Saturday, 6 December 2014


பெரம்பலூர்,டிச.6:
காதல் தகராறில் போட்டோகிராபர் பட்டப்பகலில் ஸ்டூடியோவில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் பெரம்பலூர் மாவட்ட குற்றவி யல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள ஊட்டத்தூரை சேர்ந்த ராஜ் மகன் சத்யா(32). திருமணமானவர். பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஸ்டூடியோவில் போட்டோகிராபராக வேலை செய்து வந்தார்.நேற்று மதியம் 12 மணிக்கு இவர் ஸ்டூடியோவில் இருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் சத்யாவை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பிச்சென்றனர். 12.30 மணி அளவில் ஸ்டூடியோ உரிமையாளர் இளையராஜா அங்கு வந்தபோது சத்யா கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பெரம்பலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். எஸ்.பி. சோனல் சந்திரா மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் துணிகரமாக நடந்த இந்த கொலை அந்த பகுதி வர்த்தகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொலை செய்யப்பட்ட சத்யாவுக்கு மனைவி சங்கீதா, 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக பெரம்பலூர் பகுதியை சேர்ந்த பிரபு, பன்னீர் செல்வம் ஆகிய இருவரும் பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர்.
நீதிபதி ராமசாமி இருவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இது குறித்து போலீசார் விசாரணையில் காந்தி நகரை சேர்ந்த பள்ளி மாணவியை காதலிப்பதில் சத்யாவுக்கும், பிரபுவுக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டதை தொடர்ந்து இக்கொலை நடந்துள்ளதாக தெரிகிறது.


-தினகரன்.

0 comments:

Post a Comment