Wednesday, 19 November 2014


பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே இரு பிரிவினருக்கு பொதுவான நிலத்தை, ஒரு பிரிவினருக்கு பட்டா மாற்றம் செய்வதை கண்டித்து கிராம மக்கள் ஊராட்சி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்குள்பட்ட தேவையூர் ஊராட்சியில் இரு பிரிவினருக்கு பொதுவாக 22 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை, அந்த பகுதியை சேர்ந்த இரு பிரிவினரும் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.கடந்த 5-ம் தேதி அந்த நிலத்தை ஒரு பிரிவினருக்கு மட்டுமே பட்டா மாற்றம் செய்ததாக தெரிகிறது. இதையறிந்த தேவையூர் கிராம மக்கள், அந்த நிலத்தை இருபிரிவினருக்கும் பிரித்து அளிக்க வேண்டும். அல்லது, இருபிரிவினரும் பயன்படுத்தும் வகையில் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி சுமார் 100-க்கும் மேற்பட்டோர் ஊராட்சி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.



தகவலறிந்து, சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட முயன்ற வேப்பந்தட்டை வட்டாட்சியர் ஏழுமலை தலைமையிலான வருவாய்த் துறையினரை பொதுமக்கள் சிறைபிடித்தனர். தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தயில், உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.

0 comments:

Post a Comment