Monday, 1 December 2014


ஒடிஸாவில் பெண்களுக்கான கருத்தடை அறுவைச் சிகிச்சையின் போது சைக்கிள் பம்ப் பயன் படுத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி யுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் அண்மையில் நடத்தப்பட்ட கருத்தடை அறுவைச் சிகிச்சை முகாமின் போது 13 பெண்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தின் வடுக்கள் ஆறும் முன்பு ஒடிஸா மாநிலத்தில் சைக்கிள் பம்ப் மூலம் கருத்தடை அறுவைச் சிகிச்சை நடத்தப் பட்டிருப்பது மருத்துவ வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தலைநகர் புவனேஸ்வரத்தில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் உள்ளது பனார்பால் கிராமம். அந்த கிராமத்தில் உள்ள மருத்துவ மனையில் கடந்த 28-ம் தேதி கருத் தடை அறுவைச் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. இதில் 56 பெண்களுக்கு கருத் தடை அறுவைச் சிகிச்சை மேற் கொள்ளப்பட்டது.
டாக்டர் மகேஷ் பிரசாத் ராத் என்பவர் பெண்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்தார். சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் ஆபரேஷன் தியேட்டர் உள்ளிட்ட வசதிகள் இல்லை. எனவே சாதாரண அறையில் போதிய மருத்துவ உபகரணங்கள் இன்றி அறுவைச் சிகிச்சைகள் நடத்தப்பட்டன.
பொதுவாக கருத்தடை அறு வைச் சிகிச்சையின்போது வயிற்றில் கார்பைன் டை ஆக்ஸைடின் அளவு சீராக இருக்க செய்ய ‘இன்சப் லேட்டர்ஸ்’ கருவியை பயன்படுத்து கின்றனர். ஆனால் பனார்பால் மருத்துவமனையில் அந்த வசதி இல்லாததால் டாக்டர் மகேஷ் பிரசாத் ராத் சைக்கிள் பம்பை பயன்படுத்தியுள்ளார்.
இளைஞர் ஒருவர் சைக்கிள் பம்பில் காற்றடிக்க டாக்டர் அறுவைச் சிகிச்சையை நடத்தி யுள்ளார். இதுதொடர்பாக ஓடிஸா நாளிதழ்களில் படத்துடன் செய்தி வெளியாகியுள்ளது.
இந்தப் பிரச்சினை ஒடிஸாவில் பூதாகரமாக வெடித்து, சமூக ஆர்வலர்களும் பாஜக தொண் டர்களும் பல்வேறு போராட்டங் களை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து டாக்டர் மகேஷ் பிரசாத் ராத் கூறியபோது, கடந்த 10 ஆண்டுகளில் 60,000-க்கும் மேற்பட்ட கருத்தடை அறுவைச் சிகிச்சைகளை செய்துள்ளேன். கிராமப்புற மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இருக்காது. எனவே ‘இன்சப்லேட்டர்ஸ்’ கரு விக்குப் பதிலாக சைக்கிள் பம்பை பயன்படுத்துகிறோம், இதில் தவறில்லை என்று தெரிவித்தார்.
இதுகுறித்து மகப்பேறு மருத்துவர்கள் கூறியபோது, கருத் தடை அறுவைச் சிகிச்சைக்கு சைக்கிள் பம்பை பயன்படுத்துவது ஆபத்தானது. பம்பின் லூப்ரி கென்ட்ஸ் பெண்களில் வயிற்றில் செல்ல வாய்ப்புள்ளது, அவர் களின் ரத்த நாளங்களில் காற்றுக் குமிழிகள் அடைக்கும் வாய்ப் புள்ளது. இதனால் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்று தெரிவித்தனர்.
போராட்டங்கள் வலுவடைந்து வருவதால் இச் சம்பவம் குறித்து உயர்நிலை விசாரணை நடத்த ஒடிஸா அரசு உத்தரவிட்டுள்ளது.

-தி இந்து,

0 comments:

Post a Comment