Wednesday, 19 November 2014


பெரம்பலூர் கலெக்டர் தரேஸ் அகமது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;
பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை 19ம் தேதி முதல் 26ம் தேதி வரை 8 நாட்களுக்கு ராணுவத்தின் பல்வேறு நிலை பணிகளுக் கான ஆள்சேர்ப்பு முகாம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. இம்முகாமில் சான்றிதழ் சரிபார் ப்பு, உடற்தகுதி, ஓட்டப்பந்தயம், மருத்துவத் தகுதிகள் குறித்த தேர்வுகள் நடைபெற இருந்தது. முகாமில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட 15 மாவட்டங்களைச் சார்ந்த தகுதியான நபர்கள் ராணுவத்திற்கு தேர்வு செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் தற்காலிகமாக ஒத்திவைக் கப்பட்டுள்ளது. ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் வருகிற 2015ம்ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி தொடங்கி, 24ம் தேதி வரை 8 நாட்கள் நடக்கும் என்று ராணுவப் பாதுகாப்புத்துறை சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ராணுவ ஆள்சேர்ப்பு முகாமிற்காக தொடர்பயிற்சியில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் தவறாமல் பெரம்பலூர் மாவட்ட விளை யாட்டு மைதானத்தில் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள முகாமில் கலந்து கொண்டு, தேர்வாகி, நாட்டுக்காகப் பாடுபடும் அரியவாய்ப்பினைப் பெற்று பெருமை சேர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment