பொறியியல் கல்லூரிகளில் இறுதி ஆண்டு பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு
டிசம்பர் இறுதி வாரத்தில் மாநில அளவில் ‘கேம்பஸ் இண்டர்வியூ' நடத்தப் படும்
என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக தொழில்நிறுவனங் கள் கூட்டுமுயற்சி மையம்
நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அண்ணா பல்கலைக்கழகத் துக்கு உட்பட்டபொறியியல் கல்லூரி களில் அடுத்த ஆண்டு
படிப்பை முடிக்கும் இறுதி ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான மாநில அளவிலான கேம்பஸ்
இண்டர்வியூ (வளாக நேர்முகத்தேர்வு) டிசம்பர் இறுதிவாரம் முதல் நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை, கோவை, திருநெல்வேலி ஆகிய 3 மண்டலங் களில் நடத்தப்படும் 10 வளாக
நேர்முகத்தேர்வுகளில் காக்னிசன்ட், அக்சஞ்சர் சர்வீசஸ், இன்போசிஸ், விப்ரோ,
ஐபிஎம் உள்ளிட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு பணியாளர்களை தேர்வுசெய்யும்.
இதற்காக தொழில்நுட்ப தேர்வுகள், தகவல்தொடர்புத்திறன் தேர்வு ஆகியவற்றுடன்
ஆன்லைன் தேர்வும் நடத்தப்படும்.
நிறுவனங்களின் தேர்வுகள், மாணவர்களிடமிருந்து அவை எதிர்பார்க்கும் திறன்கள்
தொடர் பாக அனைத்து பொறியியல் கல் லூரிகளுக்கும் தகவல் தெரிவிக் கப்படும்.
அத்துடன் இதுகுறித்த விவரங்கள் அண்ணா பல்கலைக் கழக இணையதளத்திலும்
வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-தி இந்து.
0 comments:
Post a Comment