- பழனி மலையில் பக்தர்கள் நடந்து செல்லும் படிக்கட்டுகளிலும், யானைப் பாதையிலும், முஸ்லிம்கள் கடைகள் வைத்து பக்தர்களுக்கு இடையூறு செய்வதால், அவைகளைக் காலி செய்யும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அறநிலையத்துறை கண்டுகொள்ளாமல் முஸ்லிம்களுக்கு ஆதரவாக உதவி செய்து வருகிறது. நீதிமன்ற உத்தரவை மதித்து, மலைப்பாதையை ஆக்கிரமித்துள்ள கடைகளை நிர்வாகம் உடனடியாகக் காலி செய்யவேண்டும்.
- தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையால் நடத்தப்படும் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில், விரிவுரையாளர் பணிக்கு, பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பணியிடத்தை முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளனர். இதன்மூலம் இந்து பக்தர்களின் நிதியில் நடத்தப்படும் கல்லூரி, பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டது. இந்த இந்துவிரோத முஸ்லிம் இட ஒதுக்கீட்டை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
- பழனி இடும்பன்கோயில் மலையடிவாரத்தில், நுழைவாயிலிலிருந்து 50 அடி தூரத்திற்குள் மதுபானக்கடையை அரசு நடத்தி வருகிறது. இதை விசாரித்து நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தும், அந்த உத்தரவை செயல்படுத்தாமல் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்த மதுபானக் கடையை அகற்றி, பழனியைக் கோயில் நகரமாக அறிவிக்க வேண்டும்.
This is featured post 1 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com.
This is featured post 2 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com.
This is featured post 3 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com.
This is featured post 4 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com.
This is featured post 5 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com.
This is featured post 5 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com.
This is featured post 5 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com.
This is featured post 5 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com.
Monday, 4 August 2014
Monday, August 04, 2014
வ.களத்தூர் செய்தி
Monday, August 04, 2014
வ.களத்தூர் செய்தி
திருவள்ளுவர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் பாடி சுரேஷ்குமார் அண்மையில் ஜீன் 18ம் தேதி முஸ்லீம் பயங்கிரவாதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவருடைய குடும்பத்திற்காகவும், குழந்தைகளின் கல்விக்காகவும் அருள்திரு.சக்தி அம்மா அவர்கள் (வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி கோவில்) சார்பாக ரூ.5 ஈலட்சம் வழக்கப்பட்டது. சுரேஷ்குமார்ன் மனைவி புவனா பெற்றுக்கொண்டார். அருகில் மாநில பொதுச் செயலாளர் சி.பரமேஸ்வரன் கோட்ட தலைவர் கோ.மகேஷ் கோட்ட அமைப்பாளர் ராஜேஷ் கோட்ட பொருளாளர் பாஸ்கரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
![]() |
| தினத்தந்தி |
Monday, August 04, 2014
வ.களத்தூர் செய்தி
பெரம்பலூர்,அரியலூர்,துறையூர், நாமக்கல் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் ரயில்பாதை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாக இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் ஐஜேகே எனப்படும் தேசிய ஜனநாயகக் கட்சி கூட்டணி வைத்துக்கொண்டது. இதற்கு முன்னரே ஐஜேகே கட்சித் தலைவர் பாரிவேந்தருக்கு சொந்தமான கல்லூரிகளில் பட்டமளிப்பு விழா நடைப்பெற்றபோது, சிறப்பு விருந்தினராக மோடி கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு பட்டமளித்து சிறப்பித்தார். இப்போது கூட்டணியில் உள்ள நேரத்தில், உத்திரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஐஜேகே கட்சி அலுவலகத்தை நேற்று திறந்து வைத்தார் பாரிவேந்தர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மேற்கண்ட ஊர்களை இணைக்கும் வகையில் புதிய ரயில்பாதை அமைக்க வேண்டும், தேசிய நதிகளை இணைத்து நாட்டில் குடிநீர் பஞ்சத்தைப் போக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாக கூறியுள்ளார்.
-தினகரன்.
Saturday, 2 August 2014
Saturday, August 02, 2014
வ.களத்தூர் செய்தி
பெரம்பலூர் அருகே சனிக்கிழமை மாலை சாலையோர மரத்தில் கார் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
மணப்பாறையிலிருந்து வேலூருக்குச் சென்ற காரில், வேலூரைச் சேர்ந்த சு. பாண்டுரங்கன் (60), அவரது மகளான கிருஷ்ணமூர்த்தி மனைவி அமுதவள்ளி (35), பாண்டுரங்கனின் நண்பர் குப்புசாமி (52) ஆகியோர் இருந்தனர். காரை, திருச்சியைச் சேர்ந்த க. விஜய் (33) ஓட்டினார்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பாடாலூர் அருகே உள்ள பெருமாள் பாளையம் பிரிவுச் சாலை அருகே சென்றபோது, காரின் முன்பக்க டயர் வெடித்து சாலையோர மரத்தில் கார் மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பாண்டுரெங்கனும், குப்புசாமியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்த பாடாலூர் போலீஸார் விபத்தில் சிக்கிய அமுதவள்ளி, ஓட்டுநர் க. விஜய் ஆகியோரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அமுதவள்ளி உயிரிழந்தார். ஓட்டுநருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தகவலறிந்த பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்த்ரா சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். புகாரின்பேரில், பாடாலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
நன்றி-வசந்த ஜீவா..
Saturday, August 02, 2014
வ.களத்தூர் செய்தி
பெரம்பலூர்,: பெரம்பலூரில் ஆடிமாத 3வது வெள்ளியை முன்னிட்டு பல்வேறு கோயில்களில் திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றது.
பெரம்பலூர் பூசாரித்தெருவிலுள்ள ரேணுகாம் மாள் கோயிலில் நேற்று மா லை ஆடிமாத 3வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, வீட்டிலுள்ளோர் ஆயுள்விருத்தி, ஆரோக்கியம் அதிகரிக்க செய்தல், சகல ஐஸ்வர்யங்களை வேண்டுதல், கல்விவிருத்தி மற்றும் உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கும்பகோணம் குருக்கள் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையில் 108திருவிளக்குகள் ஏற்றிவைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்துசமய அறநிலையத்துறை ஆய்வாளர் அருணகிரி, நிர்வாக அறங்காவலர் வழக்கறிஞர் பாபு, பிரியதர்ஷினி சரவணன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஏராளமான பக்தர் கள் கலந்துகொண்டனர்.இதேபோல பெரம்பலூர் அங்காளம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நேற்று மாலை நடந்தது. பெரம்பலூர் குருக்கள் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற சிறப்புபூஜையில் 108திருவிளக்குகள் ஏற்றிவைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
அகமுடையார் நலச்சங்கம் சார்பில் நடந்த இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மழைக்காகவும், உலக நன்மைக்காகவும் வழிபாடு செய் தனர். மேலும் பெரம்பலூர் பழைய நகராட்சி அலுவலகம் தென்புறத்திலுள்ள அய்யப்ப சுவாமி திருக்கோயிலில் நடந்த திருவிளக்கு பூஜையில் 250 திருவிளக்குகள் ஏற்றி வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. வாசவி கண்ணிகா பரமேஸ்வரி கோயிலில் நடந்த திருவிளக்கு பூஜையில் 108விளக்குகள் ஏற்றிவைத்து சிறப்புவழிபாடு நடத்தப்பட்டது.நிகழ்ச்சியில் பெரம்பலூர் நகரப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.
-தினகரன்.
Saturday, August 02, 2014
வ.களத்தூர் செய்தி
பெரம்பலூர், : செங்குணம் கிராமத்தில் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது.
பெரம்பலூர் மாவட் டம் செங்குணத்தில் கிராமத்தில் உள்ள மகாமாரியம்மன் கோயிலில் ஆடிபெருந்திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் திருத்தேர் விழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்தாண்டுக்கான தேர்திருவிழா கடந்த 17ம்தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. கடந்த 24ம்தேதி காப்பு கட்டுதல், 25ம்தேதி அன்னவாகனத்திலும், 26ம்தேதி புஷ்பவாகனத்திலும், 27ம்தேதி சிம்ம வாகனத்திலும், 28ம்தேதி பூப்பல்லக்கிலும், 29ம் தேதி மயில்வாகனம் என பல்வேறு வாகனங்களில் அலங்காரத்துடன் தினமும் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். 30ம்தேதி பால்குடம் எடுத்தல், அக்னிசட்டி ஏந்துதல், அலகுகுத்துதல், தீ மிதித்தல் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. காலை 10மணியளவில் திருத்தேர் வடம்பிடித்து இழுக் கப்பட்டு வீதியுலா வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண் டனர்.
மாலையில் தேர்நிலைக்கு வந்ததடைந்தது. இரவு நாடகம் நடைபெற்றது. விழாஏற்பாடுகளை ஊராட்சிமன்றத் தலைவர் தன்ராஜ் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
- தினகரன்.
Thursday, 31 July 2014
Thursday, July 31, 2014
வ.களத்தூர் செய்தி
![]() |
Thursday, July 31, 2014
வ.களத்தூர் செய்தி
Thursday, July 31, 2014
வ.களத்தூர் செய்தி
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய, 14 வயது சிறுவனை பெரம்பலூர் மாவட்ட அனைத்து மகளிர் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
குன்னம் அருகே உள்ள வேப்பூர் கிராமத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை அவரது பக்கத்துவீட்டை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன் அண்மையில் பாலியல் வல்லுறவு செய்தாராம். இதில் அந்த சிறுமி கர்ப்பமடைந்தார்.
-தினமணி.
Thursday, July 31, 2014
வ.களத்தூர் செய்தி
பெரம்பலூர் மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் காவலர்களை தினமும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டியும், மிரட்டியும் வந்த சிறுவனை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. இங்குள்ள கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்ணான 100-ல் கடந்த 3-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை, இளைஞர் ஒருவர் ஒரே செல்போனிலிருந்து, பல்வேறு எண்கள் மூலமாக அங்கு பணிபுரியும் காவலர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவதோடு, காவலர்களை மிரட்டியும் வந்தார்.
ஏறத்தாழ ஒரே நேரத்தில் 25 அழைப்புகள் வந்துள்ளன. மகளிர் போலீசார் போனை எடுத்து பேசினாலும், அவர்களுக்கும் இதே நிலை நீட்டித்தது.
பொறி வைத்து பிடித்தனர்!
இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அதிகாரி மரிய ஆரோக்கியம் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் மகாவிஷ்ணு (17) என்பதும், இவர் 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு வேலைக்கு செல்லாமல் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்ந்து செல்போன் மூலம் தொடர்புகொண்டு காவலர்களை திட்டியதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, மகாவிஷ்ணுவை கைது செய்த போலீஸார் பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.
-தினகரன்.
Thursday, July 31, 2014
வ.களத்தூர் செய்தி
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த 24-ம் தேதி செட்டிக்குளம் வெங்காய வணிக வளாகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வாரத்தில் திங்கள் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாள்களில் ஏலம் நடைபெற உள்ளது.
விவசாயிகள் மறைமுக ஏலத்தில் கலந்துகொள்ளும்போது வெங்காயத்தை விற்பதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் எற்படும் சிரமங்களை தெரிவித்ததைத் தொடர்ந்து, மறைமுக ஏலத்துக்குப் பதிலாக திறந்தமுறை ஏலம் ஒவ்வொரு குவியலுக்கும் தனித்தனியாக நடத்தி உடனடி பணப்பட்டுவாடா செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திறந்தமுறை ஏலம் நடைபெறும்.
எனவே, விவசாயிகள் தங்களிடமுள்ள சின்ன வெங்காயத்தை முற்பகல் 11 மணிக்குள் செட்டிக்குளம் வெங்காய வணிக வளாகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
வியாபாரிகள் தங்களது பெயரை பதிவு செய்த பின் ஏலத்தில் கலந்துகொள்ளலாம். அதிக விலை குறிப்பிடும் வியாபாரிக்கு வெங்காயம் விற்பனை செய்யப்படும். ஏலம் எடுத்ததற்கான தொகையை வியாபாரிகளால் விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
-தினமணி.
Thursday, July 31, 2014
வ.களத்தூர் செய்தி
பெரம்பலூர் மாவட்டத்தில் புதுவாழ்வுத் திட்டத்தின்மூலம் கிராம வறுமைஒழிப்பு சங்கங்கள் வேப்பூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை ஆகிய மூன்று வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் குழுக் களை வலுப்படுத்தி பயிற்சி மற்றும் ஆதாரநிதி வழங்கப்பட்டுவருகிறது.
மாற்றுத்தினாளிகள் மற்றும்நலிவுற் றோர் வாழ் வில் முன்னேற்றமடைய தாங்கள் சிறு தொ ழில் தொடங்க தனி நபர்கடன் வழங்கியும் மாற்று திறனாளிகளுக்கு தேவை யான உதவி உபகரணங்களும் பெற்று தரப் பட்டு வருகி றது. 18வயதுமுதல் 35வயது வரையுள்ள இளைஞர்களுக்கு ஜேசிபி டிரை விங், வெல்டிங், கணினி, டை லரிங், கேட்ட ரிங், சிஎன்சி, கொத்தனார், பிளம் பிங், சென்ட்ரிங், பொக்லிங் டிரைவிங் போன்ற பயிற்சியளித்து பயி ற்சி முடிந்தவுடன் தனியார் நிறுவனங் களில் வேலை வாய்பு மற்றும் நேரடி வேலைவாய்ப்பும் பெற்றுத் தரப்பட்டு வருகிறது.
மேலும் ஒவ்வொரு கிராம வறுமைஒழிப்பு சங்கங்களின்மூலம் கிராம கற்றல் மையம் அமைக்கப்பட்டு போட்டித் தேர்வாளர்கள் படித்து பயன்பெறும் வகையில் போட்டித் தேர்வு, புத்தகம் மற்றும் சிடிக்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது. புது வாழ்வுத் திட்டத்தின்மூலம் தற்பொழுது அந்தூர், வ.களத்தூர், பாடாலூர் ஆகியகிராம வறுமை ஒழிப்பு சங்கங்களின் மூலம் மின்ஆளுமைத் திட்டத்தின்கீழ் பொதுமக்கள் சேவைமை யம் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்மூலம் பொது மக் கள் பயன்பெறும் வகையில் வருமான சான்று, ஜாதிச்சான்று, இருப்பிடச்சான்று, விதவைசான்று மற்றும் முதல் பட்டதாரிக்கானசான்று போன்ற சான்றிதழ்களை இந்த மையத்திலேயே பெற் றுக் கொள்வதற்கான வசதி கள் செய்யப்பட்டுள்ளது.
எனவே, அந்தூர், வ.களத்தூர், பாடாலூர் மற்றும் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மேற்சொன்ன சான்றிதழ் வாங்குவதற்காக வருவாய் அலுவலர் அலுவலகத்திற்கு செல்லவேண்டியதில்லை. பொதுமக்கள் சேவை மையங்களிலேயே பதிவுசெய்து சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம். எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த அரியவாய்ப்பினை முறையாகப் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என கலெக்டர் (பொ)ராஜன் துரை தெரி வித்துள்ளார்.
-தினகரன்.
Wednesday, 30 July 2014
Wednesday, July 30, 2014
வ.களத்தூர் செய்தி
கும்பகோணம், : ஆடிபெருக்கு விழாவுக்காக கும்பகோணத்தில் அவல் இடிப்பதற்காக பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.
தமிழர்களின் முக்கிய திருவிழாவில் ஒன்று ஆடிபதினெட்டாம் நாள் வரும் ஆடிப்பெருக்கு விழா. இந்த விழா காவிரி ஆறு துவங்கும் தலைக்காவிரியில் தொடங்கி அந்த ஆறு கடலோடு கலக்கும் பூம்புகார் வரை நடக்கிறது. காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகவும், விவசாயிகளை காப்பாற்றி வரும் நீர் ஆதாரமாக திகழும் ஏரி, குளம், ஆறுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தாண்டு வரும் 3ம் தேதி ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது.
தைப்பொங்கல் எவ்வளவு உற்சாகமாக தமிழகத்தில் கொண்டாடப்படுகிறதோ, அதே போல் காவிரி கரையோரத்தில் உள்ள மக்கள் ஆடிப்பெருக்கு விழாவை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஆற்றில் தண்ணீர் வந்தாலும், வராவிட்டாலும் பதினெட்டாம்பெருக்கு விழா மட்டும் ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவில் காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் முகமாகவும், தங்களுக்கு விவசாயத்தை வழங்கி பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக விளங்கும் நீர் நிலைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக காவிரி கரையோர மக்கள் குறுவை, சம்பா இப்படி எந்த போகத்தில் நெல் விளைந்தாலும் அந்த நெல்லில் கொஞ்சம் எடுத்து காவிரி தாய்க்கு படைப்பதை இன்றளவும் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இப்படி எடுத்து வைத்த நெல்லை அவலாக இடித்து இதை காவிரிக்கு படைப்பதும், உற்றார் உறவினர்களுக்கு கொடுத்து மகிழ்வதும் வழக்கம்.
குறிப்பாக காவிரி, கொள்ளிடம் கரையோர மக்களும், வீராணம் ஏரிக்கரையோர மக்களும் அதிகளவில் ஆடிப்பெருக்கு விழாவில் அவல் வைத்து படைத்து வருகின்றனர். இதற¢காக விளைந்த நெல்லை எடுத்து அவலாக இடித்து வருகின்றனர். கும்பகோணம் பகுதியில் உள்ள மில்லில் ஆடிப்பெருக்கு விழா நடைபெறும் நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் வரிசையில் நின்று அவல் இடித்து செல்வது வழக்கம். அதன்படி நேற்று ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, சேத்தியாதோப்பு, காட்டுமன்னார்குடி, த.பழூர், அரியலூர், மதனத்தூர், நீலத்தநல்லூர், அணைக்கரை, முள்ளங்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து பெண்கள், ஆண்கள் அதிகாலை முதல் கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள அவல் இடிக்கும் மில்லில் குவிய துவங்கினர். நேற்று அதிகாலை 5 மணி முதல் வரிசையில் நின்று நெல்லை கொடுத்தனர். இந்த நெல்லை வாங்கி அதை வறுத்து பின்னர் அவலாக இடிப்பதற்கு ஒரு கிலோவுக்கு கூலியாக ரூ.7 வசூல் செய்யப்படுகிறது.
இந்த அவலை சில மணி நேரங்களில் கொடுப்பதும் உண்டு. கூட்டம் அதிகமாக இருந்ததால் மறுநாள் வழங்கப்படுவதும் உண்டு. அவல் இடிப்பதற்காக காசிராமன் தெருவில் நேற்று மட்டும் நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர். இதுகுறித்து அணைக்கரையை சேர்ந்த விசாலாட்சி கூறுகையில், எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் ஆடிபெருக்குக்கு கும்பகோணத்தில் அவல் இடிப்பது வழக்கம். இந்த பகுதியில் இங்கு மட்டும் தான் அவல் மிஷின் உள்ளது. நான் காலை 5 மணிக்கு வந்து 8 மணிக்கு தான் மில்லில் கொடுத்துள்ளேன். நாளை தான் கிடைக்கும் என்கின்றனர். வழக்கம்போல் இந்தாண்டும் கூட்டம் அதிகமாக உள்ளது என்றார்.
ஒழுகச்சேரி ராஜேஸ்வரி கூறுகையில், ஆடிப்பெருக்கு விழாவில் பழங்கள் வைத்து படையலிட்டாலும் அவல் தான் முக்கியம். வயலில் விளைந்த நெல்லை விற்பனை செய்யும் முன் ஒரு 6 மரக்கால் எடுத்து தனியாக வைத்துவிடுவோம். ஆடிபெருக்கு வரும்போது அந்த நெல்லை எடுத்து அவல் தயாரிப்போம். எங்கள் ஊரிலிருந்து 30 பெண்கள் வந்துள்ளோம். காலை 6 மணிக்கு நெல்லை கொடுத்துள்ளோம் என்றார்.
அவல் தயாரிப்பாளர் தங்கப்பன் கூறுகையில், காலம்காலமாய் இந்த பழக்கவழக்கம் உள்ளது. கொள்ளிடம் ஆற்றின் வடக்குகரையில் உள்ளவர்கள் தான் இங்கு அதிகம் வருகின்றனர்.
பெரம்பலூர், அரியலூர், கும்பகோணம் பகுதியை எடுத்து கொண்டால் கும்பகோணத்தில் இங்கு மட்டும் தான் மில் உள்ளது. ஆடிபெருக்கு ஒரு வாரத்துக்கு முன்பே அவல் தயாரிப்பு துவங்கிவிடும். இதற்காக இரவு பகலாக தொழிலாளர்கள் ஷிப்டு முறையில் வேலைபார்த்து வருகிறோம். முன்பெல்லாம் நெல்லை கொடுத்து 2 மணி நேரத்தில் அவல் பெற்று செல்லலாம். கூட்டம் அதிகமாக இருப்பதால் நெல்லை வாங்கி கொண்டு மறுநாள் வரச்சொல்கிறோம். முடிந்தால் அன்றே கொடுத்து விடுவோம். தற்போது நாள் ஒன்றுக்கு 6 டன் நெல்லை அவலாக இடித்து தருகிறோம் என்றார்.தாய் வீட்டு சீதனமாக அவல்
தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு எப்படி தாய் வீட்டு சீதனம் பெண்களுக்கு அனுப்பப்படுகிறதோ, அதேபோல் ஆடிப்பெருக்கு விழாவிற்கு கொள்ளிடம் கரையோர கிராமத்தில் அவல் சீதனமாக வழங்கப்படும். பிறந்த பெண்களுக்கு அவலை மகிழ்ச்சியாக வழங்கினால் அந்த வீடும் மகிழ்ச்சியாக ஆண்டு முழுவதும் இருக்கும் என்பது ஐதீகம். இதனால் பெண்கள் இடித்து செல்லும் அவலில் அதாவது 6 மரக்கால் இடித்தால் 2 மரக்கால் பெண்களுக்கு வழங்கப்படுவதுண்டு.
உற்சாகமான நாள்
காவிரியில் தண்ணீர் வரவில்லையென்றாலும், ஆடிப்பெருக்கு விழாவின்போது அந்தந்த ஊர்களில் உள்ள கோயில்களுக்கு சென்று புதுமண தம்பிகள் மட்டுமல்லாது, கிராம மக்கள் அனைவரும் வழிபாடு செய்வர். புதுமண தம்பதிகள் மஞ்சள் கயிறு மாற்றி கொள்வதும், சர்க்கரை கலந்து அவலை மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ்வதையும் உற்சாகமான விழாவாக கொண்டாட போவதாக அவல் உடைக்க வந்த பெண்கள் பலரும் தெரிவித்தனர்.
-தினகரன்.
Wednesday, July 30, 2014
வ.களத்தூர் செய்தி
பெரம்பலூர், : பெரம்பலூர் நகரில் 21 இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பது என சதுர்த்தி விழா ஆலோ சனை கூட்டத்தில் முடிவு செய் யப்பட்டுள்ளது.
பெரம்பலூரில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டியின் ஆலோசனை கூட்டம் பூசாரித் தெருவிலுள்ள அங்காளம்மன் கோயிலில் நேற்று நடைபெற்றது.
விழா கமிட்டியின் தலைவர் கங்காதரன் தலைமை வகித்தார். பிரபு அய்யர் முன்னிலை வகித்தார். பாஜக மாவட்ட துணைத்தலைவர் வாசு தேவன், நகரத் தலைவர் குருராஜேஷ் ஆகியோர், சிறப்பான முறையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தேவையான ஆலோசனை வழங்கினர்.கூட்டத்தில், கதிர்வேல், கஜேந்திரன், ராஜேஷ், சிவகுமார், காங்கிரஸ் பிரமுகர் கிருஷ்ணன், ஞானப்பிரகாசம் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பெரம்பலூர் நகரில் 21 இடங்களில் வருகிற ஆகஸ்டு 29ம்தேதி விநாயகர் சிலைகளை வைப்பது. 31ம்தேதி (ஞாயிறு) மாலை 3 மணியளவில் அனைத்து சிலைகளையும் பெரம்பலூர் பழைய பஸ்ஸ் டாண்டு அருகிலுள்ள செல்வவிநாயகர் கோயிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று திருச்சி காவிரி ஆற்றில் கரைப்பது என முடிவு செய்யப் பட்டது. கமிட்டியின் செயலாளர் ராமசாமி நன்றி கூறினார்.
-தினகரன்.
Wednesday, July 30, 2014
வ.களத்தூர் செய்தி
பெரம்பலூர், : அயன்பேரையூர் வெள்ளாற்று புறம்போக்கு நிலத்தில் உள்ள மயானத்துக்கு பட்டா வழங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
பெரம்பலூர் கலெக்டர்(பொ) இராஜன்துரையிடம் வேப்பந்தட்டை தாலுகா அயன்பேரையூரை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு அனுப்பினர். அதில் கூறியிருப்பதாவது:
வேப்பந்தட்டை தாலுகா அயன்பேரையூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் தெருவில் 2,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்காக இதுவரை மயான வசதி செய்துதரவில்லை. இப்பகுதியை சேர்ந்தவர்கள் இறந்தால் நீண்ட காலமாக வெள்ளாற்று புறம்போக்கில் உறவினர்களின் சடலங்களை புதைத்து வருகிறோம். அப்பகுதிக்கான பாதை வசதி கிடையாது. ஏற்கனவே பாதை வசதிக்காக அரசு தரப்பில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தனியார் நிலத்தில் நில உரிமையாளர் நீதிமன்ற தடையாணை பெற்று பயிரிட்டு வருகிறார்.
எனவே ஆற்று வெள்ளத்தில் சடலங்களை தூக்கி செல்லும் அவலநிலை ஏற்படாமல் இருக்க ஆற்றின் கரையோரம் தடுப்பணை கட்டி பாதை வசதி செய்துதர வேண்டும். வெள்ளாற்று புறம்போக்கு நிலத்தில் உள்ள எங்கள் மயானத்துக்கு பட்டா வழங்க வேண்டும். வெள்ளம் வரும் முன்பாக இதற்கான தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
-தினகரன்.
Wednesday, July 30, 2014
வ.களத்தூர் செய்தி
![]() |
| தினகரன் செய்தி |
பெரம்பலூர் மாவட்டத்தில் பார்வையிழப்பு தடுப்புச் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருந்துவமனை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இலவச கண் புரை பரிசோதனை முகாம் இன்று (30ம் தேதி) முதல் செப்டம்பர் 4ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுகுறித்து பெரம்பலூர் கலெக்டர் தரேஸ் அஹமது மேலும் கூறியதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் கண் புரை நோய் உள்ளவர்களை கண்டறிந்து, அவர் களுக்கு இலவசமாக கண் சிகிச்சை அளிக்கும் வகையில் இம்முகாம் நடைபெறுகிறது. இதற்காக சம்பந்தப்பட்ட ஊராட்சிப் பகுதிக்கு சென்று மருத்துவக் குழுவினர் கண்புரை உள்ளவர்களை கண்டறியும் பரிசோதனை நடத்த உள்ளனர்.
இதன் படி, வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் திருமாந்துறையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை முகாம் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, நாளை (31ம் தேதி) சு.ஆடுதுறையிலும், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1ம் தேதி) வடக்கலூரில் நடைபெறுகிறது,.
2ல் அகரம்சீகூர், 5ல் கீழ பெரம்பலூர், 6ல் துங்கபுரம், 7ல் காடூர், 8ல் பெரிய வெண்மணி, 9ல் அந்தூர், 12ல் வேப்பூர், ஒலைப்பாடி, 13ல் கீழு மத்தூர், 14ல் சிறுமத்தூர், 16ல் கீழப்புலியூர், 19ல் சித்தளி, 20ல் குன்னம், 21ல் மூங்கில்பாடி, 22ல் பேரளி ஆகிய ஊராட்சிகளில் முகாம் நடைபெறுகிறது.
இன்று பெண்ணகோணத்திலும், நாளை (31ம் தேதி) ஒகளுர், ஆகஸ்ட் 1ல் அத்தியூர், 2ல் வசிஸ்டபுரம், 5ல் வயலப்பாடி, 6ல் புதுவேட்டக்குடி, 7ல் கொளப்பாடி, 8ல் வரகூர், 9ல் பரவாய், 12ல் நன்னை, 13ல் பெருமத்தூர், 14ல் ஆண்டிக்குரும்பலூர், 16ல் எழுமூர், 19ல் அசூர், 20ல் பெரியம்மாபாளையம், 21ல் ஒதியம் ஆகிய ஊராட்சிகளில் மதியம் 1 முதல் மாலை 4 வரை முகாம் நடைபெறுகிறது.
வ.களத்தூர் -ஆகஸ்ட் 2ம் தேதி.
வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஆக.1ல் அன்னமங்கலம், ஆகஸ்ட் 2ல் வ.களத்தூர், 4ல் தொண்டமாந்துறை, 5ல் தேவையூர், 6ல் வெங்கலம், 7ல் நூத்தப்பூர், 8ல் எறையூர், 9ல் வாலிகண்டபுரம், 11ல் பசும்பலூர், 12ல் கை.களத்தூர், 13ல் அனுக்கூர், 14ல் காரியனூர், 16ல் மளையாளப்பட்டி, 18ல் பிரம்மதேசம், 19ல் மேட்டுபாளையம், 20ல் நெய்க்குப்பை, 21ல் அயன்பேரையூர், 22ல் பெரியம்மாபா ளையம், 23ல் பில்லாங்குளம், 25ல் பிம்பலூர், 26ல் தழுதாழை, 27ல் தொண்டபாடி, 28ல் திருவாளந்துறை, 30ல் பெரியவடகரை, செப்.1ல் இனாம்அகரம், 2ல் வெண்பா வூர், 3ல் பாண்டகபாடி, 4ல் உடும்பியம் ஆகிய ஊராட்சிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை முகாம் நடைபெறும்.
இதே போல், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று கவுல்பாளையம், நாளை கல்பாடி, ஆக.2ல் நொச்சியம், 5ல் அம்மாபாளையம், 6ல் அய்யலூர், 7ல் வடக்குமாதவி, 12ல் லாடபுரம், 13ல் சத்திரமனை, 14ல் கீழக்கரை, 16ல் சிறுவாச் சூர், 19ல் எசனை, 20ல் வேலூர், 21ல் கோனேரிபாளையம், 23ல் செங்குணம், 26ல் எளம்பலூர், 27ல் பொம்மனப்பாடி, 28ல் மேலப்புலியூர், செப்.2ல் செஞ்சேரி, 3ல் புது நடுவலூர், 4ல் பெரம்பலூர் ஆகிய ஊராட்சிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை முகாம் நடைபெறும்.
ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (ஜூலை 30) செட்டிகுளம், நாளை (31ம் தேதி) அடைக்கம்பட்டி, ஆக. 1ல் காரை, 2ல் கொளக்காநத்தம், 4ல் மேலமாத்தூர், 5ல் ஆதனூர் ஆகிய ஊராட்சிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், 6ல் நாரணமங்கலம், 7ல் நாட்டார்மங்கலம், 8ல் மாவிலங்கை, 9ல் தேனூர், 11ல் நக்கசேலம், 12ல் தெரணி, 13ல் சிறுகன்பூர், 14ல் சாத்தனூர், 16ல் கொட்டரை, 18ல் அல்லிநகரம், 19ல் கூடலூர், 20ல் திம்மூர், 21ல் இலந்தங்குழி, 22ல் அயனாபுரம், 23ல் சில்லக்குடி, 28ல் ஜமீன் ஆத்தூர் ஆகிய ஊராட்சிகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் முகாம் நடைபெறும்.
ஆக.6ல் இரூர், 7ல் குரூர், 8ல் கண்ணப்பாடி, 9ல் டி.களத்தூர், 11ல் சிறுவய லூர், 12ல் வரகுபாடி, 13ல் குரும்பாபாளையம், 14ல் பிலிமிசை, 16ல் கீழமாத்தூர், 18ல் ஜமீன்பேரையூர், 19ல் கூத்தூர், 20ல் அருணகிரிமங்கலம், 21ல் நொச்சிக்குளம், 22ல் புஜங்காரயநல்லூர், 23ல் ராமலிங்கபுரம், 28ல் கொளத்தூர் ஆகிய ஊராட்சிகளில் மதியம் 1 மணி முதல் மாலை 4 மணிவரை கண்புரை நோயாளிகள் கண்டறியும் முகாம் நடை பெற உள்ளது.
மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவர், செயலர்களை தொடர்பு கொள்ளலாம் என்றார்.
-தினகரன்.
Wednesday, July 30, 2014
வ.களத்தூர் செய்தி
சிந்தாதிரிபேட்டையில் உள்ள மாநில இந்து முன்னணி அலுவலகத்துக்கு நேற்று மதியம் ஒரு மர்ம கடிதம் வந்தது. அதை இந்து முன்னணி நிர்வாகிகள் படித்து பார்த்தனர்.
அதில் இந்து இயக்கம் மற்றும் தமிழக பாரதீய ஜனதா தலைவர்களை கொலை செய்யப் போவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இந்து முன்னணி நிர்வாகிகள் மனோகர், பரமேசுவரன், முருகேசன், இளங்கோவன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இன்று காலை சிந்தாதிரிபேட்டை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் இளங்கோ அதை பெற்றுக் கொண்டார். அதில் கூறிஇருப்பதாவது:–
"இஸ்லாத்தை இழிவு படுத்தியும் எங்கள் அன்பு மதத்தை கொச்சைப் படுத்தியும் பேசி, துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்து வருபவர்களை ‘குர்பானி’ இடுவோம். சென்னையில் பி.ஜே.பி.யில் ‘தீ’ என்றாலும் தஞ்சையில் ‘ம்’ என்றாலும், சிவகங்கையில் ‘ஜா’ என்றாலும், கோவையில் ‘ஸ்’ என்றாலும், திருச்சியில் ‘ர்’ என்றாலும், விருதுநகரில் ‘தீ’ என்றாலும் முன்னணியில் சென்னை ‘ன்’ என்றாலும், திருப்பூர், கோவையில் ‘ணி’ என்றாலும், நெல்லையில் ‘ஜா’ என்றாலும் அனைவரும் துன்பத்துக்கு ஆளாவர்கள்.
இப்படிக்கு இம்மாமலை சகோதரர்கள், மத்வா குழு" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அனுப்புவோர் விலாசம் பாலக்காடு, கேரளா என்று எழுதியுள்ளது.
இந்த மிரட்டல் கடிதத்தில் 9 பெயர்கள் குறிப்பிட்ட எழுத்துக்கள் மூலம் மறைமுகமாக சொல்லப்பட்டுள்ளது. சுரேஷ் குமார் கொலை ஏற்படுத்திய பரபரப்பு அடங்கும் முன்பு இந்த மர்ம கடிதம் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
![]() |
| பத்வா கடிதம். |
![]() |
| பத்திரிக்கைச் செய்தி |
![]() |
| மாலைமலர் |
Monday, 28 July 2014
Monday, July 28, 2014
வ.களத்தூர் செய்தி
The riot started after an old prolonged quarrel between Muslims and Sikhs bodies over a religious land - Guru Singh Sabha on Gurdwara Road of Qutub Sher area. The roots of this riot go back months when the land for Sikhs Gurudwara was claimed by a local Muslim body.The concerned parties took the matter to courts and after years of deliberation the local court ruled in favour of Sikhs, declaring the Muslims’ claim as illegal trespassing on Gurudwara land.
As reports last came in, 50 shops of the majority community were burnt to cinder. Prohibitory orders under section 144 of CrPC have been invoked in the district and curfew has been clamped in six areas. Unfortunately, the local police have lost the trust of the people after earlier such incidences of riots. People suspect that the local police will not touch Muslim rioters unless Azam Khan lets them. Some eyewitnesses report that Muslim mobs in thousands came and surrounded the Police Station in the area and assaulted the police personnel as well.
As a matter of fact the Muslim rioters were spotted assaulting the police leading to complete mayhem on the streets.
Sunday, 27 July 2014
Sunday, July 27, 2014
வ.களத்தூர் செய்தி
ஆணைகளை வழங்கி மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது பேசியது:
பெரம்பலூர், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியங்களுக்கான கல்விக்கடன் வழங்கும் முகாமில், பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வங்கி அலுவலர்களும் பங்கேற்றனர்.
664 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டதில், 586 பேரின் விவரங்கள் கணினிகள் மூலம் பதியப்பட்டு, அவர்களுக்கு ஒப்புகைச் சீட்டுகள் வழங்கப்பட்டன.
வங்கியாளர்களிடம் கல்விக்கடன் கேட்டு வழங்கிய 537 விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு, மாணவ, மாணவிகளின் கல்லூரிக் கட்டண விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, கல்விக்கடன் பெறுவதற்கு ஏற்பளிப்பு ஆணைகள் வழங்கப்பட்டன.
மருத்துவம், பொறியியல், பாலிடெக்னிக் உள்ளிட்ட தொழிற்கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்று கல்விக்கடன் விண்ணப்பங்கள் அளித்துள்ளனர்.
இவர்களுக்கு தேவையான வருமானம் மற்றும் இருப்பிடச் சான்றிதழ்கள் வழங்க மாவட்ட மின் ஆளுமைத் திட்டத்தின் கீழ் விவரங்கள் கணினியில் உள்ளீடு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட விஏஓ, வருவாய் ஆய்வாளர்களால் கணினியில் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டதன் அடிப்படையில் வட்டாட்சியர்களின் மின் கையொப்பமிட்ட சான்றிதழ்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டன. 68 மாணவ, மாணவிகளுக்கு உடனடி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
வேப்பூர், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கான கல்விக்கடன் முகாம் ஆக. 2-ல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது என்றார் அவர்.
முகாமில், பெரம்பலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர்.பி. மருதராஜா, எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் வி. ராஜன்துரை, சார் ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி, ஒன்றியக் குழுத் தலைவர் து. ஜெயக்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் அய்யம்பெருமாள், முன்னோடி வங்கி மேலாளர் சந்திரசேகரன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மேலாளர் என். ராஜா (தஞ்சை), கனரா வங்கி உதவிப் பொது மேலாளர் ராமசாமி, முதன்மை மேலாளர் சுரேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
Sunday, July 27, 2014
வ.களத்தூர் செய்தி
பெரம்பலூர் அருகே சனிக்கிழமை பிடிபட்ட மலைப்பாம்பு சிறுவாச்சூர் காப்புக் காட்டில் விடப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே மலைப்பாம்பு இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்புபணிக் குழுவினருக்கு சனிக்கிழமை தகவல் அளித்தனர். அதைத் தொடர்ந்து, நிலைய அலுவலர் ஜெகதீஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்குச் சென்று மலைப்பாம்பை பிடித்து, வனச்சரக அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். வனச்சரகர் ரவீந்திரன் தலைமையிலான வனத்துறையினர் சுமார் 9 அடி நீளம் கொண்ட அந்த மலைப்பாம்பை சிறுவாச்சூர் காப்புகாட்டில் உள்ள பெரியசாமி கோயில் பகுதியில் விட்டனர்.
-தினமணி. பட உதவி-வசந்த ஜீவா .
Sunday, July 27, 2014
வ.களத்தூர் செய்தி
மத்தியில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்று 60 நாள்கள் நிறைவடைந்துள்ள தினத்தில் இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கும், மக்களுக்கும் உள்ள இடைவெளியை இணைக்கும் பாலமாக இந்த இணையதளம் செயல்படும் என்று மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கு தங்கள் நேரத்தையும், உழைப்பையும் அளிக்க பொது மக்கள் தயாராக உள்ளனர். இதை கடந்த 60 நாள் ஆட்சியில் எனது அரசு உணர்ந்துள்ளது.
ஆகையால்தான், அரசு நிர்வாகத்துக்கு நாட்டு மக்கள், தங்கள் கருத்துகளையும், ஆலோசனைகளையும் வழங்குவதற்காக இந்த புதிய இணையதளம் (ம்ஹ்ஞ்ர்ஸ்.ய்ண்ஸ்ரீ.ண்ய்) தொடங்கப்பட்டுள்ளது.
இதில், கங்கை நதியைத் தூய்மைப்படுத்துதல், திறன் மேம்பாடு போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்து, மக்கள் தங்களின் கருத்துகளை பதிவு செய்யலாம். இது அரசு நிர்வாகத்துக்கும், பொது மக்களுக்கும் உள்ள இடைவெளியை இணைக்கும் பாலமாக செயல்படும். பொதுமக்கள் பங்களிப்பில்லாமல் ஜனநாயகம் எப்போதும் வெற்றி பெறாது.
மக்களின் பங்களிப்பு தேர்தலுடன் நின்றுவிடக்கூடாது. இந்த இணையதளத்தை நடைமுறைப்படுத்தியுள்ள மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை, அதைத் தொடர்ந்து கையாளும். தொழில்நுட்ப அடிப்படையிலான இந்த இணையதளம், நல்லாட்சிக்கு மக்களும் பங்களிப்பு செய்யும் வகையில் வாய்ப்பு வழங்கும் என்று செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
3 மாதங்களில் ஆய்வு: இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலர் ஆர்.எஸ். சர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில், "கங்கை நதியைத் தூய்மைப்படுத்துதல், பெண் குழந்தைகளுக்கான கல்வி, சுத்தமான இந்தியா, திறன் மிக்க இந்தியா, வேலைவாய்ப்பு மற்றும் கணினிமயமாக்கப்பட்ட இந்தியா என ஆறு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க அந்த இணையதளத்தில் தற்போதைக்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து மக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டு அவர்களின் கருத்துகள், ஆலோசனைகள், எண்ணங்கள் பெறப்படும்.
அவை நிபுணர்கள் குழுவில் வைக்கப்பட்டு, விவாதம் நடத்தப்படும். அதில் ஏற்றுக் கொள்ளப்படும் கருத்துகள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளப்படும். இந்த இணையதளத்தின் செயல்பாடு குறித்து 3 மாதங்களில் ஆய்வு செய்யப்படும். அரசு நிறைவேற்றியுள்ள திட்டங்கள், கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றின் மீதும் மக்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யலாம்' என்று கூறினார்.
கருத்து பதிவு செய்வது எப்படி?: இந்தப் புதிய இணையதளத்தில் ஆங்கிலம், ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் தங்களது கருத்துகளைப் பதிவு செய்யலாம். இதற்காக "ஆலோசனை', "செயல்' என்ற இரு பிரிவுகள் இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.
அதைச் சொடுக்கி (கிளிக் செய்து) தங்கள் விவரங்களைப் பதிவு செய்து "பயன்பாடு பெயர்' மற்றும் "கடவுச் சொல்' பெறலாம். அதைக் கொண்டு, பல்வேறு விவகாரங்களில் கருத்துகளை பதிவு செய்யலாம்.
அரசுச் செயலர்களுடன் ஆலோசனை: இதனிடையே, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஒரு நடவடிக்கையாக, உள்கட்டமைப்பு தொடர்பான முக்கிய அமைச்சகங்களின் செயலர்களுடன் மோடி சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் முக்கிய திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் மின்னுற்பத்தி, ரயில்வே, சாலைப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, பெட்ரோலியம், விமானப் போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், மாற்று எரிசக்தி, நிலக்கரி உள்ளிட்ட அமைச்சகங்களின் செயலர்கள் பங்கேற்றனர்.
மத்தியத் திட்டக் குழுவின் செயலர் சிந்துஸ்ரீ குல்லர், 2013-14ஆம் ஆண்டில் முக்கிய அமைச்சகங்களின் செயல்பாடுகள் குறித்தும், நிகழாண்டில் அந்தத் துறைகளுக்குள்ள சவால்கள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது.
நிகழாண்டில் 300 கி.மீ. தூரம் புதிதாக ரயில் பாதை அமைப்பதற்கும், 700 கி.மீ. இரட்டை வழி ரயில்பாதை அமைப்பதற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின் நிலையங்களுக்கு நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்தும், 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு 2017ஆம் ஆண்டுக்குள் அகண்ட அலைவரிசை சேவை வழங்குவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Saturday, 26 July 2014
Saturday, July 26, 2014
வ.களத்தூர் செய்தி
![]() |
| பட உதவி- மார்டின். |
பெரம்பலூர் மாவட் டம், வேப்பந்தட்டை தாலுகாவில் வெண்பாவூர், பெரியவட கரை, பாண்டகப்பாடி, வெள்ளுவாடி, காரியானூர், கை.களத்தூர், அய்யனார் பாளையம், அரசலூர், மேட்டுப்பாளையம், பேரையூர் ,வி.களத்தூர் மற்றும் குன்னம் தாலுகா, சித்தளி, பேரளி, ஆலத்தூர் தாலுகா பாடாலூர், நக்கசேலம் ஆகியபகுதிகளில் வனத்துறைக்குச் சொந்தமான சமூக வனக்காடுகள் மற்றும் காப்புக்காடுகள் ஆயிரக்கணக் கான ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்தக்காடுகளில் அரியவ கை புள்ளிமான்கள் ஆயிரக்கணக்கில் வசித்து வருகின்றன.
மழையின்றி வனப்பகுதி வறண்டு காணப்படுவதால் வனத்திற்குள் தங்கியுள்ள மான்கள் உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் அருகிலுள்ள வயல் பகுதிகளுக்கு வரு வதுண்டு. வயல்களும் வறண்டு விட்டதால் ஊருக்குள் மான்கள் புகுந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு நுழைகின்ற மான்களை தெருநாய்கள் துரத்துவதும், கடித்து கொல்வதும் தொடரும் சம்பவங்களாகி விட்டன. இந்நிலையில் நேற்று காலை வேப்பந்தட்டை தாலுகா சின்னாறு பகுதிக்கு வந்த ஒரு புள்ளிமானை தெருநாய்கள் துரத்தி, துரத்தி கடித்துள்ளன.
இதனால் படுகாயமடைந்த மான் தாவிச்செல்லும்போது தவறி விழுந்து கால்கள் முறிந்ததால் எழுந்து ஓடமுடியாமல் தவித்தது. இதனைப் பார்த்த சிலர் பெரம்பலூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
மாவட்ட வனஅலுவலர் ஏழுமலை, வனச்சரகர் ரவீந்திரன் ஆகியோர் உத்தரவுப்படி, வனவர் வீராசாமி, வனகாப்பாளர்கள் கருப்பையா, திருநாவுக்கரசு, திருஞானம்ஆகியோர் சின்னாறு பகுதிக்குச் சென்று படுத்து கிடந்த மான்குட்டியை மீட்டு, வாலிகண்டபுரம் பகுதியிலுள்ள கால்நடை மருத்துவர் அஞ்சலி மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்க வண்டியில் எடுத்து வந்தனர். அது 2 வயது கொண்ட ஆண் மான் ஆகும். மிகவும் மிரண்டு போயிருந்த மான்குட்டி வழியிலேயே பரிதாபமாக இறந்தது. பிறகு அந்த மான்குட்டி பேரையூர் வனப்பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனைக்குப் பிறகு புதைக்கப்பட்டது.
Thursday, 24 July 2014
Thursday, July 24, 2014
வ.களத்தூர் செய்தி
பெரம்பலூரில் ஜப்தி செய்யப்பட்ட டிராக்டரை திரும்ப வழங்கிட வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் சட்டையில்லாமல் பட்டை, நாமம் போட்டு ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டு போராட் டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் அருகே உள்ள கண்ணாப்பாடி கிராமத்தை சேர்ந்த அருணாச்சலம் மகன் செந்தில்(40). விவசாயி. இவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் டிராக்டர் வாங்குவதற்காக பெரம்பலூர் ஸ்டேட் வங்கியில் விவசாய தவணை கடனாக ரூ.6 லட்சம் பெற்றுள்ளார்.
அதில் ரூ.1.5 லட்சத்தை திரும்ப செலுத்தியுள்ளார். இந்நிலையில் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி ஸ்டேட் வங்கி அதிகாரிகள் செந்திலின் டிராக்டரை பறிமுதல் செய்து ரூ..1.70 லட்சத்துக்கு ஏலம் விட் டனர். எவ்வித அறிவிப்பும் இன்றி டிராக்டரை பறிமுதல் செய்த வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரியும், டிராக்டரை திரும்ப வழங் கிட வலியுறுத்தியும் செந்தில் கடந்த 14ம் தேதி கலெக்டர் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி ராமசுப்பிரமணியனிடம் மேல் முறையீடு செய்துள்ளார். செந்தில் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்திட ஐ.ஜி உத்தரவிட்டுள்ளார். இது வரை பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பாரதீய கிசான் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் அய்யாகண்ணு தலைமை யில் சட்டை அணியாமல், பட்டை நாமம் போட்டு பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியிலுள்ள ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பி, தரையில் அமர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கி அமைந்துள்ள வெங்கடேசபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட் டது. அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் இருக்க ஏராள மான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
போராட்டம் நீண்ட நேரம் தொடர்ந்ததால் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சந்திரசேகர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரச்னை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொ டர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
ஒரு பைசா கூட செலுத்தவில்லை!
ஸ்டேட் வங்கி மேலாளர் கூறுகையில், கண்ணாப்பாடி கிராமத்தை சேர்ந்த விவசாயி செந்தில் கடந்த 2009ல் டிராக்டர் வாங்குவதற்காக சேவை கட்டணம் ரூ.7500யை செலுத்தி விட்டு, பெரம்பலூர் ஸ்டேட் வங்கியில் ரூ.6 லட்சம் விவசாய கடன் பெற்றார். கடனை திரும்ப செலுத்தாததால் கடனாக பெற்ற அசல் ரூ.6 லட்சம், வட்டியும் சேர்த்து சுமார் ரூ.13 லட்சத்து 29 ஆயிரம் திரும்ப செலுத்த வேண்டியுள்ளது.தவணை தொகை செலுத்த கோரி என செந்திலுக்கு கடந்த 18.10.12 மற்றும் 31.7.13 ஆகிய தேதிகளில் நோட்டீசும், 10.2.14ல் டிராக்டரை பறிமுதல் செய்வதற்கான நோட்டீசும் அனுப்பியும் இதுவரை ஒரு பைசா கூட செலுத்தவில்லை. இதனால் சட்ட ரீதியாக கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி டிராக்டரை பறிமுதல் செய்தோம். மீதமுள்ள கடனை செலுத்திட கடந்த ஜூன் மாதம் 7ம் தேதி வழக்கறிஞர் நோட்டீசும் அனுப்பியுள்ளோம். ஆனால் இதுவரை செந்தில் எவ்வித தகவலும் தெரிவிக்காமல் விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்றார்.
-தினகரன்.
Wednesday, 23 July 2014
Wednesday, July 23, 2014
வ.களத்தூர் செய்தி
பெரம்பலூர், : கல்விக்கடன் வழங்கும் முகாமுக்கான விண்ணப்ப படிவங்ளை வங்கிக் கிளைகளில் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளின் உயர் கல்விக்காக கலெக்டர் அலுவலகத்தில் இம்மாதம் 26ம் தேதி முதற்கட்டமாக கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இம் முகாமில் 21 வங்கிகளைச் சேர்ந்த 68 வங்கிக் கிளைகள் கலந்துகொண்டு, பெரம்பலூர், வேப்பந்தட்டை வட்டாரங்கள் மற்றும் குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி பேரூராட்சி பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கடன் வழங்க உள்ளன.
இதற்கான விண்ணப்பங்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம், புதுவாழ்வுத் திட்டம், பெரம்பலூர், வேப்பந் தட்டை, வேப்பூர், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வழங்கப்பட்டு வரு கின்றன.
பெரம்பலூர், வேப்பந்தட்டை பகுதிகளில் செயல்பட்டு வரும் அனைத்து வங்கி கிளைகளிலும் விண்ணப்பங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய ஏதேனும் உதவி தேவைப்படுபவர்களுக்காக ஊராட்சிஒன்றிய அலுவலகங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முகாம் குறித்த மேலும் விவரங்களுக்கு, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளரை 94422 71994 என்ற செல்போன் எண்ணிலும், முகாம் ஒருங்கிணைப்பாளரை 97885 32233 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் தரேஷ் அஹமது வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
-தினகரன்.
Wednesday, July 23, 2014
வ.களத்தூர் செய்தி
திருத்தணிக்கு காவடி எடுத்த பக்தர்கள் மீது காவல் ஆய்வாளர் காட்டுமிராண்டித் தாக்குதல்: காது ஜவ்வு கிழிந்த நிலையில் தினமணி நிருபர் மருத்துவமனையில்!
திருத்தணிக்கு ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு காவடி எடுத்துச் சென்ற பக்தர்கள் மீது அங்கே பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் ஒருவர் தகாத வார்த்தைகளால் பேசி காட்டுமிராண்டித் தனமான தாக்குதலைத் தொடுத்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட தினமணி திருவண்ணாமலை நிருபர், காது ஜவ்வு கிழிந்து, இடது காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இது குறித்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப் பட்டது.
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனுக்கு ஆர்.டி.ஓ. விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
காவல் ஆய்வாளரின் காட்டுமிராண்டித் தனமான நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட சரவணப் பெருமாள், தனது புகார் மனுவில் தெரிவித்துள்ள விவரம்:
நான் திருவண்ணாமலையில் தினமணி நாளிதழ் மாவட்ட தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன். 21.7.2014ம் தேதி காலை 9.45க்கு திருத்தணி முருகன் கோயிலில் காவடி சாத்துபடி செய்வதற்காக எங்கள் ஊர் பொதுமக்களுடன் வந்தேன். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், உற்ஸவர் முருகர் வைக்கப்பட்டுள்ள கோயில் முதல் தளத்தின் படியேறும் பகுதிக்கு அருகே காவடியை கீழே வைத்து சாத்துபடி செய்ய முடியவில்லை. பக்தர்கள் தள்ளிக்கொண்டே வந்துவிட்டனர்.
எனவே, உற்ஸவர் முருகர் சந்நிதிக்கு எதிரில் இருந்து வரிசையாக 3வது உண்டியல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் நான் கொண்டு வந்த மயில் காவடியை கீழே வைத்தேன். உடனே காவல் ஆய்வாளர் அய்யனாரப்பன் என்பவர் வந்து காவடியை எடுடா நாயே என்றார்.
நான், சார் ஒரு நிமிடம் சார். சாமி கும்பிட்டு விட்டு எடுத்துக் கொள்கிறேன் என்றேன். இதற்கு, என்னடா சொன்னா.. எடுக்க மாட்டியா என்று கூறிக் கொண்டே, இந்த ஆண்டு புதிதாக செய்து எடுத்து வந்த என்னுடைய மயில் காவடியை லத்தியால் கீழே தள்ளி உடைத்தார். மயில் இறகுகள் உடைவதைப் பார்த்து, சார். சார்.. வேண்டாம் சார். காவடியை எடுத்துக் கொள்கிறேன் என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, கண்ணிமைக்கும் நேரத்தில் லத்தியால் எனது வயிற்றில் குத்தினார்.
வலி தாங்காமல் அலறிய நான், லத்தியை ஒரு கையில் பிடித்துக் கொண்டு, சார், நான் தினமணி நிருபர் என்றேன்.
இதற்கு, நிருபர் என்றால் பெரிய மயிரா, போடா (....) என்று திட்டி கொண்டே, ஆய்வாளர் அய்யானரப்பன் அவரது வலது கையால் குற்றவாளிகளைத் தாக்குவது போல் என்னுடைய இடது கன்னத்தில் ஓங்கி அடித்தார்.
தொடர்ந்து, எனது இடது நெஞ்சிலும் ஓங்கிக் குத்தினார். நான் நிலை குலைந்து கண் கலங்கியதைப் பார்த்துத் தடுக்க வந்த என் அம்மாவை, போடி நாயே.. என்று சொல்லி அடித்தார். மேலும், உன்னை ஜெயிலில் போட்டு விடுவேன்.. போடா.. (....) பையா என்று சொல்லி என் தம்பியை அடித்தார்.
என் அப்பாவையும், தடுக்க வந்த ஊர்க்காரர்களையும் தள்ளி விட்டதுடன், லத்தியால் குத்தினார். மேலும், உங்களை எல்லாம் கூண்டோடு ஜெயிலில் போட்டு விடுவேன். மரியாதையாக இங்கிருந்து போய் விடுங்கள் என்று எங்கள் ஊர்க்காரர்களை கடுமையாக மிரட்டினார்.
உங்களைப் பற்றி உயர் அதிகாரிகளிடம் புகார் செய்வேன் என்று நான் சொன்னதற்கு, நீ, எஸ்.பி., டி.ஐ.ஜி., ஐஜி என எவனிடம் வேண்டுமானாலும் போய் சொல். என் மயிரை ஒன்றும் புடுங்க முடியாது. என்னை போட்டோ எடுத்து எந்த பேப்பரில் வேண்டுமானாலும் போடு என்று வலிய வந்து என்னிடம் மல்லுக்கு நின்றார்.
ஆய்வாளர் அய்யனாரப்பன் அடித்ததில் என்னுடைய காது கேட்கவில்லை. கொய்ன் என்று சத்தம் வருகிறது. நெஞ்சு வலி அதிகமாக உள்ளது. எனவே ஆய்வாளர் அய்யனாரப்பன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இது தொடர்பாக, கோயில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த திருவள்ளூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஐயாவிடம் புகார் தெரிவிக்க ஊர் பொதுமக்கள் திரண்டு சென்றோம். அவர் அங்கிருந்த காவலர்களிடம் போய்ச் சொல்லுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.
என்னிடமும், எங்கள் ஊர் பொதுமக்களிடமும் விசாரணை நடத்திய காவல் ஆய்வாளர் சிகாமணி என்பவர், உங்கள் பிரச்னை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வரை எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது. எனவே, எழுத்துபூர்வமாக புகார் கொடுங்கள். உரிய நடவடிக்கையை நான் எடுக்கிறேன் என்றார்.
இதன்பிறகு, மேற்கண்டவாறு நான் புகார் கொடுத்தேன். பின்னர் காவல் ஆய்வாளர்கள் சிலரும், திருத்தணி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சு.மணியழகன் ஐயா அவர்களும் என்னிடம் பேசினர். என்னை அடித்த காவல் ஆய்வாளர் அய்யனாரப்பனை அழைத்து வந்தனர். அப்போது, நடந்த சம்பவத்துக்கு ஆய்வாளர் அய்யனாரப்பன் வருத்தம் தெரிவிக்கவே இல்லை.
காவடி எடுப்பதற்காகவே கடந்த 10 நாட்களாக முருகர் பக்திப் பாடல்களைப் பாடிப் பழகி, அசைவ உணவுகளைத் தவிர்த்து, பக்தி சிரத்தையுடன் ஞாயிறு, திங்கள் கிழமைகளில் (ஜூலை 20,21) உண்ணாநோன்பு விரதம் இருந்து, இந்த வருடம் ரூ.3 ஆயிரம் செலவில் புதிதாக செய்த மயில் காவடியை அந்த முருகப் பெருமானையே தோளில் சுமந்து செல்வதாகக் கருதி பல கிலோ மீட்டர் தூரம் காவடியை தோளில் சுமந்து வந்த என்னையும், எங்கள் ஊர் பொதுமக்களையும் முருகன் சந்நிதியில் பேசக்கூடாத வார்த்தைகளால் திட்டி அவமானப் படுத்திய காவல் ஆய்வாளர் அய்யனாரப்பன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்....
- என்று தனது புகார் மனுவில் குறிப்பிட்டிருக்கும் சரவணப் பெருமாள், “என்னை அடித்த காவல் ஆய்வாளர் அய்யனாரப்பன், யாரிடமும் சொல்.. என்னை ஒன்றும் செய்யமுடியாது என்று என்னை மிரட்டியபடியே தகாத வார்த்தைகளால் திட்டியபடி முன்னே வந்த போது, உடன் இருந்தவர் எடுத்த படம் இது” என்று அவரின் புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.
நன்றி- https://www.facebook.com/tamilseythikal?fref=photo
Wednesday, July 23, 2014
வ.களத்தூர் செய்தி
செக்யூலரிசம் என்பது மதச் சார்பற்றது, சமயச் சார்பற்றது, மார்க்க சார்பற்றது என்ற அர்த்தம் பெற்றது. சார்பற்றது பற்றிய சரியான புரிதல் இல்லாமல், அது மதத்திற்கு எதிரானது என்பதாகவே புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது நமது துரதிருஷ்டம். இந்தப் புரிதல், அரசே மதத்திற்கு எதிரானது என எண்ணுமாறு செய்துவிட்டது.
இந்தியாவில் பெரும்பான்மையானவர்கள் ஹிந்துக்கள். இவர்கள் 70 சதவீதம் பேர். எண்ணிக்கையில் சொன்னால் 80 கோடி பேர். இவர்களோடு ஒப்பிடுகிற பொழுது இஸ்லாமியர்கள் 14 சதவீதம். ஏறக்குறைய 15 கோடி பேர். இவர்களைச் சிறுபான்மையினர் என்கிறோம்.
இஸ்லாம் மதத்தின் ஆட்சி நடக்கும் பாகிஸ்தானின் ஜனத்தொகை 19 கோடி. இதே போல்தான் முஸ்லிம் நாடான வங்கதேசத்தின் ஜனத்தொகை 15 கோடி. அந்த நாடுகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினர். அங்கு ஹிந்துக்கள் சிறுபான்மையினர். ஆனால், இந்தியாவில் 15 கோடி முஸ்லிம்கள் இருந்தாலும், அவர்களைச் சிறுபான்மையினர் (Religious Minority) என்றே அரசியல் சட்டப்படி கூறுகிறோம்.
முஸ்லிம்களுக்கு அடுத்து கிறிஸ்தவர்கள் இந்தியாவில் 3 கோடி பேர். சீக்கியர்கள் 2 கோடி பேர், பெளத்தர்கள் 1 கோடி பேர், ஜைனர்கள் 40 லட்சம் பேர். இவர்களெல்லாருமே சிறுபான்மையினர் - அதாவது 80 கோடி ஹிந்துக்களோடு ஒப்பிட்டால்.
மதச்சார்பின்மை என்பது மதங்களுக்கு எதிரானது என்ற புரிதலால், ஹிந்து மதத்தினர் பெரும்பான்மையாக இருந்தும், சிறுபான்மையினரைப் போல சிறப்பாக நடத்தப் படுவதில்லை.
உதாரணத்திற்கு, ஒரு தொடக்கப் பள்ளியையோ, உயர்நிலைப் பள்ளியையோ அல்லது தொழில் கல்லூரியையோ ஹிந்து பெயர் கொண்ட ஒருவர் நிறுவினால், அந்தப் பள்ளி அல்லது கல்லூரியில் ஆசிரியர் பணியிடங்களைச் சுழற்சி முறையில்தான் நிரப்பியாக வேண்டும். அதுவும், அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து பெறப்படும் பட்டியலிலிருந்துதான் ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இடஒதுக்கீட்டு முறையில் உள்ள சிறுபான்மையினருக்கு உரிய பணி இடங்களை, அவர்களில் தகுதியானோர் கிடைக்கும் வரை வேறு ஜாதியினரை நியமிக்காமல் வைக்க வேண்டும்.
இதேபோன்ற கல்வி நிலையத்தை ஒரு கிறிஸ்தவரோ, முஸ்லிமோ, சீக்கியரோ நிறுவினால், இத்தனை விதிகளும் அவர்களுக்குப் பொருந்தாது. இதுதான் சமயச்சார்பற்ற அரசு நடவடிக்கையாக இங்கே நீடித்து வருகிறது.
சமயச் சார்பின்மை (Secularism) கோட்பாட்டிற்கு எதிரானதாக, ஹிந்து மதத்தை வகுப்புவாதம் (Communal) எனப் பேசுகின்றனர். வகுப்புவாதம் என்றால் ஹிந்து வகுப்புவாதம் மட்டும்தானா உள்ளது? மற்ற மத வகுப்புவாதங்கள் இல்லையா?
செக்யூலர் - கம்யூனல் என்ற இந்த இரண்டு சக்திகள் அரசியல் தளத்தில் எதிரும் புதிருமாகச் செயல்படுகின்றன. செக்யூலர் என்பது ஹிந்து மதத்திற்கு எதிரான சக்திகள் என்றும், கம்யூனல் என்பது ஹிந்து மதத் தீவிரவாத சக்திகள் என்றும் பேசப்படுகின்றன.
வாஜ்பாயை பிரதமராக்கிய மக்கள், அவரை வகுப்புவாதியாகப் பார்க்கவில்லை, தேசியவாதியாகத்தான் பார்த்தார்கள். 10 ஆண்டுகளுக்குப் பிறகு நரேந்திரமோடியை பிரதமர் ஆக்கியிருக்கும் மக்களும், அவரை வகுப்புவாதியாகப் பார்க்கவில்லை. தேசியத் தலைவராகவே பார்க்கிறார்கள்.
இந்திய அரசியலில் இந்த செக்யூலரிசம் என்பது நடைமுறையில் ஹிந்து மதத்திற்குப் பாதகமாகவும் சிறுபான்மை மதங்களுக்குச் சாதகமாகவும் கையாளப்பட்டுவிட்டது ஒரு மிகப்பெரிய துயரம்.
செக்யூலரிசத்தை நாம் எங்கிருந்து பெற்றோம் என்பதைப் பற்றி அறிஞர்கள் பலர் கருத்துக் கூறியிருக்கிறார்கள்.
வரலாற்றுப் பேராசிரியர் கே.என். பணிக்கர், ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்குள் இதை நேருஜிதான் புகுத்தினார் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பாவில் ஒரு காலகட்டத்தில் கிறிஸ்துவ மதத்திற்குக் கீழ்ப்படிந்துதான் இங்கிலாந்து ஆட்சி நடந்தது. அன்றைக்கு ஐரோப்பாவில் இருந்த தேவாலயங்கள் அரசாங்கத்தின் மீது செல்வாக்கு செலுத்தி வந்தன. தேவாலயங்களை மீறி அரசாங்கம் செயல்பட முடியாத ஒரு சூழ்நிலையை மத குருமார்கள் உருவாக்கி வைத்திருந்தனர்.
அரசாங்கம் சுயேச்சையாகச் செயல்பட வேண்டுமானால், இந்தத் திருச்சபைகளின் ஆதிக்கத்திலிருந்து அரசாங்கத்தை விடுவித்தாக வேண்டுமென்று தீர்மானித்த அறிஞர்கள் செக்யூலரிசம் என்ற சிந்தனையை உருவாக்கினார்கள்.
செக்யூலரிசத்தைப் பின்பற்றும் ஓர் அரசு, மதத்திற்கு மரியாதை செய்ய வேண்டுமே தவிர, அதன் கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டிய அவசியமில்லை என்றனர். இதுதான் ஐரோப்பாவில் நடந்தது.
லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்த ஜவாஹர்லால் நேரு போன்றவர்களை இப்புதிய கருத்து கவர்ந்ததில் ஆச்சரியமில்லை.
இந்திய தேசம் சுதந்திரமடைந்த பிறகு இது வெறும் குடியரசாக மட்டுமல்ல, பொருளாதார ரீதியில் சமதர்மக் குடியரசாகவும் கலாசார ரீதியில் சமயச் சார்பற்ற குடியரசாகவும் உருவாக வேண்டும் என்று நேருஜி விரும்பினார். அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சட்ட மேதைகளும் அதை ஏற்று அவ்வாறே செய்தார்கள்.
செக்யூலரிசத்தை "மதச் சார்பற்ற கோட்பாடு' என்றே நாம் பிரசாரப்படுத்தி வந்துள்ளோம். மதச்சார்பற்ற அரசு என்பதை மதத்திற்குச் சம்பந்தமில்லாத அரசு என்றும், "சம்பந்தமில்லாதது' என்ற வார்த்தையை "அக்கறையில்லாத' என்றும் காலப்போக்கில் "எதிரானது' என்றும் சில சக்திகள் ஆக்கிவிட்டன.
கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்களும், கடவுள் நம்பிக்கையுள்ள மத போதகர்களும் செக்யூலரிசத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
செக்யூலர் அரசு என்பது மத அக்கறையற்ற அரசு அல்ல. மதங்களுக்கு எதிரான அரசும் அல்ல. சிறுபான்மை மதத்தாரை அச்சுறுத்தும் அரசும் அல்ல. உண்மையில் செக்யூலரிசத்தை சமயச் சார்பற்றது என்பதைவிட, சமய சமத்துவ முடையது என்றே கூற வேண்டும்.
தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் தேர்தல் அறிக்கைகளில் இன்னின்ன பொருள்கள் இலவசமாகத் தரப்படும் என்று அறிவித்துத் தேர்தலைச் சந்திப்பது ஒரு மரபாகவே ஆகிவிட்டது.
இலவசத்தால் எப்படி வாக்குவங்கி உருவாக்கப்படுகின்றதோ, அதேபோல கிறிஸ்தவ மதத்தாரின் வாக்குகளையோ, முஸ்லிம் மதத்தாரின் வாக்குகளையோ ஒன்று திரட்டுவதற்கு அரசியல் கட்சிகள் ஓர் உபாயத்தைக் கையாளுகின்றன.
நாங்கள் ஆட்சி அமைத்தால் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அரசு வேலையிலும் கல்வி நிலையங்களிலும் ஒதுக்குவோம் என்று கூறப்பட்டதையும், அது சட்ட விரோதமானது என நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டதையும் பலமுறை கண்டிருக்கிறோம்.
ஆந்திராவில் முன்பிருந்த காங்கிரஸ் அரசு 30 சதவீத இட ஒதுக்கீட்டில் 5 சதவீதத்தை மத ரீதியில் சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு ஒதுக்கியது. அதனால், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு 25 சதவீதமாகக் குறைந்தது.
இந்த இடஒதுக்கீடு வசதியான முஸ்லிம்களுக்கு அல்ல என்றும், ஏழ்மை நிலையிலுள்ள சுமார் ஒரு கோடி முஸ்லிம்களுக்கு மட்டுமே என ஆந்திர அரசு விளக்கம் அளித்தது. ஆந்திர அரசு அறிவித்த இந்த மத ரீதியான இடஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்தது.
இதேபோல கிறிஸ்தவர்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு செய்தபோது, தமிழ்நாட்டு கிறிஸ்தவ அமைப்புகளே அதை நிராகரித்துவிட்டதும் நினைவு கூரத்தக்கது.
இந்தச் சூழ்நிலையில், கடந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ. கட்சி தனித்து ஆட்சியமைக்கும் அளவுக்கு அறுதிப் பெரும்பான்மை பெற்றது. 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சியோ, எதிர்க்கட்சி ஆகக்கூடிய தகுதியையும் இழந்து நிற்கிறது.
இந்தத் தோல்விக்கான காரணத்தை சென்ற மாதம் பிரேதப் பரிசோதனை செய்த, கை சுத்தத்துக்குப் பெயர் பெற்ற பாதுகாப்புத்துறை முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான ஏ.கே. அந்தோணி, திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் தலைவர் சி.கே. கோவிந்தன் நாயரின் நினைவுநாள் கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர், "காங்கிரசின் மதச்சார்பின்மையில் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை சற்றுச் சரிந்துள்ளது. இதை நாம் பரிசீலிக்க வேண்டும். மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவது காங்கிரஸ் கட்சிக்கு அவசியமாகும்.
மதச்சார்பின்மையைக் கடைப்பிடிப்பதில் கட்சி சறுக்கலைச் சந்தித்ததாக மக்கள் மனதில் சந்தேகம் இருக்கின்றது. அனைத்துப்பிரிவு மக்களுக்கும் சமநீதி கிடைக்கவில்லையோ என்று அவர்கள் சந்தேகிக்கின்றனர். இதை நீக்க வேண்டும்' என்று பேசியுள்ளார்.
இது காலம் கடந்து பேசப்பட்ட மகத்தான உண்மை. இவருடைய பேச்சை ஒரு பிரதான வாக்கு மூலமாகவே எடுத்துக் கொண்டு, சுராஜ்குண்டில் புதிய பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு அரசியல் போதனை செய்த கூட்டத்தில் பேசிய பா.ஜ.க.வின் தலைவர் எல்.கே. அத்வானி, கிறிஸ்தவர் ஏ.கே. அந்தோணியின் பேச்சைக் கபடமில்லாத ஒரு வெள்ளைப்பேச்சு' (Plain - Speak) என்று வர்ணித்திருக்கிறார்.
அதோடு நிற்காமல், காங்கிரஸ் கட்சி, தான் கடைப்பிடித்து வந்த செக்யூலரிசத்தை அமில சோதனைக்கு உள்படுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டி, பா.ஜ.க. எப்போதும் கூறி வந்த ஒன்றை நினைவு படுத்தியுள்ளார்.
செக்யூலரிசத்தில் போலி, அசல் என இரண்டு உண்டு. காங்கிரஸ் கட்சி கடைப்பிடித்தது போலி செக்யூலரிசம் (Pseudo Secularism). பா.ஜ.க. கடைப்பிடித்தது மத சமத்துவமான அசல் செக்யூலரிசம். அசல் செக்யூலரிசத்தில் வாக்கு வங்கி இல்லை, இடஒதுக்கீடு இல்லை, சலுகை இல்லை, சிறுபான்மை - பெரும்பான்மை என்ற வரையறை இல்லை.
ஏ.கே. அந்தோணி பேசியதை வழிமொழிந்து காங்கிரஸ் தலைவர்களும் பேசினால்தான், அந்தோணியின் பேச்சுக்கு மரியாதை ஏற்படும். அந்தோணியை வழிமொழிந்து காங்கிரஸ் தலைவர்கள் பேசுகிறார்களோ, இல்லையோ, நாடு நலம் பெற நாம் பேச வேண்டும்.
Wednesday, July 23, 2014
வ.களத்தூர் செய்தி
பெரம்பலூர் அருகே கன்றுக்குட்டியுடன் பசுவைத் திருடிய வாலிபரை பொதுமக்கள் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
பெரம்பலூர் மாவட் டம், எளம்பலூர் அடுத்த உப்போடை பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் தனக்குச் சொந்தமான 4 பசு மாடுகள், 2 கன்றுக்குட்டிகள் ஆகியவற்றை வீட்டுக்கு பின்பக்கம் கட்டி வைத்திருந்தார். நேற்று அதிகாலை 2.30 மணியள வில் எழுந்து வந்து பார்த்த போது, பசு மாடு ஒன்றையும், கன்றுக்குட்டியையும் காணவில்லை. இதனால் பதறிய அவர் சுற்றுப்பகுதியில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனிடையே பெரம்பலூர் அடுத்த செல்வபுரம் பகுதியில் உள்ள ரோவர் இன்ஜினியரிங் கல்லூரி பின்புறம் ஒருவர், பசு மற் றும் கன்றுடன் அதிகாலை 3 மணியளவில் நடந்து சென்ற கொண்டிருந்தார். அப்போது பசு தொடர்ந்து கத்தியது சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்த சிலர் எழுந்து வந்து அவரை விசாரித்தனர். அப்போது அவர் எளம்பலூரை சேர்ந்த ராமசாமி என்பவரிடம் அவற்றை விலைக்கு வாங் கித் வருவதாகக் கூறி னார். இருந்த போதும், அவ ரது பேச்சு முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து எளம்ப லூரை சேர்ந்தவர்களுக்கு போன் செய்து கேட்ட போது, ராமசாமி என்ற பெயரில் யாரும் இல்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து, பசுவை யும், கன்றுக்குட்டியுடன் வந்த அந்நபரை பொதுமக் கள் "முறையாக" விசாரித்த போது, அவர் சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள வடக்குமரை கிராமத்தை சேர்ந்த முருகன் (32) என்பதும், பசுவையும், கன்றுக்குட்டியையும் அவர் திருடி வந்ததும் தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரை கட்டி வைத்து சரமாரியாக தர்மஅடி கொடுத்தனர்.
பின்னர், அவர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த பெரம்பலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீசார் விசா ரணை நடத்தி வருகின்ற னர்.
இதுகுறித்து கேள்விப்பட்ட மாட்டின் உரிமையாளர் ஆறுமுகமும் காவல் நிலையம் சென்று மாடு, கன்றுக்குட்டியை மீட்டு சென்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பட உதவி-வசந்த ஜீவா , தினமணி செய்தி.
RSS Feed
Twitter





































