எறையூர் சர்க்கரைஆலை கரும்பு அரவைப்பணி தொடங்கும் தேதி 2வதுமுறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இயந்திரங்கள் பழுதுகாரணமா என விவசாயிகள் வருத்தமடைந்துள்ளது.
பெரம்பலூர் மாவட் டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூரில் உள்ள நேரு சர்க் கரைஆலை 1977ல் அரவைப்பணிகள் தொடங்கி 37ஆண்டுகளைக் கடந்து விட்டது. பொதுத்துறை சர்க்கரை ஆலையான இந்த ஆலை யில், விவசாயிகளும், தமிழகஅரசும் இணைந்து பங்குதாரர்களாக உள்ளனர். ஆலை தொடங்கிய போது, பெரம்பலூர் மாவட்டம் மட்டுமன்றி அருகிலுள்ள சேலம், விழுப்புரம், அரியலூர், கடலூர் மாவட் டங்களில் இருந்தும் இந்தஆலைக்கு கரும்புபெறப்பட்டது.
பெரம்பலூர் ஆலைக்குப்பிறகுதான் தஞ்சை குருங்குளத்தில் மற்றொரு பொதுத் துறை சர்க்கரைஆலை தொடங்கப்பட்டது. பராமரிப்பு காலத்தில் ஆலைக்கு வாங்கப் பட்ட தரமற்ற இயந்திரங்களால் அடிக்கடி பழுதுஏற்பட்டு ஆலையின் அறவைத்திறன் குறைந்து, ஆலை நஷ்டத்தில் இயங்க ஆரம்பித்தபோது, கடந்த திமுகஆட்சியில் ஆலை யைப் புணரமைத்திட ஒதுக்கப்பட்ட ரூ.100 கோடியால்தான் ஆலை தற்போது மறுஜென்மம் எடுத்து இயங்கிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கடுமை யான வறட்சியால் கரும்பு சாகுபடிக்கான பரப்பு குறைந்து போனது, வறட் சியை சமாளிக்க ஏதுவாக கிணறுவெட்ட வோ, ஆழ் குழாய் கிணறு அமைக் கவோ, வங்கிக்கடன் தராமல் விவசாயி களை வஞ்சித்தது, அருகே தனியார் ஆலைகள் தொடங் கப்பட்டது, அறுவடைசெய்து அனுப்பிய கரும்புக்கு சரியானநேரத் தில் பணப்பட்டுவாடா செய்யாமல் இழுத்தடித்தது போன்ற காரணங்களால், சாகுபடி பரப்பு குறைந்து, மீண்டும் மீண்டும் ஆலை ஆட்டம் கண்டபோதும், அதனை சமாளிக்க ஏதுவாக அதிமுக ஆட்சி யில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. முத்தரப்புக் கூட்டமும் கூட்டப்படவில்லை.
இந்நிலையில் நடப்பாண்டிற்கான அரவை வழக்கம்போல் நவம்பர் 14ம்தேதி தொடங்கு மென்றும் பிறகு 27ம்தேதி யென்றும் கூறப்பட்டது. ஆலைத் தொழிலாளர்க ளுக்கு அரவைப்பணி எப்போது தொடங்குமென உறுதிசெய்யப்படாத நிலையில், அரவைப்பணி எப்போதுதான் தொடங்குமென கடந்த 25ம்தேதி தலைமைக் கணக்காளர் குப்பனிடம் நேரில்கேட்டபோது, டிசம்பர்-1ம்தேதி அரவைப்பணி தொடங்கும். இதற்காக 1ம்தேதி காலையில்தான் கரும்புலாரிகள் ஆலைக்கு வந்துசேரும் என்றார்.
ஆனால் இன்று (1ம்தேதி) சர்க்கரைஆலை தொடங்குவதற்கான எந்த அடையாள மும் இன்றியே எறையூர் சர்க்கரைஆலை காணப்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளிடம் கேட்ட போது,
ஆலையில் தொழிலாளர்களுக்கான ஊதியப் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. மாதத்தொடக்கத்தில் அதுவெடித்தால் தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடுவார்கள், அதனை சமாளித்துவிட்டு 7,8 தேதிகளில் தொடங்கலாம் என முடிவுசெய்துள்ளனர் என்று தொழிலாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஆலையை நவீனப்படுத்தினால் இயந்திரக் கோளாறு என்பதற்கு வேலையிருக்காது, அதனைவிடுத்து பழுது நீக்குகிறோம், சீரமைக்கிறோம் என்றபெயரில் ஆலை நிர்வாகம் அக்கரையின்றி செயல்படுவதால்தான் அடிக்கடி பிரச்னையாகிறது. இப்போதும் இயந்திரங்களை சீரமைக்கும் பணிதான் நடந்துகொண்டி ருக்கும். அதனை சரி செய்துவிட்டு, 5ம்தேதிக்குப்பிறகு அரவைப்பணி தொடங்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ஆலையின் தலைமைக் கணக்காளர் குப்பனிடம் கேட்டதற்கு,
செல்போனை அவர் ஆன்செய்து பேசவில்லை. இந்நிலையில் கட்டிங்ஆர்டர் பெறப்பட்ட கரும்புகளை இப்போது வெட்டவேண்டாம் என கரும்பு அலுவலர்களைக் கொண்டு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படு கிறது. கரும்புக் கான உரியவிலை கிடைக் குமா? எனக்காத்திருந்த விவசாயிகள், இப்போது ஆலை எப்போது திறக்குமென்று காத்திருக்க தொடங்கியுள்ளது விவசாயிகளை வருத்தமடைய செய்துள்ளது.
-தினகரன்.
0 comments:
Post a Comment