Thursday, 4 December 2014

    பாடாலூரில், கார் மோதியதில் படுகாயம் அடைந்து மூளைச்சாவு அடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 6 பேருக்கு வாழ்வு கிடைத்துள்ளது. மூளைச்சாவுபெரம்பலூர் மாவட்டம் பாடாலூரை சேர்ந்தவர் சரவணன். இவர் பாடாலூர் ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் உணவகம் வைத்து நடத்தி வருகிறார். இவரது ஒரே மகன் கோகுல்(வயது 16). இவன் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். சம்பவத்தன்று இவன் தனது உறவினர் மதியழகனுடன் திருவளக்குறிச்சி அருகே சாலையை கடந்து சென்றான்.அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் சாலையை கடந்து சென்ற இருவர் மீதும் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் திருச்சி தென்னூரில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தலையில் படுகாயம் அடைந்த கோகுல் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உறுப்புகள் 6 பேருக்கு தானம் இதனையடுத்து கோகுலின் பெற்றோர்கள் தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர். இதனையடுத்து கோகுலின் உறுப்புகள்(இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் கண்கள்) திருச்சி, சென்னை, நெல்லையில் உள்ள 6 பேருக்கு பொருத்தப்பட்டது. இதன் மூலம் 6 பேருக்கு வாழ்வு கிடைத்துள்ளது.

-தினகரன்.

0 comments:

Post a Comment