Saturday, 6 December 2014


வ.களத்தூர் டிச. 5:
  
வ.களத்தூர் அருகே தன்னிச்சையாக செயல்படும் ஊராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஊராட்சி துணைத்தலைவர் உட்பட 6 கவுன்சிலர்கள் கலெக்டரிடம் நேற்று புகார் தெரிவித்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பசும்பலூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சூடாமணி, 1 வது வார்டு உறுப்பினர் சாமிக்கண்ணு, 2 வது வார்டு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, 6 வது வார்டு உறுப்பினர் உமா, 7 வது வார்டு உறுப்பினர் பூங்கொடி, 8 வது வார்டு உறுப்பினர் சின்னசாமி, ஆகியோர் நேற்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் தரேஷ்அகமதுவிடம் புகார் மனு அளித்தனர்.

அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளதாவது,
பசும்பலூர் ஊராட்சித் தலைவர் ராமர். இவர், பசும்பலூர் ஊராட்சியில் மாதாந்திர கூட்டம் முறையாக நடத்தவில்லை. அனைத்து நலத்திட்டங்களையும் பாரபட்சமாக ஆதிதிராவிடர் வசித்திடும் பகுதிகளிலேயே செயல்படுத்தி வருகிறார். இதனால் எங்கள் கிராமத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக இருபிரிவினரிடையே மோதல் ஏற்படும் சூழலை மக்கள் பிரதிநிதிகளான நாங்கள் பலமுறை சுட்டி காட்டியும் ஊராட்சி மன்ற கூட்டத்தை கூட்டாமல் தன்னிச்சையாக அனைத்து திட்டங்களையும் போலியாக டெண்டர் போட்டு செயல்படுத்தி வருகிறார்.

மேலும் வி.களத்தூர் சாலையில் உள்ள பொது இடம் திருவிழா, சந்தை, வாகனங்கள் திருப்புவதற்காக உள்ளிட்ட பயன்பட்டு வரும் இடத்தில், சட்ட விரோதமாக நடைபெற்று வரும் அங்கன்வாடி மைய கட்டட பணிகளை ஊருக்கு பொதுவான இடத்தில் கட்டிட உடனடியாக ஊராட்சி மன்ற கூட்டத்தை கூட்டி விவாத்திட வேண்டும். சட்ட விரோத போக்கை தொடர்ந்து கடைபிடித்திடும் ஊராட்சி மன்ற தலைவர் ராமர் மீது மக்கள் பிரதிநிதிகள் கொண்டு வர உள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஏற்று அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
  
வ.களத்தூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றம் சாட்டி அவரை பதிவு நீக்கம் செய்ய வலியுறுத்தி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஒருவர் உட்பட 6க்கும் மேற்ப்பட்ட வார்டு உறுப்பினர்கள் கலெக்டரிடம் புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

-தினகரன்.

0 comments:

Post a Comment