இந்தியாவின் உயர்மட்ட முஸ்லீம் மதகுருக்களில் ஒருவரான டெல்லி இமாம், தனது மகனை துணை இமாமாக நியமித்தற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த
நிலையில், டெல்லி வக்பு வாரியத்துக்கு சொந்தமான சொத்தாக மசூதி உள்ளது.
முஸ்லீம் மதத்துக்கு சொந்தமான சொத்துக்களை நிர்வகிப்பவர்களும், ஷாகி
இமாமும் ஒருதலைபட்சமாக தங்கள் வாரிசுகளை முடிவு செய்ய முடியாது என்று
டெல்லி ஐகோர்ட்டில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை
இன்று விசாரித்த டெல்லி ஐகோர்ட், இந்த நடவடிக்கையில் எந்த சட்ட புனித
தன்மையும் இல்லை. ஆனால் நிகழ்ச்சியை ரத்து செய்ய முடியாது. ஜனவரி 28ல்
புகாரி தனது முடிவு பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் ”என உத்தரவிட்டது.
முன்னதாக,‘துணை
இமாம்’ பட்டாபிஷேக நிகழ்ச்சி இமாம் புகாரி சார்பில் இந்திய, வெளிநாட்டு
தலைவர்கள் சுமார் ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்திய
பிரதமர் மோடியை இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை. அதேவேளையில் பாகிஸ்தான்
பிரதமர் நவாஷ் ஷெரீபை அழைத்து இருந்ததால் பெருத்த சர்ச்சை ஏற்பட்டது
குறிப்பிடத்தக்கது.
-தினத்தந்தி.
0 comments:
Post a Comment