நமது ஊர் முக்கிய பிரமுகர்களின் முன்முயற்சியின் காரணமாக, மாடு பிடி நிகழ்வு முழுவதுமாக தடைசெய்யப்படமால், மாடுகளை பிள்ளையார் கோவில் மற்றும் மாரியம்மன் கோவிகளில் தீப ஆராதனை காட்டி , வ.களத்தூர் தேரடி திடலில் அனைத்து மாடுகளையும் கொண்டு வந்து நிறுத்தி, தீப ஆராதனை காட்டி அவரவர் வீடுகளுக்கு திரும்ப ஓட்டிச்செல்லும் ஒரு புதிய நடைமுறை கடந்த சில ஆண்டுகளாக அரசின் அனுமதியுடன் காவல்துறையின் முழு பாதுகாப்புடனும் நடைபெற்று வந்தது.
![]() | ||
| vkalathur வ.களத்தூர் தேரடி திடல் |
இந்த வருடம் கண்டிப்பாக மாடுகளுக்கு தேரடி திடலில் தீபாரதனை காட்டும் நிகழ்ச்சி நடைபெறும் என்று பலத்த எதிர்பார்ப்புடன் இருந்த மக்களுக்கு பெரும் ஏமாற்றமே பதிலாக இருந்தது . இந்த வருடம் மாடுகளுக்கு தீபாராதனை காட்டும் நிகழ்வு நடத்தப்படாததற்க்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன . மாடுகளுக்கு கோமாரி நோயினால் நடத்தப்படவில்லை என்றார்கள், நமது ஊரில் குழந்தை இறந்ததுதான் காரணம் என்றார்கள். மக்கள் ஆளாளுக்கு ஒரு பதிலை தந்துகொண்டிருந்தார்கள். ஆனால் பதில் சொல்ல வேண்டியவர்கள் யாரும் பதில் சொன்னதாக தெரியவில்லை .
வருடம் தோறும் மாடு பிடி நிகழ்வுகளுக்கு காவல்துறையிடம் அனுமதி பெற பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே அனுமதிக்கான விண்ணப்பம் ஊர் மக்களின் சார்பாக, ஊர் முக்கியஸ்தர்களால் காவல்துறையிடமும் , மாவட்ட நிர்வாகத்திடமும் கொடுக்கப்பட்டுவிடும். மேலும் ஊர் பொதுக்கூட்டமும் இது தொடர்பாக பிள்ளையார் கோவிலில் நடைபெறும். இந்த இரு நிகழ்வுகளும் நடைபெறவில்லை.
மாட்டுப்பொங்கல் அன்று மாடுகளுக்கு பொங்கல் கூவிய பிறகு பிள்ளையார் கோவிலுக்கு மாடுகளை கொண்டு வந்து தீப ஆராதனை செய்யும் நிகழ்வும் நடைபெறவில்லை. ஊரில் ஆளாளுக்கு ஒன்றாக பேசினார்களே ஒழிய கேட்க வேண்டியவர்களிடம் யாரும் கேட்டதாக தெரியவில்லை .
![]() |
| vkalathur மேட்டுச்சேரியில் மாடுபிடி நிகழ்ச்சி |
இவண்-வ.களத்தூர் நலவிரும்பி.
குறிப்பு-( இது கட்டுரையாளரின் சொந்த கருத்தாகும் வ.களத்தூர் செய்தி இதற்கு பொறுப்பல்ல.)
RSS Feed
Twitter
Friday, January 17, 2014
வ.களத்தூர் செய்தி































