ம் ஆண்டுக் கணக்குப் படி) நஷ்டத்தை துடைத்தெறிந்து விட்டு, கடந்த சில வருடங்களாக 500 கோடி ரூபாய்களுக்கு மேல் லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறி இருக்கிறது.
மின்சாரத் திருட்டை  முற்றிலுமாக ஒழித்ததும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்கிக் கெடுக்காமல் உரிய கட்டணத்தைச் செலுத்த வைத்துக் காட்டியதுமல்லாமல் அதற்கு அடுத்த தேர்தலில் வெல்லவும் செய்தார் மோதி.  ஆனால், மகாராஷ்டிர, தமிழ்நாடு மாநில ஆட்சியாளர்களுக்கு இதில்  கால் பங்கு நடவடிக்கைகளைக் கூட எடுக்கும் முனைப்பும், வாக்கு வங்கி அரசியலுக்கு சவால் விடும் துணிவும் கிடையாது.
மாநில பொதுத்துறை நிறுவனங்கள் என்பவை வேண்டியவர்களை பதவியில் அமர்த்தவும் சலுகைகள் காட்டவும் மட்டுமே உருவாகியுள்ள சீழ் பிடித்த அமைப்புகளாகத் தான் மற்ற மாநிலங்களில் உள்ளன. ஆனால் மோதியின் குஜராத்தில், பெரும்பாலான பொதுத் துறை நிறுவனங்கள், அரசியல் குறுக்கீடு இல்லாமல், தொழில் நேர்த்தியுடன் மிளிரும் புரஃபஷனல் நிறுவனங்களாக உருமாற்றம் பெற்றுள்ளன.
சத்துணவுத் திட்டம் என்ற ஒரு விஷயத்திற்காக எம்.ஜி.ஆர் என்ற மாநில ஆட்சியாளர் வரலாற்றில் என்றென்றும் நினைவு கூரப் படுவார். இப்படி ஒன்றிரண்டு நல்ல திட்டங்களை செயல்படுத்திய ஆட்சியாளர்கள் எல்லா மாநிலங்களிலும் உண்டு. ஆனால் மோதியின் நல்லாட்சி குஜராத்தில் புரிந்துள்ள சாதனைகள் எண்ணிக்கையிலும் சரி, அளவிலும் சரி, இவை எல்லாவற்றையும் விட மிகப் பெரியவை. அதனால் தான் ஒரு “மாடல்” என்ற அடைமொழிக்கு அவை தகுதியுடையவை ஆகின்றன.
6. ரதன் டாடா, கௌதம் அதானி போன்ற தொழிலதிபர்களுக்கு பிரத்யேக சலுகைகளை வாரி வழங்கினார் மோதி. கார்ப்பரேட்டுகளை அளவுக்கு மீறி ஊக்குவித்தார். அது தானே உண்மை?
ஒரு விஷயத்தை மறக்கக் கூடாது – மோதியின் அரசு அடிப்படையில் ஒரு கொள்கை சார்ந்த அரசு (Policy driven government). சலுகைகளும், அதற்கு இசைந்த அதிகார அடுக்குகளும் வலைப்பின்னல்களும்  அதில் ஊக்குவிக்கப் படுவதில்லை என்பதை மோதி எதிர்ப்பாளர்களே கூட பதிவு செய்திருக்கிறார்கள்.
பாஜகவுக்கு பெரிய அளவில் நிதி வழங்கும் கார்பரேட்கள் கூட, அவர்களது செயல்பாடுகள் அரசின் தொழில் கொள்கைகளுக்கு விரோதமாக இருக்கும் பட்சத்தில் மோதியிடம் இருந்து எந்த சலுகைகளையும் பெற்று விட முடியாது என்று  உதய் மாஹூர்கர் தனது நூலில் பதிவு செய்கிறார்.  இதே கொள்கையை மோதி மத்திய அரசிலும் கடைப்பிடிக்கும் போது, தில்லி தர்பாரில் அரசியல் “நட்புகள்”, சலுகைகள், பிரத்யேக கவனிப்புகளின் வாயிலாகவே ஊதிப்பெருத்து வந்த ஊழல் சாம்ராஜ்யம் நிலைகுலைந்து அழியக் கூடும். அதனால் தான் மோடி பிரதமராக வருவதைக் குறித்து ஏற்கனவே அங்கு பெரிய கிலி பிடித்திருக்கிறது.
டாடா நேனோ தொழிற்சாலை மட்டும் குஜராத்துக்கு வரவில்லை. அதைத் தொடர்ந்து ஃபோர்ட், மாருதி மற்றும் பல வாகன உற்பத்தியாளர்களும் வந்து கொண்டிருக்கிறார்கள். திட்டமிட்ட தொழில் வளர்ச்சிக் கொள்கை தான் இதை சாத்தியமாக்குகிறது.  அதே போலத் தான் அதானி குழுமத்தின் “முந்த்ரா (Mundra)  தொழில் வளாகமும். கற்பனை செய்ய முடியாத அளவில் மிகப் பெரும் எண்ணிக்கையில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை இத்தகைய தொழில் மையங்கள் குஜராத்தில் உருவாக்கியுள்ளன.
tata_nano_factory_sanand
இவ்வளவு கார்பரேட் நிதி குவியும் இடத்தில்  சிறிது கூட ஊழல் நடக்காமல் இருக்குமா என்று கேட்கலாம்.. ஆங்காங்கு சிறு சிறு ஊழல்கள் நடந்திருக்கலாம்.  ஆனால், வளர்ச்சியையும் மக்கள் நலனையும் பாதிக்கும் அளவிலான பெரிய ஊழல்களோ விதி மீறல்களோ கட்டாயம் நடக்கவே இல்லை என்று அடித்துச் சொல்ல முடியும். நடந்திருந்தால் காங்கிரஸ் கடுவாய்களும், ஊடக ஓநாய்களும் சும்மா இருந்திருப்பார்களா என்ன, கடித்துக் குதறியிருப்பார்களே.. குறிப்பாக, கூரை இடிந்து விழும் நிலையில் ஜீவனை வைத்துக் கொண்டு, ஒவ்வொரு மழை நாளிலும் ஒழுகிக் கொண்டிருக்கும், “தரமற்ற கட்டுமானங்கள்” வரிசையில் உலகப்புகழ் பெற்று விட்ட சென்னை விமான நிலையம் போல முற்றிப் போன ஊழல் எல்லாம் மோதியின் குஜராத்தில் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது. நர்மதை நதியின் நீர்ப்படுகை முழுவதும் சோலார் தகடுகளைப் பதித்தது மூதல், நூற்றுக் கணக்கான கிலோமீட்டர்கள் மாநில நெடுஞ்சாலைகள் போட்டது வரை மோதியின் குஜராத் அரசு மாபெரும் திட்டங்களை செய்து முடித்து, கட்டுமானங்களை உருவாக்கியுள்ளது. எந்தத் திட்டம்  குறித்தும் இதுவரை  குறைந்த தரம் கொண்டது, அக்கிரமமாக செய்யப் பட்டது, கொள்ளையடிக்கப் பட்டது என்ற புகார்கள்  இல்லை. இது ஒன்றே போதும், கார்பரேட்டுகளும், முதலாளிகளும்  அநியாயமாக மக்களுக்கு தீங்கிழைப்பதற்கு ஒரு போதும்  அனுமதிக்கப் படவில்லை என்பதற்கு.
7. மோதியின் குஜராத் மாடல் பணக்காரர்களுக்கு, நடுத்தர மக்களுக்கு மட்டுமே நன்மை செய்யும். கீழ்நடுத்தர மக்களுக்கும் ஏழைகளுக்கும் அதில் ஒன்றுமே கிடையாது என்று கூறப் படுகிறதே..
இது சிறிதும் ஆதாரமற்ற கூற்று. கடந்த எட்டு ஆண்டுகளில், குஜராத்தின் சராசரி தனி நபர் வருமானம் ஐந்து மடங்கு உயர்ந்துள்ளது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது.  மாநில மக்கள் தொகையில் வேலைவாய்ப்பின்மை ஒரு சதவீத அளவிலேயே உள்ளது. வேலை வாய்ப்பு உருவாக்கத்தில் இந்த மற்ற எல்லா மாநிலங்களையும் விட மோதியின் குஜராத் முன்னணியில் உள்ளது என்பது மத்திய அரசின் கணக்கீட்டு நிறுவனங்கள் உட்பட அனைவரும் ஒத்துக் கொள்ளும் விஷயம்.
முக்கியமாக, வளர்ச்சி செலவினங்கள் (development expenditure) , வளர்ச்சிக்குத் தொடர்பில்லாத செலவினங்கள் (non development expenditure ) இடையேயான விகிதம் மிக ஆரோக்கியமாக உயர்ந்துள்ளது. சமூக நலத் திட்டங்களுக்காக செலவழிக்கப் படும் அரசுப் பணம், மற்ற பணிகளுக்காக செலவிடப் படுவதை விட அதிகம் என்பதையே இது காட்டுகிறது.  பொதுவாக மோதியை எதிர்ப்பதாகக் கூறப் படும் பல என்.ஜி.ஓ அமைப்புகள் கூட, குஜராத் அரசின் “வனபந்து” பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தைப் புகழ்ந்து, இந்தியா முழுவதும் அந்த திட்டம் விஸ்தரிக்கப் படவேண்டும் என்று  பரிந்துரைக்கிறார்கள்.
இவை தான் மோதியின் குஜராத் மாடல் பற்றிய உண்மைகள்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, கட்ச் முதல் கௌஹாத்தி வரை உள்ள வாக்காளர்கள்,  மோதி என்ற உன்னதத் தலைவரை, பாரத அன்னையின் தவப் புதல்வரை நேசிக்கிறார்கள். அவர் பிரதமராகி இதே போன்ற நல்லாட்சி நாடு முழுவதும் மலர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
தமிழக வாக்காளர்களே, நீங்களும் அதற்கு விதிவிலக்கல்ல.
வரும் ஏப்ரல்-24 அந்த நினைவுடன் தான் நீங்கள் வாக்களிக்கப் போகிறீர்கள்.
வரும் மே-16 அந்த நம்பிக்கையைக் கட்டாயம் நிரூபிக்கவும் போகிறது.
 (முற்றும்)

 மேலும் படிக்க-http://othisaivu.wordpress.com/

நன்றி-http://www.tamilhindu.com/2014/04/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93-2/

மேலும் படிக்க-
இந்தியப் பாராளுமன்றம் “தில்லி தர்பார்” என்றே பொதுவாக அறியப் படுகிறது. தில்லியில் தான் மத்திய அரசின் ஒட்டுமொத்த அதிகார வர்க்கங்கள், அமைச்சகங்கள், அரசியல் தரகர்கள் எல்லாமே மையம் கொண்டிருப்பது. பூகோள ரீதியாக தில்லி இருப்பது ஓரிடத்தில் தான். ஆனால் இந்திய நிலப்பரப்பின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் அதன் மாயக்கரம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது ஒரு பொதுவான அரசியல் நம்பிக்கை.
ஆனால், இந்தப் பாராளுமன்றத் தேர்தலில், நாட்டின் அரசியல் மையம் தில்லியிலிருந்து குஜராத்துக்கு இடம் பெயர்ந்து விட்டதோ என்று சொல்லுமளவுக்கு குஜராத் பற்றிய பேச்சுக்களும் விவாதங்களும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.  மோதி ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இருவர் கைகளாலும் ஓசைப்படும் மத்தளமாகி விட்டது குஜராத். தேசிய அரசியலின் மையத்தில், அதிகார வர்க்கத்தினரின் மேல்பூச்சு வாசத்திற்குப் பதிலாக உண்மையான இந்திய மண்ணின் மணம் வீசப் போவதற்கான அறிகுறி இது என்று தவ்லீன் சிங் போன்ற அரசியல் நோக்கர்கள் இதைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள்.
“குஜராத்” என்ற பெயரை மதக் கலவரங்கள், சமூக மோதல்கள், வன்முறைகளின் குறியீடாக தேசத்திலும் உலக அரங்கிலும் முன் நிறுத்த மீண்டும் மீண்டும் காங்கிரசும், எதிர்க்கட்சிகளும், போலி அறிவுஜீவிகளும், ஊடக சதிகாரர்களும் தொடர்ந்து முயன்றனர். ஆனால் பல்வேறு புலன் விசாரணைகளும் நீதிமன்றத் தீர்ப்புகளும் உண்மையை ஓங்கி அறைந்து வெளிக்கொணர்ந்தன. அந்த முயற்சிகள் மண்ணைக் கவ்வின. இப்போது “குஜராத்” பற்றிய கருத்துரைகள் அனைத்துமே வளர்ச்சி, பொருளாதாரம், சமூகநலத் திட்டங்கள், தொழில்துறை ஆகிய விஷயங்களையே சுற்றி வருகின்றன. வளர்ச்சி பற்றிய சொல்லாடல்களுக்கும், விவாதங்களுக்கும்  ஒரு அளவீடாகவே ஆகியிருக்கிறது, மோதியின் “குஜராத் மாடல்”. இந்த திசைமாற்றம் நரேந்திர மோதியின் தலைமையிலான பாஜக, களத்தில் அடைந்துள்ள முதல் வெற்றி.

நரேந்திர மோதி நாட்டின் தலைமைப் பொறுப்பேற்கத் தகுதியானவர் என்பதை அழுத்தமாக சொல்வதற்காக, அதற்கான நிரூபணமாகத் தான், குஜராத்தில் அவர் செய்த சாதனைகளும், கொண்டு வந்துள்ள மாற்றங்களும் பரப்புரை செய்யப் படுகின்றன. இதன் நோக்கம் மற்ற மாநிலங்களை மட்டம் தட்டுவதோ அல்லது அவற்றில் எந்த வளர்ச்சியுமே ஏற்படவில்லை என்று சொல்வதோ அல்ல.  குஜராத் எட்ட வேண்டிய எல்லா இலக்குகளையும் எட்டி விட்டது, அது எந்தக் குறைகளும் அற்ற சொர்க்க பூமி என்று சொல்வதல்ல. ஆனால், மேம்போக்காக ஒரு சில புள்ளி விவரங்களைப் போட்டுக் காட்டி வெட்டி சவடால்கள் விடும் எதிர்ப்பாளர்களின் ஒரே நோக்கம் மோதியின் ஆட்சித் திறன் பற்றிய உண்மைகளை இருட்டடிப்பது. குறுகிய காலத்தில் மோதியின் தலைமை நிகழ்த்தியுள்ள மகத்தான சாதனைகள் பற்றிய உண்மைகள் மக்களின் மனதில் பதிவதைத் தடுப்பது. தங்கள் தோல்விகளை மறைப்பது. எந்தவொரு தொலைநோக்குத் திட்டமும் இல்லாமல் வெட்டி அராஜக அரசியல் மட்டுமே நடத்தினாலும் கூட, முன்பே பல்வேறு காரணங்களால் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களின் இயல்பான தொடர்ச்சியை, ஏதோ தாங்கள் செய்த பெரிய சாதனை போல காட்டிக் கொண்டிருப்பது.
ஒரு புறம் காங்கிரசின் மெகா ஊழல்கள், கடும் தோல்விகள். மறுபுறம் பாஜகவின் நல்லாட்சி நிரூபணங்கள். தொலைநோக்கு செயல்திட்டங்கள். இது தான் இந்தத் தேர்தலில் மையமாக உள்ள  மோதல்.  இதைப் பேசுவதற்குப் பதிலாக, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தின் ஒவ்வொரு விஷயத்துடன் குஜராத் வளர்ச்சியை ஒப்பிட்டு, இங்க பார் குஜராத் ஒரு சதவீதம் கம்மி, அங்க பார், குஜராத் இரண்டு சதவீதம் கம்மி என்று சொல்வதன் மூலம், இவர்கள் என்ன சாதிக்க நினைக்கிறார்கள்?  நடப்பது மாநிலங்களுக்கு இடையேயான போட்டி அல்ல,  பாராளுமன்ற தேர்தல். தேசியத் தலைமையை தேர்வு செய்வதற்கான போட்டி.  இப்படி செய்வதன் மூலம் மற்ற மாநில மக்களை உசுப்பி விட்டு, குஜராத்தை விட நாங்கள் இளப்பமா என்ன என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, மோதி அலையை மழுங்கடித்து விடலாம் என்று இவர்கள் கணக்குப் போட்டால், அது கட்டாயம் நிறைவேறப் போவதில்லை. அது இவர்கள் மீதே பூமராங்க் ஆகி திருப்பி அடிக்கப் போகிறது.
ஏனென்றால், இந்தியாவின் பொதுஜன கருத்து வெளி என்பது  புள்ளி விவரங்களைப் போட்டு விளையாடும் சாதுர்யம் மட்டும் அல்ல. ஊடகங்களும் பரப்புரைகளும் சொல்லும் செய்திகளை தங்கள் அனுபவங்கள், நேரடியான தகவல் தொடர்புகள் மூலம் உறுதி செய்து கொண்டு தான் பெரும்பாலான மக்கள் தங்கள் அரசியல் தேர்வுகளை செய்வார்கள். குஜராத்தை விட தமிழகம் முன்னேறிய மாநிலம் என்று ஜெயலலிதா மேடைகளில்  கெக்கலிக்கிறார். அந்தக் கெக்கலிப்புக்குப் பின் உள்ளவை அரைகுறை உண்மைகள் என்பதையும், மிகச் சில துறைகளில் ஏற்பட்டுள்ள ஒரு நீண்டகால வளர்ச்சியைத் தவிர்த்து மற்றதெல்லாம் வெறும்  பம்மாத்து என்பதையும் தமிழக வாக்காளர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.  இதுவரை தமிழகத்தில் நடந்த எல்லா கருத்துக் கணிப்புகளிலும்  60 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் மோதி பிரதமராக வேண்டும் என்று கூறியிருப்பது யாரோ செய்தி சதி அல்ல. தானைத் தலைவர் சொல்வது போல தமிழர்கள் சோற்றால் அடித்த பிண்டங்களும் அல்ல. ஜெயலலிதா கடந்த கால சீரழிவு அரசியலின், கழக அரசியலின் ஒரு எச்சம்; ஆனால் மோதி எதிர்கால இந்தியாவின் வளர்ச்சியை மையப்  படுத்திய அரசியலின் ஒளிக்கீற்று என்று மக்களுக்குத் தெரிந்திருக்கிறது.

ஜெயலலிதா சொல்லும் வளர்ச்சிக் கதைகளுக்கும் குஜராத் மாடல் வளர்ச்சிக்கும் அடிப்படையிலேயே வித்தியாசம் உள்ளது. அந்தக் கதைகளின் உண்மையான ஹீரோக்கள் ஆர்.வெங்கட்ராமன், காமராஜர், எம்.ஜி.ஆர் போன்றவர்கள் தானே அன்றி, ஜெயலலிதா அல்ல. அந்த வளர்ச்சிக் கதைகளின் ஸ்கிரிப்டில் டாஸ்மாக் கடைகள், இலவசங்கள், எதேச்சாதிகாரம், மின் பற்றாக்குறை, விவசாய அழிவு, சகிக்க முடியாத ஊழல்கள் என்று பல மசாலாக்களை சேர்த்து வீழ்ச்சிக் கதையாக மாற்றிக் கொண்டிருக்கும் இயக்குனர் கதாசிரியர்  ஹீரோயின் தான் ஜெயலலிதா. மோதியின் வளர்ச்சிக் கொள்கைகளை விமர்சிக்க ஜெயலலிதாவுக்கு உள்ள தகுதியின் இலட்சணம் என்ன என்று தமிழக மக்கள் அறிவார்கள். அம்மாவே இப்படி என்னும் போது கலைஞர்களையும், தளபதிகளையும் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
சர். சி வி.ராமன் கண்டுபிடித்ததை “ராமன் எஃபெக்ட்” என்றும், ஜெய்ப்பூரில் வடிவமைக்கப் பட்ட செயற்கைக் கால்களை “ஜெய்ப்பூர் கால்கள்” என்றும் சொல்வது போல, குஜராத்தில் நடைமுறைப் படுத்தியதால் “குஜராத் மாடல்” என்று அழைக்கிறார்கள். மற்றபடி, மோதியின், பாஜகவின் நல்லாட்சி பற்றிய கொள்கைகளும் திட்டங்களும் இந்தியா முழுவதற்கும் பொருத்தமானவையும் ஏற்றவையும் ஆகும். இவை வெறும் கோட்பாடுகளோ, தேர்தல் கோஷங்களோ அல்ல. உண்மையில்  இந்த நல்லாட்சிக் கொள்கைகளை குஜராத்தில் பரிசோதனை செய்து, அதில் உள்ள குற்றம் குறைகளைக் களைந்து மேலும் பல நல்ல அம்சங்களையும் சேர்த்து ஒரு செயல்திட்டமாக மோதி முன்வைப்பது எவ்வளவு அறிவியல் பூர்வமானது என்று யோசித்துப் பாருங்கள். மோதிக்கு ஒரு வாய்ப்பளித்தால், இந்த நல்லாட்சியின் பலனை ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும், ஒவ்வொரு மாநிலமும் அனுபவிக்கும்.  மோதி பிரதமராகவே கூடாது என்று வெறுப்புடனும் வன்மத்துடன் கையெழுத்துப் போட்டு கோரிக்கை விடுக்கும் அறிவுஜீவி, எழுத்தாளர், சிந்தனையாளர் பூர்ஷ்வாக்களுக்கும் அந்த நல்லாட்சியின் பலன்கள் கிடைக்கும். இடைவெட்டு இல்லாத 24 மணி மின்சாரத்தில், இன்னும் ஜோராக பெரிதாக எப்படி மோதி மீது வெறுப்பு கக்குவது, மக்களை முட்டாளாக்குவது என்று அவர்கள் யோசிக்கலாம்.
  • மோதி அரசின் பொருளாதாரக் கொள்கைகளை ஆராய்ச்சி செய்து மோதினாமிக்ஸ் (Modinomics) என்ற புத்தகத்தை சமீர் கோச்சார் எழுதியிருக்கிறார்.  இவர் Skoch  Group  தொழில் குழுமத்தின் தலைவர் சிறந்த பொருளாதார நிபுணர். அனைவரையும் அரவணைக்கும் பொருளாதாரம் (Inclusive Economics),  அனைவரையும் அரவணைக்கும் அரசாட்சி (Inclusive Governance) என்ற இரண்டும் தான் மோதினாமிக்ஸின் தாரக மந்திரங்கள் என்பதை விரிவாக இந்தப் புத்தகத்தில் பல ஆதாரங்களுடன் விளக்குகிறார். பார்க்க: http://modinomics.net/
  • இந்தியா டுடே இதழின் மூத்த பத்திரிகையாளர் உதய் மாஹூர்கர் எழுதி அண்மையில் வெளிவந்துள்ள Centrestage: Inside the Narendra Modi Model of Governance என்ற புத்தகம்,  மோதி அரசின் சாதனைகளைப் பற்றியதாக  மட்டுமல்லாமல், சிறு குறைகள், இன்னும் நன்றாக செயல்பட வேண்டிய துறைகள் என்பதைப் பற்றிய நடுநிலையான விமர்சனமாகவும் அமைந்துள்ளது.
*********
மோதியின் குஜராத் மாடல் குறித்து பொதுவாக எழுப்படும் கேள்விகளையும் குற்றச் சாட்டுகளையும் சுருக்கமாகப் பார்க்கலாம்.


1. குஜராத் மாடல் என்பதை எப்படி வரையறை செய்கிறீர்கள்? அதன் முக்கிய அம்சங்கள் என்ன?
இந்தியாவில் இதுவரை  ஒவ்வொரு “பாதிக்கப் பட்ட” சமூகக் குழுக்களையும் தனித்தனியான அலகுகளாகக் கருதி எந்த ஒத்திசைவும் இல்லாமல் தான் பெருமளவு வளர்ச்சித் திட்டங்கள் தீட்டப் பட்டு வந்துள்ளன. இது வாக்கு வங்கிகள் உருவாகவும், நீடிக்கவும் தான் வகை செய்திருக்கிறதே தவிர வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவில்லை, மக்களிடையே எந்தப் பெருமித உணர்வையும் உண்டாக்கவில்லை. இதிலிருந்து மாறுபட்டு, நல்லாட்சி (good governance) மூலமாக, அனைத்துத் தரப்பினரையும் சென்று சேரும் வளர்ச்சி என்பது தான் குஜராத் மாடல்.
சமூகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதரிடம் உறைந்துள்ள ஆற்றல் குறித்த சுய பெருமித உணர்வை ஏற்படுத்தி, அதை நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியுடன் இணைப்பது மோதியின் குஜராத் மாடல்.
சாமானிய மக்களுக்கு “உதவுவது” அல்ல, அவர்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க எல்லாவிதமான ஊக்கங்களையும் வசதிகளையும் அளிப்பது.
கண்மூடித் தனமான, பொத்தாம் பொதுவான மானியங்களைத் தவிர்த்து, சுகாதாரம், கல்வி போன்ற குறிப்பிட்ட துறைகளில் மட்டும் ஏழை மக்களுக்கு உண்மையிலேயே நேரடியாக உதவும் வகையில் மானியங்களைப் பயன்படுத்துவது.
காளையின் கொம்பைப் பிடித்து மடக்குவது போல, வளர்ச்சிக்குத் தடையாக உள்ள பிரசினைகளை ஆயத்த நிலையில் (mission mode) நேரடியாக எதிர்கொள்வது, அவற்றை துரிதமாகத் தீர்ப்பது.
இந்த மாடல் அமல் படுத்தப் பட்ட போது, நடைமுறையில் பல சிக்கல்கள் ஏற்பட்டன. சில விஷயங்களில் நினைத்த அளவு வெற்றி கிடைக்கவில்லை. ஆனால், மோதி அரசு தொடர்ந்து அந்த விஷயங்களில் கூடுதல் கவனமும் அதிக முனைப்பும் செலுத்திக் கொண்டே இருக்கிறது. அது தான் மோதிக்கும் மற்ற அரசியல் தலைமைகளுக்கும் உள்ள வேறுபாடு.
2. சமூக வளர்ச்சியில் குஜராத் மிகவும் பின்தங்கியுள்ளதே.. ?
தீர்க்கவேண்டிய சில பிரசினைகள் உள்ளன என்பது உண்மை தான். ஆனால், “மிகவும் பின் தங்கிய” என்பது எந்த வகையிலும் சரியல்ல.
உதாரணமாக, சிறுகுழந்தைகள் மரண விகிதம் (Infant Mortality Rate), பேறுகாலத் தாய்மார்கள் மரண விகிதம் (Mother Mortality Rate) ஆகியவற்றில் குஜராத் தேசிய அளவிலான சராசரியை விட மோசமாக இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், பழங்குடியினர் மக்கள் தொகை அதிகமாக உள்ள மாநிலம் குஜராத் என்பதை மறந்து விடுகிறார்கள். ஒரிஸ்ஸா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட் போன்ற இத்தகைய மாநிலங்களிலும் அந்த விகிதங்கள் சராசரியை விட மோசமாகத் தான் உள்ளன. இதற்குக் காரணம், பழங்குடியினர், கிராம நகர மக்களைப் போல நெருக்கமாக கூடி வசிக்காமல், தூர தூரமுள்ள பிரதேசங்களில் சிதறி வாழ்கின்றனர். அத்தகைய இடங்களுக்கு மருத்துவ வசதிகளைக் கொண்டு செல்வது மிகவும் கடினம்.  அப்படியும் கூட,  மோதி அரசின் சிறந்த முயற்சிகளால் 2002ல் 60 ஆக இருந்த சிறுகுழந்தைகள் மரண விகிதம், இப்போது 38 ஆகக் குறைந்திருக்கிறது.  மேற்கூறிய மற்ற பழங்குடியினர் அதிகமாக உள்ள மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இது சிறப்பாகவே உள்ளது.
இன்னொரு உதாரணம். ஒரு வருடத்திற்கு 1200க்கும் மேற்பட்ட அடித்தட்டு மக்களின் இதய அறுவை சிகிச்சைகளை இலவசமாக செய்யும் யு.என்.மேத்தா இதய சிகிச்சை மையம் முற்றிலும் அரசு நிதியில் இயங்குகிறது. கடந்த பத்து வருடங்களில் இதற்கான நிதி 2 கோடியிலிருந்து 70 கோடி வரை உயர்த்தப் பட்டுள்ளது.
குஜராத்திற்கே உரித்தான சில காரணங்களால், கிராமப் புறங்களில் மருத்துவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. இதை சரி செய்ய, பிற மாநிலங்களில் இருந்து டாக்டர்களை வரவழைப்பவது உட்பட பல முன்னெடுப்புகளை மோதி தலைமையிலான அரசு செய்து வருகிறது.

தொடரும்--

நன்றி-http://www.tamilhindu.com/2014/04/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93/

 இந்து முன்னணி நிறுவனர் வீரத்துறவி இராமகோபலன்ஜி வரலாறு
பெயர் : திரு.இராமகோபலன்
பிறந்த தேதி - : 19/09/1927
நட்ச்சத்திரம் - :- திருவாதிரை
தந்தை : திரு.இராமசாமி
தாயார் : திருமதி.செல்லம்மாள்
பிற்ந்த ஊர் : சீர்காழி
[திரு.சுப்பிரமணியன்,திரு.சங்கரன்,திரு,நாரயணன்,திரு,மங்களம், திருமதி.கமலா,திருமதி.லலிதா,திரு.ஏகாம்பரம்,திருமதி.லட்சுமி, திருமதி.திரிபுரசுந்தரி,திரு.நடராஜன்,திரு.கோபால்ஜீ] சீர்காழி லூத்ரன் மிஷ்ன்ஸ் ஸ்கூலில் பள்ளிப்படிப்பை முடித்தார். பி.இ படிக்க ஆசைக்கொண்டார்.இடம் கிடைக்காத்தால் அதற்க்கு சம்மான டிப்ளமோ படித்து ஏ.ஐ.எம்.ஈ. படிக்க விருப்பம் கொண்டார்.எனவே 1944ல் சென்னை புரசைவாக்கம்-செங்கல்வராயன் டெல்னிக்கல் இன்ஷ்டியுட்ல் சேர்ந்து டிப்ளமோ எலக்ட்ரிக்கல் படித்து வந்தார, அப்போது முத்துரமணியுடன் நட்பு ஏற்ப்பட்டது.இருவரும் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த போது மாலை 5 மணிக்கு விளையாட்டை நிறுத்திவிட்டு முத்துரமணி புறப்பட திரு.கோபால்ஜீ அவர்கள் விளையாட்டை நிறுத்திவிட்டு எங்கே செல்கிறாய்? எனக்கேட்டார்.ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு என்றார் முத்துரமணி. ஆர்.எஸ்.எஸ்ன்னா என்ன? என்க்கேட்டார் திரு.கோபால்ஜீ.வந்துபார் என்க்கூறி சென்னை கோபாலபுரம் நகராட்சி மைதானத்தில் நடந்த ஷாகாவுக்கு அழைத்துச்சென்றார் முத்துரமணி. சிந்து மகாணத்தில் இருந்து அடித்துவ்ரட்டப்பட்ட இந்து குடும்பங்களை சென்னை ஆவடியில் பார்வையிட்டு இதைப்போல் இந்துக்கள் வேறெங்கும் பாதிக்கப்படாமல் இருக்க ஆர்.எஸ்.எஸ்.போன்ற அமைப்பு தேவை என் எண்ணி,அதில் தன்னால் ஆன சேவை செய்யவும் விரும்பினார்.அதன்படி சங்க வேலையில் ஈடுப்பட்டு கொண்டே கல்லூரிபடிப்பையும் முடித்தார்
கல்லூரிப்படிப்பினை முடித்தவுடன் சங்கத்திற்க்காக தான் முழு நேரம் ஊழியனாக முடிவெடுத்து தன் விருப்பத்தை சங்க அதிகாரிகளிடம் தெரிவித்தார்.சங்க அதிகாரிகள் முதலில் வேலைக்கு சென்று சம்பாதித்து வா,அதன் பிறகு ராஜினாமா செய்துவிட்டு சங்கப்பணிக்கு வா என உத்தரவிட்டனர்.
அதன்படி குடியாத்ததில் தனியார் மின்சார நிலய்த்தில் வேலை. குடியாத்ததிலும் சங்கப்பணி தொடர வீட்டிற்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, குடும்பத்தினர் சென்னை வீட்டிற்க்கு அழைத்தனர்.சென்னை வந்த பின்பும் சங்கப்பணி தொடர பலமுறை அறைகளில் வைத்து பூட்டினார்கள்.தினமும் வீட்டில் போராட்டம் ஆகியது.1947 – 1947 ம் ஆண்டு பிரச்சாரக் ஆக சங்க அனுமதி கிடைத்தது.
முதல் சங்கப்பணி கும்பக்கோணத்தில் ஒரு வாரம் நடைப்பெற்றது.இரண்டாவது சங்கப்பணி திருநெல்வேலி நகர்,பாளையங்கோட்டை நகர் என தொடர்ந்து கொண்டிருந்த வேளையில் சங்கம் தடை செய்யப்பட்டது.சங்கம் தடை செய்யப்பட்ட காலத்தில் வேலூர் சிறையில் 4 மாதம் அடைக்கப்பட்டார்.ஆள்கொணர்வு மனு செய்யப்பட்டு விடுதலை ஆனார்.
சங்கத்தில் வேலைக்கு போகச் சொல்ல மெட்ராஸ் எலக்ட்ரிக்கல் சிஸ்டத்தில் ஜூனியர் என்ஜீனியராக 4 மாதம் வேலை செய்தார்.சங்கம் மீண்டும் பிரச்சாரக் ஆக வரச்சொல்ல வேலையை ராஜினாமா செய்தார்.ஒருங்கினைந்த தமிழகத்தில் பாலாக்காடு தாலுகா பிரச்சாராக் ஆக பதவி வகித்தார்.அங்கு மா.ஈஸ்வரமேனன் சங்கசாலக்.பசுவதை தடை சட்டத்தை அமல்படுத்த்க்கோரி கிராமங்கள் தோறும் கையெழுத்து வாங்கும் பொறுப்பை சிறப்பாக செய்தார்.இதனை தொடர்ந்து மதுரை விபாக் பிரச்சாரக் ஆக மாற்றப்பட்டார்.
திரு.பரம பூஜ்ய குருஜீயின் 51 வது குருபூஜையை மதுரையில்பெருந்திரளான மக்கள் கூட்டத்தில் நிகழ்த்தி காட்டினார்.இந்த கூட்டத்திற்க்கு பசும்பொன் தேவர் திருமகனார் தலைமை தாங்கினார்.மீண்டும் சென்னையில் விபாக் பிரச்சாரக்காக் மாற்றப்பட்டு திரு. பரம பூஜ்ய குருஜீயின் தமிழக விஜயத்தின் போது குருஜீயின் உரைகளை மொழிப்பெயர்த்து குருஜீயின் ஒவ்வொரு அசைவுகளையும் அறிந்து கொண்டார்.
1980 ஆண்டு ஜூன் மாதம் சங்கத்தின் மாநில குழு கூட்டம் கரூரில் நடைபெற்றது.விருதுநகர் பக்கத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்தவர்களை மதம் மாற்றப்போவதாக கர்நாடகத்தில் இருந்து ஒரு கடிதம் திரு சூருஜீக்கு வந்தது
அந்தக்காலக்கட்டத்தில் மீனாட்சிபுரத்தில் மதமாற்றம் நடந்து பெரும் குழப்பங்கள் தமிழகத்தில் நிலவிய நேரம்.இதன் நடுவில் கன்னியாகுமரி மாவட்டத்தை கன்னிமேரி மாவட்டம்மாக மாற்ற முயற்சி நடந்தது.அதற்க்கான ஆதாரத்தை தேடும்போது கிறிஸ்த்தவர்கள் தங்களது சர்ச்சில் சொல்லி தங்களுக்கு எங்கிருந்து எல்லாம் கடிதம்
வருகிறதோ அதிலெல்லாம் கன்னிமேரி மாவட்டம் என எழுதி அனுபச்சொன்னார்கள்.அவ்வாறே கடிதங்களும் வந்துக்கொண்டிருந்தது.
இது நமக்கு தகவலை உறுதி படுத்தியது.இராமநாதபுரத்தில் ஒரு லட்சம் பேரை மதம் மாற்றப்போவதாகவும்,அவர்களின் பெயர்களையும் வெளியிட்டார்கள்,இவை அனைத்தும் வெளீப்படையாக நடந்தன. சேலத்தில் திராவிடர் கழகத்தின் தலைவர் ஈ.வெ.ரா. தூண்டுதலால் விநாயகர் சிலைகள் துடப்பத்தால் அடிக்கப்பட்டு தெரு முச்சந்தியில் வைத்து உடக்கப்பட்டது.இந்த இந்துக்களை அவமானப்படுத்தும் நிகழ்ச்சிகளை தடுக்கவும்,இந்துக்களுக்காக வாதாட,போராட,பரிந்து பேச ஒரு இயக்கம் தேவை என் எண்ணியது சங்கம்.
கரூர் கூடிய மாநில குழு கூட்டம் இயக்கத்திற்க்கான பொறுப்பை திரு.கோபால்ஜீயிடம் தந்தது.இந்து ஆலயப்பணிக்காக நிறைய போராடி இருக்கிறார்.அவர் இந்து மக்கள் முன்னனி என்ற அமைப்பை நடத்தி வந்தார்.அதன் பெயரை சுருக்கி இந்து முன்னனி என வைத்தால் மக்கள் மனதில் பதியும் என் எண்ணி சங்க அதிகாரிகளிடம் அனுமதி கேட்க்கப்பட்டது. அனுமதி தரப்பட்டதுடன் ரூ.35 கொடுத்து இயக்கத்தை உருவாக்கி கட்டமைக்கும் பொறுப்புடன் கன்னியாகுமரி அனுப்பிவைக்க்ப்பட்டார் கோபால்ஜீ.அன்று முதல் இன்று வரை 87 வயதிலும் ஓய்வில்லாமல் சுற்றுபயணம் மேற்கொண்டு இந்துக்களுக்காக பல சாதனைகள் படைத்து வருகிறார்,

Saturday, 19 April 2014

மத்தியில் நிலையான ஆட்சி அமைய தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றார் பெரம்பலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பாரிவேந்தர் (எ) டி.ஆர். பச்சமுத்து.
v.kalathur வ.களத்தூரில் பாரிவேந்தர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்திற்குள்பட்ட அனுக்கூர், அ.குடிக்காடு, வி.ஆர்.எஸ். புரம், வல்லாபுரம், தேவையூர், ரஞ்சன்குடி, மங்கலம், சின்னாறு, எறையூர். நெறிக்குறவர் காலனி, அயன்பேரையூர், தைக்கால், திருவாளந்துறை, அகரம், மில்லத் நகர், வண்ணாரம்பூண்டி, வி.களத்தூர், பசும்பலூர், வெள்ளுவாடி காலனி, காரியானூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் மேலும் பேசியது:
தமிழகத்தில் அரசு மதுக் கடைகளை அதிகளவில் திறந்து வைத்ததே திராவிடக் கட்சிகளின் சாதனையாகும்.
 மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயித்து விவசாயிகள், இளைஞர், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தையும் கெடுத்துவிட்டனர்.
தமிழகத்தில் பாஜக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி, சட்டப்பேரவை தேர்தலிலும் தொடரும். திமுக, அதிமுகவுக்கு மாற்று அணி இல்லாமல், அவர்களுக்கே மாறி,மாறி வாக்களித்த வாக்காளர்கள், இந்த தேர்தலில் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.
மத்தியில் நிலையான, நேர்மையான, ஊழலற்ற ஆட்சி அமையவும், மக்கள் நலத் திட்டங்களை உடனடியாக நிறைவேற்றவும் தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார் அவர்.
தேமுதிக மாவட்டச் செயலர் துரை. காமராஜ், பாமக மாவட்டச் செயலர் செந்தில்குமார், பாஜக மாவட்டத் தலைவர் சி. சந்திரசேகரன், மதிமுக மாவட்டச் செயலர் செ. துரைராஜ், தேமுதிக வேப்பந்தட்டை ஒன்றியச் செயலர் துரை. சிவாஐயப்பன், மாவட்டத் துணைச் செயலர் கங்காதரன், பொதுக்குழு உறுப்பினர் அழகுதுரை, செயற்குழு உறுப்பினர் செல்லப்பிள்ளை, அணி செயலர்கள் இளையராஜா, சிதம்பரம், மாவட்டப் பொருளாளர் சீனி. வெங்கடேசன், மாவட்ட துணைச் செயலர் கண்ணுசாமி, ஐஜேகே மாநில அமைப்பு செயலர் காமராஜ், வழக்குரைஞர் பிரிவு மாநிலச் செயலர் பி. அன்புதுரை உள்பட பலர் பங்கேற்றனர்.
v.kalathur வ.களத்தூர் பகுதிகளில் பெரம்பலூர் மக்களவை பா.ஜ.க கூட்டணி வேட்பாளரும் IJK கட்சி நிறுவனருமான பாரிவேந்தர் இன்று வாக்குசேகரிப்பில்  ஈடுபட்டார்.

v.kalathur பாரிவேந்தரின் வ.களத்தூர் பரப்புரை.
v.kalathur மக்கள் மத்தியில் பாரிவேந்தர்.
v.kalathur வன்னாரம்பூண்டியில் பாரிவேந்தர்.

Friday, 18 April 2014

பெரம்பலூர் மக்களவை தேர்தல் களத்தில்நேரு-ராசாவின் ஆசியோடு களமிறங்கியிருக்கும் சீமானூர் பிரபு,அம்மாவின் மருதைராஜா மற்றும் காங்கிரசின் ராஜசேகரன் ஆகியோருடன் IJK நிறுவன தலைவர் பாரிவேந்தர் என்ற பச்சமுத்து போட்டியில் உள்ளார்.

சமீபத்தில் காலைகதிர் மற்றும் தினமலர் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி போட்டி என்பது பிரபுவுக்கும், பாரிவேந்தருக்கும் இடையில்தான் கடுமையாக உள்ள நிலையில் பாரிவேந்தர் வெற்றிபெற பிரகாசமான் வாய்ப்புகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.

தினமலர் செய்தி

காவிரி ஆறு ஒகேனக்கல் பகுதியில் தமிழ்நாட்டில் நுழைகிறது... ஒகேனக்கல் - அய்யாறு வெள்ளநீர் கால்வாய் இணைப்புத்திட்டத்தின் படி ஒகேனக்கல் முதல் மேட்டூர் அனைக்கட்டுவரை காவிரி ஆற்றின் வடகரையில் கான்கிரிட் சுவர் எழுப்பி 15௦௦௦ கான அடி வெள்ளநீரை கொண்டுவந்து மேட்டூர் அணையில் மின்சாரம் தயாரிக்கமுடியும். இதற்கென 1௦௦௦௦ கன அடிநீர் செலவாகும்.

மீதமுள்ள 5௦௦௦ கன அடி நீரை மேட்டூர் அருகில் கால்வாய் வெட்டி குஞ்சாண்டியூர், ஜலகண்டபுரம், எடப்பாடி, சின்னப்பம்பட்டி, வைகுந்தம் வழியாக மகுடஞ்சாவடியில் சரபங்கா உப நதியில் கொண்டுவந்து இணைக்கப்படும்.

சரபங்கா நதியிலிருந்து மோர்ப்பாலயம், ஆட்டையாம்பட்டி,காளிப்பட்டி, வெண்கலம் மற்றும் முன்றடைப்பு வழியாக கால்வாய் அமைத்து சேலம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாவை பொறியியல் கல்லூரியின் மேற்கே திருமலைப்பட்டிற்கு கொண்டு சென்று ஐயாற்றில் இணைக்கப்படும்.

ஒகேனக்கல் அய்யாறு வெள்ளநீர் கால்வாய் இணைப்புத்திட்டத்தின் மூலம் திருச்சி- பெரம்பலூர் மாவட்ட வட பகுதிகளும், கொல்லிமலைக்கு தெற்கே உள்ள பகுதிகளும் பயனடையும்... குறிப்பாக தொட்டியம், தா.பேட்டை, உப்பிலியபுரம், துறையூர், முசிறி, லால்குடி, மண்ணச்சநல்லூர், புள்ளம்பாடி ஒன்றியங்களின் ஏரி மற்றும் குளங்கள் இத்திட்டத்தின்மூலம் நிரம்புவதோடு, ஆழ்குழாய் கிணறுகளை நம்பியே விவசாயம் செய்யும் இப்பகுதி மக்களுக்கு நிலத்தடிநீர் மட்டம் உயர வழிவகுக்கும்.

பா.ஜ.க வின் தேத்தல் அறிக்கையிலேயே நதிநீர் இணைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் பா.ஜ.கவின் தாமரை சின்னத்தில் போட்டியிடும் பாரிவேந்தர் என்ற பச்சமுதுவால் ஒகேனக்கல்-அய்யாறு வெள்ளநீர் கால்வாய் இணைப்புத்திட்டம் நிறைவேற்றமுடியாத ஒன்றல்ல... பெரம்பலூர் மக்களவை தொகுதி மக்களாகிய நாம் சிந்தித்து வாக்களிக்கவேண்டிய தருணம் இது...

 
IJK வின் தேர்தல் அறிக்கை

பெரம்பலூர் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. வேட்பாளர் பச்சமுத்து, தாமரை சின்னத்துக்கு வாக்கு கேட்டு தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஓட்டு வேட்டை நடத்தி வருகிறார். துறையூர் ஒன்றியம் வெங்கடாசலபுரம் உப்பிலியபுரம் சோபனபுரம் கொப்பம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார். கட்சியின் நிர்வாகிகள் பூசணிக்காயை சுற்றி வரவேற்றனர்.
அப்போது அவர் பேசுகையில், பெரம்பலூர் பின்தங்கிய தொகுதி என்று அனைவரும் பேசி வருகின்றனர். இதற்கு முன்பு இருந்த ஆட்சியாளர்கள் இந்த தொகுதிக்கு எந்த வளர்ச்சியையும் செய்யவில்லை. தொகுதியில் குடிநீர், வேலை வாய்ப்பு என எதையும் செய்யவில்லை. பெரம்பலூர் மக்களின் 20 ஆண்டு கால கனவு திட்டமான அரியலூர் முதல் நாமக்கல் வரையிலான ரெயில் பாதையை இதுவரை நிவேற்றவில்லை என்றும் கூறினார்.
தற்போது ஊடகங்களின் வரும் கருத்துக்கணிப்புகளின் படி பாரதீய ஜனதா கட்சி 275 இடங்களை பெறும் என்றும் வாக்குப் பதிவுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் 350 இடங்களை பெறும் என்றும் கூறினார். இது வரை பாஜகவை பற்றி எதுவும் பேசாமல் இருந்த தமிழக முதல்வர் தற்போது மோடியையும் பா.ஜ.க.வையும் குறைகூறி பேசி வருகிறார். தங்களின் தொகுதி பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் எடுத்துக் கூறி நிதியை பெற்று தொகுதிக்கு வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்றார்.
ஐ.ஜே.கே. மாநிலப்பொதுச் செயலாளர் ஜெசீலன், மாநில அமைப்பு செயலாளர் வெங்கடேஸ், மாவட்ட தலைவர் பரந்தாமன், மாவட்ட செயலாளர் துரைபாரதி, பா.ஜ.க. மாவட்ட பொறுப்பாளர் மாராடிநடராஜன், ஒன்றிய செயலாளர்கள் ராஜு, துரை முருகன், பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் சிதம்பரஜோதி தே.மு.தி.க. பழனிவேல், நகர தலைவர் சுப்புகுரு, சபாபதி, மானோகர், ராஜன், பா.ம.க. மாவட்ட தலைவர் தங்கராசு உட்பட கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

நன்றி-மாலைமலர்.

Thursday, 17 April 2014

வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் பூங்காவனம். இவருக்கு 5 மகள்கள். இவரது இரண்டாவது மகள் விஜயகுமாரி. இவர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தார். விஜயகுமாரி ஷீ கம்பெனியில் வேலைப் பார்த்து வந்துள்ளார். இவருடன் வேலை பார்த்த தோழியின் மூலம் சர்ச் தொடர்பு கிடைக்கப்பெற்று அடிக்கடி சர்ச் சென்றுவந்துள்ளார். இது அவரது அம்மாவிற்கு தெரியவந்த போது அவர்கள் விஜயகுமாரியை கண்டித்துள்ளார். இதன் பிறகு விஜயகுமாரி தன் வீட்டிற்கு தெரியாமல் போய்வருவதை வழக்கமாகிக் கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் 12.03.2014 அன்று வேலைக்குச்செல்வதாக கூறிச் சென்ற விஜயகுமாரி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி அலைந்தபெற்றோர்கள் விஜயகுமாரிக்கு உள்ள சர்ச் தொடர்பால் அங்கும் சென்று விசாரித்துள்ளனர். அப்பொழுது சர்ச்சில் உள்ளவர்கள் விஜயகுமாரியை சென்னை தாம்பரம் பெந்தகோஸ்தே சபை சர்ச்க்கு அனுப்பியுள்ளோம், 2 நாட்கள் கழித்து வந்து விடுவார் என்று கூறியுள்ளனர். ஆனால் 13 நாட்கள் கழித்தே விஜயகுமாரி வேலூர் திரும்பியுள்ளார். வேலூர் வந்தபின்பும் சர்ச்சிலியே இருந்துள்ளார். குடும்பத்தினர் சென்று அழைத்தும் விஜயகுமாரி வர மறுத்துவிட்டார். சர்ச் நிர்வாகத்தினரும் அராஜகப்போக்குடன் விஜயகுமாரியை வீட்டிற்கு அனுப்ப மறுத்துவிட்டனர்.

இச்சூழ்நிலையில் விஜயகுமாரியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றுள்ளனர். அங்கு விஜயகுமாரியின் குடும்பத்தினரை அலட்சியப்படுத்தி அதே சமயத்தில் கிறிஸ்தவர்களை மிகவும் மரியாதையாக நடத்தி அவர்கள் சார்பாக காவல் துறையினர் பேசியதாகவும் விஜயகுமாரியின் சகோதரி நம்மிடையே கூறினார்கள். காவல்நிலையத்தில் விஜயகுமாரியின் குடும்பத்தினர் சொல்வதற்கு செவி மடுக்காமல் “விஜயகுமாரி மேஜர் ஆனதால் அவர்களுக்கு முடிவு எடுக்கும் உரிமை உள்ளது” என்ற பாதிரியின் வாதத்தை ஏற்று விஜயகுமாரியை மீண்டும் கிறிஸ்தவர்களுடன் அனுப்பி விட்டனர். இச்சம்பவம் அறிந்த இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் திரு. மகேஷ் காவல்நிலையம் வந்து விஜயகுமாரியின் குடும்பத்தினருக்காக வாதிட்டுள்ளார். பிரச்சினையை சமாளிக்கவேண்டும் என்பதற்காக புகார் மனு மீது பெண்ணை காணவில்லை என்று ஒரு வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் அனுப்பிவிட்டனர். போலீசாரின் இந்த நடவடிக்கையில் திருப்தி இல்லாததால் சர்ச் முற்றுகை போராட்டத்தை நடத்துவது என்ற முடிவுக்கு வந்தாக என்று திரு. மகேஷ் கூறினார்.
vellore christ small
26.03.2014 அன்று இந்து முன்னணி அமைப்பினர், விஜயகுமாரியின் குடும்பத்தினருடன் சேர்ந்து சர்ச் முற்றுகை போராட்டம் நடத்தினர். பிரச்சினை தீவிரமடைவதை கண்ட காவல்துறை ஆய்வாளர், விஜயகுமாரியை 26.03.2014 மதியத்திற்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதாக வாக்குறுதியளித்து போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இப்போராட்டத்தின் போது பெந்தகோஸ்தே சர்ச்சின் ஊழியரான ஜேக்கப் “நீங்கள் என்ன போராட்டம் நடத்தினாலும், யாரிடம் சென்று புகார் கொடுத்தாலும் உங்களால் விஜயகுமாரியை இங்கிருந்து அழைத்து செல்ல முடியாது. இதே போல், இங்கு வந்த யாரும் இதுவரை திரும்பி சென்றதில்லை” என்று கூறி விஜயகுமாரியின் குடும்பத்தினரை பயமுறுத்தியதாக விஜயகுமாரியின் சகோதரி கூறினார்.

இதற்குள் விஜயகுமாரியை கிறிஸ்தவர்கள் சென்னைக்கு அனுப்பிவிட்டிருந்தனர். இதனால் காவல்துறையினரால் அவர்கள் கூறியபடி மதியத்திற்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்த முடியவில்லை. காவல்துறையினர் ஒரு குழுவை சென்னைக்கு அனுப்பி விஜயகுமாரியை வேலூருக்கு அழைத்து வந்து 26.03.2014 இரவு JM2 வது மாஜிஸ்ரேட் திரு.மும்மூர்த்தி அவர்களின் இல்லத்தில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்ரேட் விஜயகுமாரியை அரசு காப்பகத்தில் வைத்து பாதுகாத்து 27.03.2014 அன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். ஆனால் விஜயகுமாரியை அரசு காப்பகத்திற்கு அனுப்பாமல் காவல்துறையினரின் உதவியுடன் கிறிஸ்தவர்கள் நீதிபதியின் உத்தரவையும் பொருட்படுத்தாமல் சர்ச்சுக்கே அழைத்துச் சென்றதாக என்று திரு. மகேஷ் கூறினார்.

vellore christ police
27.03.2014 அன்று விஜயகுமாரி JM2 வது மாஜிஸ்டிரேட் திரு.மும்மூர்த்தி அவர்கள் முன்னிலையில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் முழுவதுமாக மதம் மாற்றப்பட்டதற்கு அடையாளமாக வெள்ளை சேலையில் கைகளில் பைபிளுடன் வந்தார். விஜயகுமாரியின் குடும்பத்தினர் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அதில் விஜயகுமாரி மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற மருத்துவச் சான்றுகளை சமர்ப்பித்து, விஜயகுமாரியின் உடல் மற்றும் மன நிலை கருதி அவரை தங்களுடன் அனுப்ப வேண்டியதாக திரு. மகேஷ் கூறினார். நீதிபதி விஜயகுமாரியின் குடும்பத்தினர் கோரிக்கைகளை புறந்தள்ளி, விஜயகுமாரியிடம் நான்கைந்து கேள்விகள் கேட்டு விட்டு அப்பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் தெரியவில்லை என்பதால் அப்பெண்ணின் முடிவே இறுதியானது என்று சொல்லி விஜயகுமாரியின் விருப்பதை கேட்டார். அதற்கு விஜயகுமாரி தான் மதம் மாறிவிட்டதாகவும் மீண்டும் தன் பெற்றோருடன் செல்ல விருப்பமில்லை என்று சொன்னவுடன் அதை விஜயகுமாரியின் விருப்பமாக பதிவு செய்துவிட்டு, குடும்பத்தினர் தரப்பு மனுவை தள்ளுபடி செய்தார்.

விஜயகுமாரியின் பெற்றோர்கள் விஜயகுமாரியின் காலில் விழுந்து கெஞ்சி கதறி அழுதும், கிறிஸ்தவ சர்ச்சுக்குச் செல்லும் முடிவில் விஜயகுமாரி பிடிவாதமாக இருந்தார் என்றார் விஜயகுமாரியின் சகோதரி.

இப்படி, அப்பாவிப் பெண்களின் மனநிலையை பாதிப்படையச் செய்து, அதையே சாதகமாக்கி மதமாற்றும் செய்யும் அளவுக்கு இந்த கிறிஸ்தவர்கள் இறங்கியிருப்பது இந்த நாட்டிற்கும், நம் சமயத்திற்கும், பண்பாட்டிற்கும் பேராபத்தை விளைவிக்கும். எனவே மதமாற்றத் தடைச் சட்டத்தை அரசு விரைவில் இயற்றி, இந்தப் பேராபத்திலிருந்து இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டும். 

மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தயாநிதிமாறனுக்கு வாக்கு கேட்டு டிபன்பாக்ஸ் உடன் ஆயிரம்ரூபாய் பணமும் விநியோகிக்கப்பட்டது. வினியோகித்தவர்களை அதிமுக ஆதரவாளர்கள் கையும்களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
சாகித்ய அகடமி விருதுபெற்ற நாவல் ஆசிரியர் ஜோ டி குரூஸ், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அவரது, 'ஆழி சூழ் உலகு' நாவலை, ஆங்கில மொழிபெயர்ப்பு செய்ய முன்வந்த பதிப்பகமும், மொழிபெயர்ப்பை கிட்டத்தட்ட முடித்து விட்ட மொழிபெயர்ப்பாளரும், அந்த பணியை கைவிட்டு விட்டதாக அறிவித்தனர்.

இதற்கு எழுத்தாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி வந்தது. தமிழ் எழுத்தாளர்கள், 'தினமலர்' நிருபரிடம் கூறியதாவது:
ஜெயமோகன், எழுத்தாளர்:
எழுத்தாளர்களுக்கு இடதுசாரி பதிப்பகத்தார் விடுக்கும் மிரட்டலாகவே பார்க்கிறேன். இது அவர்களின் பாசிச போக்கை வெளிப்படுத்துகிறது. ஆங்கில மொழிபெயர்ப்பு பதிப்பகங்களில், 90 சதவீத பதிப்பகங்கள், இடதுசாரி கொள்கையைக் கொண்டதாகவே உள்ளன.
இவர்களுக்கு, வெளிநாட்டு பணம் வருகிறது. பணம் கொடுக்கும் நாடுகள், மோடி பிரதமராவதை ஏற்கவில்லை. அதனால், மறைமுகமாக இதுபோன்ற காரியங்களை, இந்தியாவில் உள்ள பதிப்பகங்கள் மூலம், எழுத்தாளர்களுக்கு எதிராக செய்கின்றனர்.
சமூகம் ஏற்றுக்கொள்ளாத விஷயங்களில் கூட கருத்துக்களை வெளியிட்டு, சிறைக்கு சென்ற எழுத்தாளர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில், ஜோ டி குரூசின் புத்தகத்தை வெளியிட மறுப்பது அராஜகப் போக்கையே காட்டுகிறது.
நாஞ்சில்நாடன், எழுத்தாளர்:
ஜோ டி குரூஸ் ஒரு படைப்பாளி. அவருக்கு அரசியல் கருத்துகளை வெளியிட சுதந்திரம் உள்ளது. அவரது அரசியல் நிலைப்பாட்டுக்காக, அவரது படைப்பை நிராகரிப்பது நியாயமற்றது. குரூஸ் எழுதிய, 'ஆழி சூழ் உலகு' மிகச் சிறந்த படைப்பு. ஐந்தாண்டுகளுக்கு முன், அந்த நாவல் வெளிவந்தபோது, அதை போற்றியவர்கள் தான் இப்போது நிராகரிக்கின்றனர்.
ஒரு படைப்பாளி, தன் கருத்தை வெளியிட முழு சுதந்திரம் பெற்றவன். ஆனால், அவனது அரசியல் கருத்து, இப்படித் தான் இருக்க வேண்டும் என சொல்வது அராஜகம். இந்த போக்கை ஏற்றுக் கொள்ளமுடியாது. அதேநேரத்தில், ஒரு புத்தகத்தை வெளியிடவும், அதை மொழிபெயர்க்கவும், பதிப்பாளருக்கும், மொழிபெயர்ப்பாளருக்கும் முழு உரிமை உண்டு.
பத்ரி சேஷாத்ரி, கிழக்கு பதிப்பகம்: ஜோ டி குரூசின் தமிழ் நாவலை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடுவதை, 'நவயானா' பதிப்பகம் மறுத்துள்ளதை ஏற்க முடியாது. இது என் தனிப்பட்ட கருத்து. அரசியல் நிலைப்பாட்டுக்காக, இப்படியொரு முடிவை அந்த பதிப்பகம் எடுத்திருக்கக் கூடாது.
ஆனால், ஒவ்வொரு பதிப்பகமும் தனக்கென சில கொள்கைகளை வைத்துள்ளது. அவர்களது கோட்பாடுகளுக்கு எதிரான புத்தகங்களை, எதிர் கொள்கை உடையவர்களின் புத்தகங்களை வெளியிடக் கூடாது என, முடிவு செய்திருப்பர். அந்த வகையில், மோடியை ஆதரிக்கும், ஜோ டி குரூஸ் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை அவர்கள் வெளியிடாமல் இருக்கலாம்.
இதுபோன்ற முடிவுகள், பதிப்புலகில் வழக்கமான ஒன்று தான்.
சாருநிவேதிதா, எழுத்தாளர்:
இந்தியாவில் எழுத்தாளராக இருக்க வேண்டுமானால், அவர் இந்துத்துவா எதிர்ப்பாளராகவும், மோடி எதிர்ப்பாளராகவும் இருக்க வேண்டும் என, பதிப்பாளர்கள், 'பிளாக் மெயில்' செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜோ டி குரூசின், நாவலை மொழிபெயர்த்து, ஆங்கிலத்தில் வெளியிடுகிறோம் என, பதிப்பாளர் தான், அவரை நாடி சென்றார். அப்படியிருக்கையில், குரூசின் அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டு, அவரது புத்தகத்தை வெளியிட மாட்டோம் என்று, சொல்வது, எழுத்தாளர்களை அச்சுறுத்துவதாகும்.
இது, உளவியல் ரீதியாக, எழுத்தாளர்களுக்கு, மிரட்டல் விடுப்பதற்கு சமம். 1947ம் ஆண்டு, பாகிஸ்தான் பிரிந்தபோது நடந்த இனப்படுகொலையையும், இந்திரா இறந்தபோது நடந்த சீக்கியர் படுகொலையையும் பேச யாரும் தயாராக இல்லை. அப்படியிருக்கையில், பா.ஜ.,வுக்கு எதிராகவும், காங்கிரசுக்கு ஆதரவாகவும் இருக்க வேண்டும் என, படைப்பாளிகள் மீது சிலர் மறைமுக தாக்குதல் நடத்துகின்றனர். இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தாக்குதல் அதிகரித்துள்ளது.
ஜோ டி குரூஸ் இந்த தாக்குதலுக்கு இப்போது இரையாகியுள்ளார். மோடியை பல ஆண்டுகளாக ஆதரித்து வரும் என்னைப் போன்ற எழுத்தாளர்களின் புத்தகங்களை, பதிப்பாளர்கள் இனி வெளியிடுவார்களா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
வா.மு.கோமு, எழுத்தாளர்:
ஒரு படைப்பாளிக்கு சொந்த கருத்துக்கள் ஆயிரம் இருக்கும். அதில், அரசியல் கருத்தும் ஒன்று. ஆனால், ஒரு படைப்பை உருவாக்கும்போது, படைப்பாளி கட்சிக்காரனாக இருப்பதில்லை. எனவே, படைப்புக்கும், அரசியலுக்கும் தொடர்பில்லை. அரசியல் இல்லாமல், முழுக்க முழுக்க மக்கள் ஏற்கும் படைப்பாக இருந்தால் தான், ஒருவரின் படைப்பு பாராட்டப்படும்.
அப்போதுதான், அந்த படைப்பை, மொழிபெயர்ப்பு செய்கிறோம் என, பதிப்பகங்கள் முன்வருகின்றன. அதன்பின், அவர் இந்த கட்சியை சேர்ந்தவர் என, சொல்லி புத்தகத்தை வெளியிடமாட்டோம் என, சொல்வதில் நியாயமில்லை. அவர்கள் வெளியிடாவிட்டால், இன்னொரு, பதிப்பகம் வெளியிடும்.
வா.மணிகண்டன், எழுத்தாளர், (வலைப்பூவில் எழுதியிருப்பது):
மோடி ஒரு சிறந்த நிர்வாகி என்பதிலும், வலிமையான தலைவர் என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை. 'கொற்கை' நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது வாங்கிய தமிழ் எழுத்தாளர் ஜோ டி குரூஸ் அதை தான் முன் வைக்கிறார். சாமானிய மக்களின் வலிகளைப் புரிந்து கொள்ளும் தலைவனாக மோடி இருப்பார் என்கிறார்.
தமிழக எழுத்தாளர்களில் மோடியை வெளிப்படையாக ஆதரித்தவர்களில் ஜோ டி குரூஸ்தான் முக்கியமானவர். கர்நாடகாவில் அனந்தமூர்த்தியும், கிரீஷ் கர்னாடும் மோடியை எதிர்ப்பதை இங்கே பிரபலப்படுத்திக் கொண்டிருக்கும் ஊடகங்கள் ஜோ டி குரூஸ் ஆதரிப்பதை வெகு சுலபமாக இருட்டடிப்பு செய்துவிட்டன.
இங்கு மோடி ஆதரவு என்றாலே மதவெறியனாகவும், பார்ப்பனியத்தைத் தூக்கிப் பிடிப்பவனாகவும் பார்ப்பது துரதிர்ஷ்டம்.
அறுபதாண்டு காலமாக இந்தியாவையும் தமிழகத்தையும் கூறுபோட்டு விற்றவர்களை வெளிப்படையாக ஆதரிக்கின்றனர். இதுவரையிலான தங்களது அத்தனை கொள்கைகளையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு அரசியல் ஆதாயங்களுக்காக எந்தச் சங்கடமும் இல்லாமல் கட்சி மேடையேறுகின்றனர்.
தங்களை முற்போக்கு அறிவாளி என்றும், நடுநிலை ஊடகவியலாளர்கள் என்றும் சொல்லிக் கொள்பவர்கள் தயக்கமே இல்லாமல் ஊழல்வாதிகளுக்கு சார்பாக பேசுகின்றனர். ஆனால் மோடிக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என்று சொல்பவனின் அத்தனை விவகாரங்களையும் தெரு வரை இழுத்து விடுகிறார்கள்.

'கருத்தில் மாற்றம் இல்லை:
அதனால் கவலையும் இல்லை'
இதுகுறித்து, எழுத்தாளர் ஜோ டி குரூஸ் கூறியதாவது:
டில்லியைச் சேர்ந்த, குறிப்பிட்ட பதிப்பகம், என் மொழிபெயர்ப்பு புத்தக வெளியீட்டை ரத்து செய்துள்ளதை, தனது இணையதளத்தில், அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எழுத்தாளனுக்கு, சமூக பொறுப்பு அவசியம்.
கடந்த, 12 ஆண்டுகளாக, குஜராத்துக்கு தொழில்ரீதியாக சென்று வருகிறேன். அந்த அனுபவத்தில், என்னுடைய கருத்தை வெளியிட்டேன். இது, ஒருநாள் இரவில், எடுக்கப்பட்ட முடிவல்ல. எனது கருத்தில், எந்த மாற்றமும் இல்லை. எனது புத்தகத்தின், ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியிடும் திட்டம் ரத்தானதால், கவலை இல்லை.
இவ்வாறு, அவர் கூறினார்.


நன்றி-தினமலர்.

Wednesday, 16 April 2014

கிருஷ்ணகிரியில் மோடி.. 
அன்புமணியுடன்..
சேலத்தில் மோடி..
விஜயகாந்துடன்..




மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு, சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்ற கருத்தை பாமக அடியோடு எதிர்க்கும்.
தனியார் துறையில் இட ஒதுக்கீடு, சாதி மேம்பாட்டுக் குறியீடு, நடுவண் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு, நீதித் துறையில் இட ஒதுக்கீடு
கல்வியை அரசுடைமை ஆக்குதல், தமிழ் மொழியில் பள்ளிக் கல்வி முறை, அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி.
தெளிவான மருந்துக் கொள்கை உருவாக்கம், அனைவருக்கும் முழுமையான நலவாழ்வு வசதிகளை ஏற்படுத்தித் தருதல், தொற்றா நோய்கள் தடுப்புச் சட்டம்.
மது மற்றும் புகையிலை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விவசாயத்தை அழிக்கும் மீத்தேன், எரிவாயு குழாய் திட்டங்கள் ரத்து, அணு உலைகள் மூடல், மரபணு மாற்றப் பயிர்களுக்கு அனுமதி ரத்து.
தடுப்புக் காவல் சட்டங்கள் ரத்து, வன்கொடுமைச் சட்டம் திருத்தம், மாற்றுத் திறனாளிகள் உரிமை காக்க, இந்தியாவின் பன்முகத் தன்மையை பாதுகாக்க நடவடிக்கை.
வருமான வரி விலக்கு அதிகரிப்பு, புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து, சில்லரை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு உள்ளிட்டவை பாமகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன

நன்றி-தினமணி.
பாஜக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபடவேண்டும் என்று தனது ஆதரவாளர்களுக்கு முன்னாள் மததிய அமைச்சர் மு.க.அழகிரி  உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.. அழகிரி மதுரையில் நேற்றிரவு  ரகசியக் கூட்டம் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கூட்டத்தில் அழகிரி பேசியது குறித்து அவரது ஆதரவாளர்கள் கூறியதாவது:
எந்த தவறும் செய்யாத மதுரை மாநகர் திமுக நிர்வாகிகளை  கூண்டோடு கலைத்தனர். அவர்களுக்காக தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம் நியாயம் கேட்டேன். என் மீது அபாண்டமான பழி போட்டனர்.. 'கட்சியையும், கட்சி தலைவரையும் மீட்டெடுப்போம்' அதற்கு இனி நாம் தயாராக வேண்டும். என் ஆதரவாளர்களான, உங்களுக்காக, மன்னிப்பு கேட்கவும் தயார் என்றேன். ஆனால், அவர்கள் இதை ஏற்கவில்லை. திட்டமிட்டும், சதி செய்தும், நம்மை பழிவாங்கி விட்டனர். நீதி கேட்டு நெடும் பயணம் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது.
தேர்தலில் நம் ஆதரவாளர்கள் எல்லோரிடம் நான் தனிப்பட்ட முறையில் கருத்து கேட்டேன். அதன் அடிப்படையில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை ஆதரிப்பது என, முடிவெடுக்கப்பட்டுள்ளது.  இரவோடு இரவாக வைகோ போன்றவர்களுக்கு சாதகமாக உடனே தேர்தல் பணியாற்ற வேண்டும். மதுரையில் தே.மு.தி.க., வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும்.
தமிழகத்தில் பா.ஜ., தலைமையிலான கூட்டணி கட்சிகளை ஆதரிப்போம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நம் ஆதரவால் தான் தி.மு.க., தென் மண்டலத்தில் 9 எம்.பி., க்கள் வெற்றி பெற்றனர். தற்போது தென் மண்டலத்தில் தி.மு.க., வேட்பாளர்கள் தோல்வி அடையும் போது நம்முடைய சக்தி தெரியும்.
குஜராத்தில்  சிறப்பாக ஆட்சி செய்யும் மோடி, பிரதமரானால், நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வார்.; அவர் ஒரு சிறந்த நிர்வாகி. குஜராத் மாநிலத்தில் உள்ள முஸ்லிம்கள் மோடிக்கு வாக்களித்துள்ளனர். ஆகவே குஜராத் மாநிலத்தில் வாழும் சிறுபான்மையினர், அவரை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று தான் அர்த்தம். இவ்வாறு அழகிரி பேசியதாக, அவரது ஆதரவாளர்கள் கூறினர். மேலும் விரைவில் அழகிரி-மோடி சந்திப்பு நடக்கவுள்ளதாக அழகிரியின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
  

நன்றி-தினமணி.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்கு வந்துள்ள மிரட்டல் கடிதம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இக் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) வழக்கம்போல தபால் துறை ஊழியர் ஒருவர், கடிதங்களைக் கொண்டு வந்துக் கொடுத்துள்ளார். அதில் ஒரு கடிதத்தில், டீக் கடை நரேந்திர மோடி பாரதப் பிரதமரானால் திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில், வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயில், மேல்மருவத்தூர் ஸ்ரீஆதிபராசக்தி அம்மன் கோயில்களை வெடிவைத்து தகர்ப்போம். இப்படிக்கு, பன்னா இஸ்மாயில், தமுக, திருவண்ணாமலை என்று எழுதப்பட்டு இருந்ததாம்.
இதைப் படித்து அதிர்ச்சியடைந்த கோயில் ஊழியர்கள் இதுகுறித்து உடனடியாக கோயில் இணை ஆணையரும், இந்து சமய அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையருமான ந.திருமகளுக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, மிரட்டல் கடிதம் குறித்து திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் இணை ஆணையர் புகார் கொடுத்துள்ளார்.
திருவண்ணாமலையில் உள்ள ஏதோ ஒரு தபால் பெட்டியில் போடப்பட்டு, கோயிலுக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ள இக் கடிதத்தை எழுதியது யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோயிலுக்கு பலத்த பாதுகாப்பு:
மிரட்டல் கடிதத்தையடுத்து, ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயிலுக்குள் செல்லும் அனைத்து பக்தர்களும் தீவிர சோதனைக்கு உள்படுத்தப்படுகின்றனர். இதுகுறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கேட்டபோது, தேர்தலையொட்டி கோயிலுக்கு கூடுதல் பாதுகாப்பு போட்டுள்ளோம். மற்றபடி வேறொன்றும் இல்லை என்றார்.

நன்றி-தினமணி.
பெரம்பலூர் மாவட்டத்தில் புகைப் படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டு (பூத் சிலிப்) வழங்கும் பணி 61 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்றார் தேர்தல் நடத்தும் அலுவலர் தரேஸ் அஹமது. இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கான பூத் சிலிப் எனப்படும் புகைப் படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டு, கடந்த 9-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. பெரம்பலூர் சட்டப்பேரவை தொகுதியில் 1,29,580 ஆண் வாக்காளர்களும், 1,34,384 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்களாக 10 பேர் என மொத்தம் 2,63,974 வாக்காளர்களும், குன்னம் சட்டப்பேரவை தொகுதியில் 1,21,623 ஆண் வாக்காளர்களும், 1,23,319 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்களாக 17 பேர் என மொத்தம் 2,43,959 வாக்காளர்கள் உள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 2,51,203 ஆண் வாக்காளர்களும், 2,56,703 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்களாக 27 பேர் என, மொத்தம் 5,07,933 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டுகள் தயாரிக்கப்பட்டு கடந்த 9ம் தேதி முதல் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று நேரில் வழங்கப்பட்டு வருகிறது. 14ம் தேதி வரை 3 லட்சத்து 11 ஆயிரம் நபர்களுக்கு வாக்காளர் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை வாக்காளர் சீட்டு வழங்கும் பணிகள் 61 சதம் நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள நபர்களுக்கு 19-ம் தேதிக்குள் வழங்கப்பட உள்ளது.

நன்றி-தினமணி

 பெரம்பலூர் மக்களவை தொகுதியின் தேர்தல் பார்வையாளர்கள் வாகன தணிக்கை என்ற பெயரிலும் செலவினகணக்கை கண்காணிக்கிறோம் என்ற பெயரிலும் அதிகாரத்தை எந்த அளவுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பதற்கான சிறு உதாரணம் இந்த இரு நிகழ்வுகள்..

பெரம்பலூர் சப்-கலெக்டரின் சண்டித்தனம்.....
முசிறியில் ஜெயலலிதாவின் பிரச்சாரக்கூட்டத்தில் RTR
முசிறியில் முதல்வர் ஜெயலலிதாவின் பிரசார நிகழ்ச்சிக்குசென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட பெரம்பலூர் சப்-கலெக்டருடன் அதிமுகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் மருதராஜாவை ஆதரித்து, முதல்வர் ஜெயலலிதா கடந்த 13ம் தேதி திருச்சி மாவட்டம், முசிறியில் பிரசாரம் செய்தார். இதற்காக பெரம்பலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான அதிமுகவினர் நூற்றுக்கணக்கான வாகனங்களில் பெரம்பலூர் துறையூர் சாலையில் காலை 9 மணி முதல் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியே ஆய்வுக்காக சென்ற பெரம்பலூர் உதவித் தேர்தல் அலுவலரான சப்-கலெக்டர் மதுசூதனன் ரெட்டி, நக்கசேலம் பகுதி வழியாக பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் தனியார் பஸ்கள் ஆட்களை ஏற்றிக்கொண்டு சாரை, சாரையாகச் செல்வதை கண்டு தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டார். இதனால் பிரசாரத்துக்கு செல்லும் வாகனங்களின் போக்குவரத்து 1 மணி நேரத்துக்கு மேலாகப் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, அங்கு விரைந்து வந்த பெரம்பலூர் நகரச் செயலாளர் ஆர்.டி. ராமச் சந்திரன், பெரம்பலூர் நகராட்சி தலைவர் ரமேஷ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், பொதுக்கூட்டத்துக்கு செல்வதில் என்ன தேர்தல் விதிமீறல் உள்ளது எனக் கூறி சப்-கலெக்டரிடம¢ கேள்வி கேட்டனர். ஆனால், தேர்தல் விதிமீறல் இருக்கிறதா என சோதனை செய்யவேண்டியது எனது கடமை என்றும், தேர்தல் கால அரசுப் பணிகளை தடுத்து நிறுத்தாதீர்கள் என்று பதிலளித்தார்.
ஆனால், இதை ஏற்க மறுத்த ராமச்சந்திரன், நகராட்சி தலைவர் ரமேஷ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், அப்படியென்றால் அதிமுகவினர் செல்லும் வாகனங்களின் எண்களை குறித்துக்கொண்டு, வாகனங்களை அனுப்புங் கள்.
அல்லது வீடியோவில் பதிவுசெய்து விட்டு அனுப்புங்கள். கூட்டத்திற்கு சென்று திரும்பிய பின்னர் முழுமையாக விசாரணை நடத்தலாம் என்று அவருடன் வாக்குவாதம் செய்தார். இதனால் நக்கசேலம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
  இதை ஏற்றுக்கொண்ட சப்-கலெக்டர், வாகனங்களை வீடியோ மூலம் பதிவுசெய்த பின்னர் முசிறிக்கு புறப்பட்டுச் செல்ல அனுமதித்தார். இந்த வாக்குவாதத்தின் போது அருகில் இருந்த போலீசார் சிறிதுநேரம் வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்தனர். பிரச்னை முடிவுக்கு வந்த பிறகே ஓடிச் சென்று வாகனப் போக்குவரத்தை சீரமைத்தனர்.

 இதுகுறித்து ஆலத்தூர் வட்டாட்சியர் மகாராஜா (37) பாடாலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், தேர்தல் விதிமுறைகளை மீறியதாகவும் நகரச் செயலர் ராமசந்திரன், ராமகிருஷ்ணன், சிவக்குமார், கிருஷ்ணமூர்த்தி, ராமலிங்கம், இளங்கோவன், சுப்பையா ஆகியோர் மீது வழக்குப் பதிந்துள்ளனர். 

தேர்தல் செலவின பார்வையாளரின்சேட்டை...
பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட துறையூர், முசிறி, குளித்தலை ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் செலவின பார்வையாளர் சித்தலிங்கேஷ், தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக பல்வேறு இடங்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், முசிறி- துறையூர் சாலையில் இந்திய ஜனநாயக கட்சி கொடியுடன் சென்ற வாகனத்தை வழிமறித்து தேர்தல் செலவின பார்வையாளர் சித்தலிங்கேஷ், செவ்வாய்க்கிழமை தணிக்கை மேற்கொண்டார். அப்போது, உரிய அனுமதியின்றி அந்த வாகனம் தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர் மீது வழக்குப் பதிந்து 15 நாள்களுக்கு வாகன உரிமையை ரத்துசெய்ய சித்தலிங்கேஷ் உத்தரவிட்டார். மேலும், அந்த வாகனத்தில் கொண்டுவரப்பட்ட பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அதைத்தொடர்ந்து, குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், பஞ்சப்பட்டி கிராமப் பகுதியில் சுவர்களில் வரையப்பட்டுள்ள அரசியல் கட்சி விளம்பரங்களுக்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்த அவர், அதே பகுதியில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த இந்திய ஜனநாயக கட்சியின் தேர்தல் அலுவலகத்தை பார்வையிட்டு, சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யவும், தேர்தல் அலுவலகத்தை உடனடியாக அகற்றவும் தேர்தல் செலவின பார்வையாளர் சித்தலிங்கேஷ் உத்தரவிட்டார்.



நன்றி-பங்களிப்பு தினகரன், தினமணி.

Monday, 14 April 2014

தஞ்சை பா.ஜ.க வேட்பாளர் கருப்பு என்ற முருகானந்தம் வாக்கு சேகரிப்பதிப்பதற்காக மல்லிப்பட்டினத்திற்கு சென்றார். ஊரின் வழியில் நூறுக்கும்மேற்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதிகள் வழிமறித்து எங்கள் ஊருக்குள் வாக்குசேகரிக்கவரக்கூடாது எனக்கூறி கற்களால் சராமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் முருகானந்தம் உட்பட பாஜக ஆதரவாளர்கள் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர் . துப்பாக்கியுடன் கூடிய காவல்துறை பாதுகாவலர் அரசால் நியமிக்கப்பட்டிருந்தும் இந்த கொலைவேறிதாக்குதல் நடந்துள்ளது.அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர்கள் செதுபாவச்சத்திரம் காவல்நிலையத்தில்புகார் செய்துள்ளனர். இச்சம்பவத்தை அறிந்து அருகிலுள்ள கிராமங்களில்பதற்றம்நிலவுகிறது.
துப்பாக்கியுடன் பாதுகாவலர் இருந்தும் முருகானந்தத்தை தாக்கிய பயங்கரவாதிகள்.
 

Sunday, 13 April 2014

திண்டுக்கல், பேகம்பூர் எருமைக்காரன் தெருவில் பழமை வாய்ந்த காளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் காளியம்மன் கோவிலுக்கு அருகில் விநாயகர் கோவில் ஒன்றும் உள்ளது. சமீபத்தில் விநாயகர் கோவிலுக்காக காளியம்மன் கோவிலுக்கு எதிர்புறம் தனக்கு சொந்தமாக இருக்கும் நிலம் ஒன்றினை தானமாகத் தர பக்தர் ஒருவர் முன்வந்துள்ளார்.அதன் அடிப்படையில் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் ஏற்கனவே இருந்த மண்ணிலான விநாயகர் சிலையை அகற்றிவிட்டு புதிய கற்சிலையை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்தனர்.
 policestation
ஆண்டுதோரும் பங்குனி மாதத்தில், காளியம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடப்பது வழக்கம்.இந்தாண்டும் இத்திருவிழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், 12.04.2014 அன்று பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் ஜமாத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடி விநாயகர் கோவில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள இடம் வக்ப் வாரியத்திற்குச் சொந்தமானது அதனால் உடனடியாக விநாயகர் சிலையை அகற்ற வேண்டும் என்று கூறி திண்டுக்கல் தெற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் பேச்சுவார்த்தைக்காக இருதரப்பினரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்தனர். காவல்துறை ஆய்வாளர் பரவாச்சிதேவன், காவல்துறை துணை ஆய்வாளர் சரவணன் மற்றும் காவல்துறை துணை ஆய்வாளர் நசீம்பாஷா முன்னிலையில் இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் இந்துக்கள் நிலப் பத்திரங்களை போலீசாரிடம் காட்டி வாதாடியுள்ளனர். ஆனால் இந்த ஆவணங்களை ஏறெடுத்தும் பார்க்காத போலீசார் இஸ்லாமியர்கள் சார்பாகவே பேசி விநாயகர் சிலையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டு இந்துக்களை விரட்டியடித்தனர்.

dinidigual protest3
இந்த தகவல் அறிந்த இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த நகரப் பொறுப்பாளர் திரு.சஞ்சீவி மற்றும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த திரு.கண்ணன் மற்றும் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் சிலரும் உடனடியாக காவல் நிலையம் சென்று மீண்டும் ஒரு முறை இஸ்லாமியர்களுடன் அப்பகுதி கவுன்சிலர் மற்றும் தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்துக்கள் தரப்பு வாதம் எதையும் ஏற்காமல் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவே நடந்து கொண்ட காவல் துறையினரும், அரசு அதிகாரிகளும் உடனடியாக விநாயகர் சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதற்கு அப்பகுதி வாழ் இந்து மக்கள் சம்மதிக்காமல் எங்கள் கோவிலை விட்டுக் கொடுக்க முடியாது என்று உறுதியுடன் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். பெண்கள் விநாயகர் சிலையை நெருங்க முடியாத வாறு மறித்து நின்று கொண்டனர். இச்சமயத்தில் பயங்கரவாத முஸ்லீம்கள் 200க்கும் மேற்பட்டோர் கையில் கம்புகளுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு கலவரச் சூழலை ஏற்படுத்தினர். அச்சமயத்தில் அங்கு கூடியிருந்த பயங்கரவாத முஸ்லீம்கள் திரு.சஞ்சீவி மற்றும் இந்து முன்னணி அமைப்பைச் சார்ந்தவர்களிடம் உங்கள் அனைவரையும் கழுத்தை அறுத்துக் கொலை செய்யாமல் விடமாட்டோம் என்று மிரட்டியதாக திரு. சஞ்சீவி கூறினார்.
 dinidigual protest1
பின்னர், உடனடியாக பெண் போலீசார் வரவழைக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களை அடித்து உதைத்து கூட்டத்தை கலையச் செய்து விநாயகர் சிலையை அவ்விடத்தில் இருந்து பெயர்த்து எடுத்துச் சென்றுவிட்டனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக 45 பேரை கைது செய்து அவர்கள் மீது வழக்கும் தொடுத்து நிபந்தனை ஜாமீனில் இரவு 11:00 மணிக்கு விடுவித்தனர். தற்சமயம் விநாயகர் சிலை போலீசார் வசம் உள்ளது.

இந்துக்கள் தங்களுக்கு சொந்தமான இடத்தில் அவர்கள் வழிபடுவதற்காக ஒரு கோவிலை புனரமைத்ததைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத பயங்கரவாத இஸ்லாமியர்கள் காவல்துறையினரைத் தங்கள் வசப்படுத்தி இந்த அராஜகத்தை நிகழ்த்தியுள்ளனர். இந்த சம்பவம் பயங்கரவாத சக்திகள் நம் நாட்டில் எந்தளவிற்கு பலம் பெற்றுள்ளது என்பதையே காட்டுகிறது. நடுநிலைத் தன்மையுடன் செயல்பட வேண்டிய காவல் துறையும், அரசு அதிகாரிகளும் அராஜகத்திற்குத் துணைப்போய் இந்துக்களுக்கு அநீதி இழைத்துள்ளது மிகவும் வருத்தத்திற்குரியது. கோவிலை விட்டுக்கொடுக்கக்கூடாது என்ற உறுதியுடன் போலீசார் மற்றும் பயங்கரவாத இஸ்லாமியர்களின் மிரட்டல்களை சிறிதும் பொருட்படுத்தாமல் போராடிய அப்பகுதி வாழ் இந்து மக்களுக்கு வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் தனது பாராட்டினைத் தெரிவித்துக் கொள்கிறது. 

நன்றி-http://vsrc.in/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/item/230-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF/itemid-174?fb_action_ids=298002200355367&fb_action_types=og.likes