Wednesday, 19 November 2014

சென்னையிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் தமிழக-ஆந்திர கடற்பரப்பு எல்லையில் இருக்கும் ஒரு சிறிய தீவு பழவேற்காடு. 16-ம் நூற்றாண்டில் போர்சுகீசியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பழவேற்காடு, பின்னர் டச்சுக்காரர்களின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் ஆக்கிரமிப்பு அதிகரித்த பிறகு அவர்கள் வசம் வந்தது.
இங்கே, 11-ம் நூற்றாண்டில் பிற்காலச் சோழர்களால் கட்டப்பட்ட சமய ஈஸ்வரர் ஆலயமும், 13-ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசால் கட்டப்பட்ட ஆதி நாராயண பெருமாள் ஆலயமும், உள்ளன. இவை மட்டுமல்லாமல், டச்சுக்காரர்களின் இடிந்த கோட்டைகள், கொத்தளங்கள் மற்றும் கல்லறைகள் இருக்கின்றன. மேலும் இது ஒரு பறவைகள் சரணலாயமாகவும் உள்ளது. ஆகவே, பழவேற்காடு ஒரு சிறந்த சுற்றுலாத்தலமாக இருக்கிறது.
Pazhaverkadu-Kovilkal-Vazhakku-1

Pazhaverkadu-Kovilkal-Vazhakku-2
மேற்கூறப்பட்ட இரண்டு கோவில்களையும் சீரமைக்கும் பணியில் அறநிலையத்துறை ஈடுபட்டிருந்த நிலையில், சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை இம்மாதம் 4ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கோவில் சீரமைப்புப் பணிக்குத் தடையுத்தரவு பிறப்பித்தது.
வழக்கின் பின்னணி
பழவேற்காடு சுற்றுலாத்தலமாக இருந்தாலும், தொல்லியல் துறை டச்சுக் காரர்களின் கோட்டையையும் கல்லறைகளையும் பராமரிக்கக் காண்பிக்கும் ஈடுபாட்டை, பழமையையும் பெருமையையும் வாய்ந்த நமது கோவில்களைப் பராமரிப்பதில் காண்பிக்கவில்லை. சொல்லப்போனால், இரண்டு ஆலயங்களும் நமது கலாச்சார மாண்பையும், கட்டிடக்கலையின் சிறப்பையும், சிற்பக்கலையின் பெருமையையும் பகர்கின்றதாக இருக்கும்போது, டச்சுக் காரர்களின் கட்டிடங்கள் நமது அடிமை வாழ்வைச் சித்தரிக்கும் சின்னங்களாகத்தான் இருக்கின்றன என்பதே உண்மை. ஆனால் தொல்லியல் துறையானது அந்த அடிமைச் சின்னங்களைப் பாதுகாத்துப் பராமரிக்கக் காண்பித்த ஈடுபாட்டை இவ்விரண்டு ஆலயங்களையும் பாதுகாக்கவும் பராமரிக்கவும் காண்பிக்கவில்லை.
Pazhaverkadu-Kovilkal-Vazhakku-4
எனவே நாளடைவில் இரண்டுகோவில்களும் சீரழிந்து, புதர்களால் சூழப்பட்டு, கோபுரங்களில் செடிகள் முளைத்து பாழடைந்து போயின. இந்நிலையில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சமய ஈஸ்வரர் கோவிலை அறநிலையத்துறை கையகப்படுத்திக் கொண்டது. அதன் பின்பும் கோவிலைச் சீரமைக்க அறநிலையத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோவில்களின் நிலையைக் கண்டு மனம் வருத்தமுற்ற ஊர் மக்கள், மீனவர் சமுதாயத்தின் உதவியுடனும் ராமகிருஷ்ணா மடத்தின் ஆதரவுடனும், கோவில்களைச் சுற்றியிருந்த புதர்களையும் செடிகொடிகளையும் அகற்றி, தங்களால் முடிந்த அளவுக்குச் சீரமைத்தனர். எந்தப் பணியையும் முன்னெடுத்துச் செய்யாமல் இருந்த அறநிலையத்துறை, ஊர்மக்கள் நன்றாக சீரமைத்த பிறகு, ஆதி நாராயண பெருமாள் கோவிலையும் கையகப்படுத்திக்கொண்டது.
இதனிடையே 13வது நிதி ஆணையம் (13th Finance Commission) தமிழகத்தில் உள்ள பாரம்பரிய கட்டிடங்களின் பாதுகாப்பிற்காக ரூபாய் 250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது. அதிலிருந்துரூபாய் 52 லக்ஷம் பழவேற்காடு ஆதி நாராயண பெருமாள் கோவிலின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்காக அறநிலையத்துறைக்கு வழங்கப்பட்டது. இதனால் கோவில் ஓரளவிற்குத் தன்னுடைய பழைய பெருமைமிகு நிலைக்குத் திரும்பும் என்று ஊர் மக்களும் பக்தர்களும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ஒதுக்கப்பட்ட பணத்தைக்கொண்டு கோவிலைச் சீரமைக்கும் பெயரில் புல்டோசர் வைத்து கோவிலைத் தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்ட அறநிலையத்துறை, பக்தர்களின் நம்பிக்கையையும் சேர்த்து தகர்த்து எறிந்தது.
Pazhaverkadu-Kovilkal-Vazhakku-10
அறநிலையத்துறையின் அராஜகப் போக்கைப் பொறுக்காமல்தான், கோவில் பாதுகாப்பைத் தன் தலையாய நோக்கமாகக் கொண்டு பணியாற்றி வரும் ஸ்ரீகுமார் என்கிற பக்தர், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடை உத்தரவு பெற்றார்.
கோவில்களின் அற்புதமும் அறநிலையத்துறையின் அலட்சியமும்
ஆதி நாராயண பெருமாள் கோவில், சமய ஈஸ்வரர் கோவில் ஆகிய இரண்டு கோவில்களுமே செம்புறைக்கற்களைக் கொண்டு கட்டப்பட்டவை. செம்புறைக்கற்களுக்கு செம்பூரான்கற்கள் என்றும் பெயர். இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆங்கிலத்தில் LATERITE STONES என வழங்கப்படுகிறது. தமிழகத்தில் கிரானைட் கற்கள்தான் உண்டே தவிர செம்புறைக்கற்கள் கிடையாது. எனவே இவை கர்நாடக, கேரள அல்லது ஆந்திரப் பகுதிகளில் இருக்கும் செம்புறைக்கற்களைக் கொண்டு கட்டப்பட்டவையாக இருக்க வேண்டும்.
நவீன தொழில்நுட்பம் வளர்ச்சி பெறாத 11 மற்றும் 13ம் நூற்றாண்டுகளில் அண்டைய பிராந்தியப் பகுதிகளிலிருந்து செம்புறைக்கற்களை பெருமளவில் கொண்டு வந்து, கோவிலின் ஒவ்வொரு நிலையையும் முறையாக நிர்மாணித்து, ஒவ்வொரு சிற்பத்தையும் கவனமாகப் பார்த்துச் செதுக்கி, ஒவ்வொரு மண்டபத்தையும் சரியாகக் கணக்கிட்டு கட்டுவது என்பது சாதாரண காரியம் கிடையாது. அது ஒரு பிரம்மாண்ட காரியமாகும்.
செம்புறைக்கற்கள் இரும்பு ஆக்ஸைடு உள்ளடக்கியவை ஆதலால், பூமிக்கு அடியில் இருக்கும் வரை மிருதுவாக இருப்பவை. ஆனால் பூமியிலிருந்து தோண்டி வெளியே எடுக்கப்பட்டவுடன் வெய்யிலும் காற்றும் பட்டால் மிகவும் கடினமாக ஆகிவிடக்கூடியவை. அவை நுண்ணிய துவாரங்கள் கொண்டவையாதலால் நீர்ப்படுகையாகவும் செயல்படுபவை. அவை சுண்ணாம்புக் கலவையுடன் கலக்கும்போது இயற்கையின் சீற்றங்களைத் தாங்கி நீண்ட காலம் உறுதியாக இருக்கும் தன்மையைப் பெறுகின்றன.
அக்காலத்தில் இரண்டு கோவில்களையும் கட்டிய வல்லுனர்களும் பணியாளர்களும் வெறும் உளியையும் சுத்தியலையும் வைத்துக்கொண்டு பிரம்மாண்ட கோபுரங்களை நிர்மாணித்து, பெரிய மண்டபங்களை அமைத்து, அழகான சிற்பங்களையும் செதுக்கியிருப்பது வியந்து போறத்தக்கதாகும். கோட்டையைப் போன்ற மதிலும், பெரிய கோபுரமும், அகன்ற நுழைவாயிலும் கொண்டது ஆதி நாராயண பெருமாள் கோவில். நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய மராமத்துப் பணிகளும் கருக்கு வேலைகளும் கூடியது. வெளிமண்டபம் முழுவதும் ராமாயணக்கதைகள் 8 அங்குல அளவில் சிறிய சிற்பவடிவங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. அர்த்த மண்டபத்தில் நடன மங்கையர் சிற்பங்களும், தசாவதாரங்களின் சிற்ப வடிவங்களும் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. கோவிலின் ஒவ்வொரு நீளமும் அகலமும் அற்புதமாகச் செதுக்கப்பட்ட சிற்பங்களைக் கொண்டவை. தூண்களும் மேற்கூரைகளும் பலப்பல உருவங்களைக் கொண்டவை. ஒரு தூணில் பலாப்பழத்தை உரித்துத் தின்னும் குரங்கின் வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. அது பார்ப்போரின் கண்களைக் கவரும் விதத்தில் தத்ரூபமாக இருக்கிறது. மேற்கூரையில் நான்கு குரங்குகள் செதுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை ஒரே குரங்கைப் போன்று நம் பார்வைக்குத் தெரியும் விதத்தில் செதுக்கப்பட்டுள்ளன. மேலும் பல இடங்களில் மச்சக்கன்னிகள் (பெண்ணுடல் பாதியும் மீனுடல் பாதியும் கொண்ட உருவங்கள்), மனித-விலங்குகள் (மனித உடல் பாதி மிருக உடல் பாதி கொண்ட உருவங்கள்), பல தலைகள் கொண்ட உருவங்கள் ஆகியவையும் வடிவமைக்கப்பட்டுள்ளன. கோவிலின் வரலாற்றைச் சித்தரிக்கும் கல்வெட்டுகளும் இருக்கின்றன.
ஆதி நாராயண பெருமாள் ஸ்ரீதேவியுடனும் பூதேவியுடனும் காட்சி தருகிறார். அபய ஹஸ்தத்துடன் அருள் புரிகிறார். சன்னிதிக்கு வெளியேயும் ஸ்ரீதேவி பூதேவியுடன் வரத ஹஸ்தத்துடன் காட்சி தருகிறார். நான்கு பக்கங்களிலும் படிக்கட்டுகளுடன் கூடிய பலி பீடம் அழகாக உள்ளது.
ஆதி நாராயண பெருமாள் கோவிலுக்கு அருகில் சமய ஈஸ்வரர் கோவிலும் உள்ளது. இதுவும் செம்புறைக்கற்களால் அற்புதமாகக் கட்டப்பட்ட கோவில். இக்கோவிலிலும் அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள் காணக்கிடைக்கின்றன. கல்வெட்டுக்களும் உள்ளன.
நம் நாட்டின் மீது படையெடுத்து வந்த அன்னியர்கள் நமது கோவில்களை எப்படி அழித்தார்களோ, அதைவிடக் கொடூரமாக அறநிலையத்துறை இந்தக் கோவில்களை அழிக்க முனைந்திருக்கிறது. புனர் நிர்மாணம், சீரமைப்பு என்கிற பெயர்களில், கோவில்களின் சுற்றுச்சுவரை முழுமையாகத் தரைமட்டமாக ஆக்கிவிட்டது. கோவில் வாயில்களையும் இடித்து வாயிற்படிக்கட்டுகளையும் உடைத்துவிட்டது. தூண்கள் தகர்த்தெரியப்பட்டு கோவிலைச் சுற்றி வீசப்பட்டுள்ளன. சரளைக்கற்கள் அகற்றப்பட்டு அவ்விடங்களில் செங்கற்களையும் சிமெண்டையும் கொண்டு பூச்சுவேலை நடக்கின்றது. ஆங்காங்கே முளைத்திருக்கும் செடி கொடிகளைக் கூடச் சரியாக நீக்கவில்லை. கோவில் அடித்தளத்தின் வலிமையைக் கூட்டாமல் கோபுரத்தின் எடை கூடும் விதத்தில் கான்கிரீட் விமானம் கட்டப்பட்டுள்ளது. இது தூண்கள் மீது அதிகப்படியான எடையை அழுத்தும் விதமாக உள்ளது.
Pazhaverkadu-Kovilkal-Vazhakku-8
Pazhaverkadu-Kovilkal-Vazhakku-9
வாயிலில் இருந்த வேலைப்பாடுகளுடன் கூடிய அழகான பிரம்மாண்டமான மரக்கதவு உடைக்கப்பட்டு, உடைக்கப்பட்ட பகுதிகள் வெளியே கோவிலைச் சுற்றி வீசப்பட்டுள்ளன. அதே போல 12 அடி உயரம் கொண்ட மரத்தினாலான அழகிய தூண் ஒன்றையும் தகர்த்து வெளியே வைத்திருந்தனர். அந்த அழகிய தூணும் மேலும் 1000 கிலோ எடையுள மரத்தினாலான பொருட்களும் திருடர்களால் கொள்ளையடிக்கப்பட்டு விட்டது. அலட்சியமாக இருந்த அறநிலையத்துறை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது. பழைய வரலாறுகளைச் சொல்லும் ஆவணங்களாக விளங்கும் கல்வெட்டுகள் மணல் பூச்சுகளினாலும், வெள்ளையடிப்பினாலும், சிமெண்டு சுண்ணாம்பு பூச்சுகளினாலும் அழிக்கப்பட்டுள்ளன.
 Pazhaverkadu-Kovilkal-Vazhakku-7
ஒரு கோவிலைப் புதுப்பிக்கும் போது, ஆகம விதிகளின் படி, சுவாமி விக்ரகங்களை நீரிலோ அல்லது அரிசியிலோ தான் பாதுகாப்பாக வைக்க வேண்டும். ஆனால் அறநிலையத்துறை இந்தக் கோவிலின் விக்ரகங்களை ஏதோ வேண்டாத பொருட்களைப் போல கண்ட மேனிக்குப் போட்டு வைத்துள்ளது. பாதகமான இந்தச் செயலினால் அறநிலையத்துறை ஹிந்துக்களின் மனங்களையும் மத உணர்வுகளையும் கடுமையாகப் புண்படுத்தியுள்ளது.
Pazhaverkadu-Kovilkal-Vazhakku-11
ஆலயங்கள் பாதுகாப்புப் பணியில் ஸ்ரீகுமார்
சென்னையைச் சேர்ந்த ஆலய வழிபடுவோர் சங்கத்தின் உறுப்பினரான ஸ்ரீகுமார் ஆலயப் பாதுகாப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருபவர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்தி, அறநிலையத்துறையிடமிருந்து பல தகவல்களைப் பெற்று, தன் பணிகளைச் செவ்வனே செய்து வருபவர்.
தி ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற நாளிதழ்கள் பழவேற்காட்டில் அறநிலையத்துறையின் கொடுமையான செயல்களைச் செய்தியாக வெளியிட்டதைப் பார்த்த ஸ்ரீகுமார், தானும் நேரிடையாக அங்கே சென்று பார்த்துள்ளார். அதனைத் தொடர்ந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அறநிலையத்துறைக்குப் மனுக்களை அவர் அனுப்பியதில், அறநிலையத்துறை சில கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்துள்ளது. அவர்கள் அளித்த பதில்களைக் கொண்டு ஆய்வு செய்த ஸ்ரீகுமார், அறநிலையத்துறை பல விதிகளை மீறிச் செயல்பட்டிருந்ததைக் கண்டு பிடித்தார்.
அவர் கண்டுபிடித்ததன்படி, அறநிலையத்துறையின் விதி மீறல்கள் எப்பேர்பட்டவை என்று பார்ப்போம்:

விதிகளும் மீறல்களும்
  • ஒரு கோவிலைப் புனர் நிர்மாணம் செய்வதற்கு முன்பு மாநில தொல்லியல் துறையைக் கலந்து ஆலோசிக்க வேண்டும். ஆனால் அவர்களை ஆலோசிக்காமலே ஆதி நாராயண பெருமாள் கோவிலைப் புதுப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது அறநிலையத்துறை.
  • கோவில்களின் புதுப்பித்தலுக்கு ரூபாய் 50 லட்சத்திற்கு அதிகமான மதிப்புள்ள பணி ஒப்பந்தங்களை ஏற்று அங்கீகரிக்க தமிழக அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது. ஆனால் பழவேற்காடு கோவிலைப் பொறுத்தவரை அறநிலையத்துறை ஆணையரே அங்கீகாரம் அளித்துள்ளார்.
  • அதே போல ரூபாய் 50 லட்சத்திற்கு அதிகமாகச் செலவு பிடிக்கும் வேலைகளைச் சரிபார்க்கும் அதிகாரம் நெடுஞ்சாலைத்துறை அல்லது பொது பணித்துறையைச் சேர்ந்த தலைமைப் பொறியாளருக்குத்தான் உண்டு. ஆனல் இந்தக் கோவில் விஷயத்தில் அவர்களின் ஆலோசனையையோ அல்லது அனுமதியையோ பெறவில்லை.
  • கோபுரம், விமானம், மண்டபங்கள் போன்றவற்றைச் சீரமைக்கும் பணியையோ அல்லது புதிதாகக் கட்டும் பணியையோ, அரசு அமைத்துள்ள ஸ்தபதிகள் குழுவில் உள்ள, அரசு அங்கீகாரம் பெற்ற, ஸ்தபதியிடம்தான் அளிக்க வேண்டும். ஆனால் இந்தக் கோவிலின் பணி அரசுக் குழுவில் இல்லாத அரசு அங்கீகாரம் பெறாத கீர்த்திவர்மன் என்கிற நபருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
  • ஸ்தபதியின் திட்டமும் திட்ட மதிப்பீடுகளும் நெடுஞ்சாலைத்துறை அல்லது பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளரின் கையொப்பத்தைப் பெற்றிருக்க வேண்டும். அது இங்கே செய்யப்படவில்லை.
  • ஒரு கோவிலைப் புதுப்பிக்கும்போது, அக்கோவிலில் உள்ள சிற்பங்கள், விக்ரகங்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள், கலைப்பொருட்கள், வடிவமைப்புகள், வேலைப்பாடுகள் மற்றும் பல பழமை வாய்ந்த பொருட்கள் பத்திரமாகப் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் ஆதி நாராயண பெருமாள் கோவிலைப் பொறுத்தவரை இந்த முக்கிய விதி காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேண்டுதல்கள்
இரண்டு கோவில்களின் சிறப்புகளையும், அறநிலையத்துறையின் அலட்சிய விதி மீறல்களையும் தன்னுடைய மனுவில் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ள ஸ்ரீகுமார், பின்வரும் வேண்டுதல்களை உயர் நீதிமன்றத்திடம் சமர்ப்பித்துள்ளார்.
  • கோவிலைச் சீரமைப்பதற்குத்தான் அறநிலையத்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதே தவிர, கோவிலை இடித்துவிட்டுத் திரும்பவும் கட்டுவதற்கு அல்ல. ஆனால் அறநிலையத்துறை ஆதி நாராயண பெருமாள் கோவிலைப் பல இடங்களில் விதிகளை மீறி இடித்துத்தள்ளி மீண்டும் புதிதாகக் கட்டிவருகிறது.
  • இந்தப் பணியில் ஈடுபடுவதற்கு முன்பு, தொல்லியல் துறை வல்லுனர்களையோ, ஆகம விதிகள் அறிந்தவர்களையோ ஆலோசிக்காமல், தன்னுடைய இஷ்டத்திற்கு மனம்போன போக்கில் செயல்பட்டுள்ளது அறநிலையத்துறை.
  • செம்புறைக்கற்களால் கட்டப்பட்ட கோவில் என்பதால் அதைச் சீரமைக்க விஷயம் தெரிந்த பணியாளர்களைத்தான் வேலைக்கு அமர்த்த வேண்டும். ஆனால் சாதாரண கட்டிடத் தொழிலாளர்களை அமர்த்தி பொதுப்பனித்துறை பொறியாளர்களின் மேற்பார்வையில் விட்டுள்ளது அறநிலையத்துறை.
  • அறநிலையத்துறையின் அலட்சியத்தை செய்தித்தாள்கள் வெளியிட்டவுடன் வேலையை நிறுத்தி வைத்த அறநிலையத்துறை, சில காலம் அமைதியாக இருந்துவிட்டு, பின்னர் மக்கள் மறந்திருப்பார்கள் என்கிற நினைப்பில் மீண்டும் கோவிலை இடித்துக் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது.
  • ஆதி நாராயண பெருமாள் கோவிலின் சீரமைப்பை நிறுத்தி வைத்த அறநிலையத்துறை, சமய ஈஸ்வரர் கோவிலைச் சீரமைக்கும் பணியைத் துவக்கியுள்ளது. அந்தப் பணியையும் அரசு அங்கீகாரம் பெறாத கீர்த்திவர்மனிடமே ஒப்படைத்துள்ளது. இதை அனுமதித்தால் ஆதி நாராயண பெருமாள் கோவிலுக்கு ஏற்பட்ட அதே கதிதான் இந்தக் கோவிலுக்கும் ஏற்படும்.
  • ஆதி நாராயண பெருமாள் கோவில், சமய ஈஸ்வரர் பெருமாள் கோவில் போன்ற பழம்பெருமை வாய்ந்த கோவில்களைச் சீரமைக்கும் திறமையோ, விஷய ஞானமோ, பொறுப்போ அறநிலையத்துறைக்குக் கிடையாது. எனவே அந்தப் பணியை தொல்லியல்துறையிடம் கொடுக்க வேண்டும். அல்லது தொல்லியல் துறையின் கீழ் வல்லுனர்கள் கொண்ட குழு ஒன்றை அமைத்து அவர்களிடம் இப்பணியை ஒப்படைக்கலாம்.
  • இதே பழவேற்காடு ஊரில் டச்சுக் கம்பெனியாரின் கோட்டையையும் கல்லறைகளையும் பராமரித்து வரும் தொல்லியல் துறை, அவற்றை விட மிகவும் பழமையும் பெருமையும் சிறப்பும் வாய்ந்த இவ்விரண்டு கோவில்களையும் ஏன் பராமரிக்கக் கூடாது?
  • 1986 முதல் 1992 வரை இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம் கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் ஆலயத்தைப் புனர் நிர்மாணம் செய்வதற்குப் பல நவடிக்கைகளை எடுத்தது. எங்கேயோ அன்னிய தேசத்தில் இருக்கும் ஒரு ஆலயத்தின் நலனைப் பாராட்டி பணி செய்த கலாச்சார அமைச்சகம், நம்முடைய நாட்டில் உள்ள பழம்பெருமை வாய்ந்த கோவில்களைப் புனர் நிர்மாணம் செய்ய அதே ஈடுபாட்டை ஏன் காண்பிக்கக் கூடாது? கலை மற்றும் கலாச்சாரத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் பாதுகாத்துப் பரப்புவதையே தன் குறிக்கோளாக, நோக்கமாக (MISSION STATEMENT) அறிவித்துள்ளது கலாச்சார அமைச்சகம். அதன்படி நமது நாட்டில் உள்ள பழம்பெருமை வாய்ந்த சின்னங்களையும் பாதுகாத்து வருகிறது. எனவே, இவ்விரண்டு கோவில்களை பாதுகாப்பதும் கூட அதனுடைய குறிக்கோளுக்கு ஒத்து வருவதாகவே இருக்கிறது.
  • இவ்விரண்டு கோவில்களை விதிகளை மீறி சீரமைப்பதை நிறுத்தவேண்டும் என்று விண்ணப்பித்தும், அறநிலையத்துறை கண்டுகொள்ளவில்லை. தன்னுடைய வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஆகவே, அரசியல் சாஸனத்தின் 226வது க்ஷரத்தின் படி நவடிக்கையெடுக்கும்படி இந்நீதிமன்றத்தை வேண்டுவதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.
  • மேற்கூறிய காரணங்களை மனதில்கொண்டு, மாண்புமிகு உயர் நீதிமன்றம், ஆதி நாராயண பெருமாள் கோவில் மற்றும் சமய ஈஸ்வரர் கோவில் ஆகியவற்றைச் சீரமைக்கும் பணியிலிருந்து அறநிலையத்துறையை நீக்கி, அப்பணிகளை தொல்லியல் துறையிடமும் மத்திய கலாச்சார அமைச்சகத்திடமும் ஒப்படைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.
  • இவ்வழக்கின் மீதான் தீர்ப்பு வரும்வரை பழவேற்காட்டில் அறநிலையத்துறை மேற்கொண்டு வரும் பணிகளுக்குத் தடை விதிக்கக் கோருகிறேன்.
ஸ்ரீகுமாரின் மேற்கண்ட கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், அறநிலையத்துறையின் பணிகளுக்குத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் அறநிலையத்துறைக்கும், தொல்லியல் துறைக்கும், கலாச்சார அமைச்சகத்துக்கும் மூன்று வாரங்களில் பதிலளிக்கும்படி நோட்டிஸ் அனுப்பும்படியும் உத்தரவிட்டு வழக்கைத் தள்ளி வைத்துள்ளது.
ஸ்ரீகுமார் இவ்வழக்கில் வெற்றி பெறும் பட்சத்தில், ஆலயங்களின் பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் ஒரு திருப்பு முனையாக இவ்வழக்கு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கலை மற்றும் கலாச்சார ஆர்வலர்களும், ஆன்மீகப் பாரம்பரியப் பிரியர்களும், பக்தர்களும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதிலும் ஐயமில்லை.

-VSRC

வ.களத்தூரில் நாளை வியாழக்கிழமை 20-11-2014  திருவிளக்கு பூஜை மாரியம்மன் கோவிலில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று மாலை திருவிளக்கு பூஜை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. வ.களத்தூர் மகளிர் சுயஉதவி குழுக்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து நடத்தும் இந்த திருவிளக்கு பூஜைக்கு அனைவரும் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பெரம்பலூர் கலெக்டர் தரேஸ் அகமது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;
பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை 19ம் தேதி முதல் 26ம் தேதி வரை 8 நாட்களுக்கு ராணுவத்தின் பல்வேறு நிலை பணிகளுக் கான ஆள்சேர்ப்பு முகாம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. இம்முகாமில் சான்றிதழ் சரிபார் ப்பு, உடற்தகுதி, ஓட்டப்பந்தயம், மருத்துவத் தகுதிகள் குறித்த தேர்வுகள் நடைபெற இருந்தது. முகாமில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட 15 மாவட்டங்களைச் சார்ந்த தகுதியான நபர்கள் ராணுவத்திற்கு தேர்வு செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் தற்காலிகமாக ஒத்திவைக் கப்பட்டுள்ளது. ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் வருகிற 2015ம்ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி தொடங்கி, 24ம் தேதி வரை 8 நாட்கள் நடக்கும் என்று ராணுவப் பாதுகாப்புத்துறை சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ராணுவ ஆள்சேர்ப்பு முகாமிற்காக தொடர்பயிற்சியில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் தவறாமல் பெரம்பலூர் மாவட்ட விளை யாட்டு மைதானத்தில் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள முகாமில் கலந்து கொண்டு, தேர்வாகி, நாட்டுக்காகப் பாடுபடும் அரியவாய்ப்பினைப் பெற்று பெருமை சேர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே இரு பிரிவினருக்கு பொதுவான நிலத்தை, ஒரு பிரிவினருக்கு பட்டா மாற்றம் செய்வதை கண்டித்து கிராம மக்கள் ஊராட்சி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்குள்பட்ட தேவையூர் ஊராட்சியில் இரு பிரிவினருக்கு பொதுவாக 22 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை, அந்த பகுதியை சேர்ந்த இரு பிரிவினரும் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.கடந்த 5-ம் தேதி அந்த நிலத்தை ஒரு பிரிவினருக்கு மட்டுமே பட்டா மாற்றம் செய்ததாக தெரிகிறது. இதையறிந்த தேவையூர் கிராம மக்கள், அந்த நிலத்தை இருபிரிவினருக்கும் பிரித்து அளிக்க வேண்டும். அல்லது, இருபிரிவினரும் பயன்படுத்தும் வகையில் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி சுமார் 100-க்கும் மேற்பட்டோர் ஊராட்சி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.



தகவலறிந்து, சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட முயன்ற வேப்பந்தட்டை வட்டாட்சியர் ஏழுமலை தலைமையிலான வருவாய்த் துறையினரை பொதுமக்கள் சிறைபிடித்தனர். தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தயில், உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், வரும் 26ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா தொடங்குகிறது. இதையொட்டி, கோயிலில் ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. மகாதீப கொப்பரை சீரமைக்கும் பணி நேற்று நடந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, வரும் 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் 2ம் தேதி மகா தேரோட்டம், 5ம் தேதி அதிகாலை பரணி தீபமும், மாலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும். மகா தீபம் ஏற்றுவதற்கு வெண்கலத்தால் செய்யப்பட்ட கொப்பரை பயன்படுத்தப்படுகிறது. இந்த கொப்பரையை, ஆண்டுதோறும் விழா தொடங்குவதற்கு முன்பு சீரமைப்பது வழக்கம். அதன்படி தீப கொப்பரை சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது. கொப்பரையின் அடிபாகத்தில் உள்ள வளையம் சேதமடைந்ததால் அதை மாற்றி, வர்ணம் தீட்டி, அர்த்தநாரீஸ்வரர் உருவம் வரையப்பட உள்ளது. இந்த பணிகள் முடிந்த பிறகு வரும் 4ம் தேதி கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தலைச்சுமையாக மலை உச்சிக்கு கொப்பரை கொண்டு செல்லப்பட உள்ளது.

பக்தர்களுக்கு இன்சூரன்ஸ்:திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, விபத்து காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் பெறும் வகையில் பக்தர்களுக்கு இன்சூரன்ஸ் வசதியை கோயில் நிர்வாகம் செய்துள்ளது. மேலும் கோயில் திருப்பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள், சேவைப் பணியாளர்கள், தன்னார்வலர்களுக்கும் இந்த காப்பீடு வசதி பொருந்தும். தேரோட்டத்தின்போது மாட வீதியில் பக்தர்களுக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டால் இன்சூரன்ஸ் தொகையை பெறலாம்.

வாரணாசியில் 179 வயதுள்ள உலகிலேயே மிக அதிகமான வயதுடைய ஒரு மனிதர் வாழ்கிறார் என்ற தகவல் ஆச்சரியப்பட வைக்கிறது. கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கும் வாரணாசியில் வாழ்ந்து வரும் மகாஸ்தா முராசி தம்முடைய பிறந்த ஆண்டு 1835 என்கிறார். பெங்களூரில் பிறந்து வளர்ந்த இவர் கி.பி. 1903 ஆம் ஆண்டு முதல் வாரணாசியில் வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.

1957 ஆம் ஆண்டு வரை காலணி தைப்பவராக அதாவது 122 வயது வரையில் அந்தப் பணியை செய்துவிட்டு ஓய்வு பெற்றுவிட்டார். மகாஸ்தா முராசியின் பிறப்ப்பு சான்றிதழ், அடையாள அட்டைகள் அனைத்துமே அவர் 1835ஆம் ஆண்டு பிறந்தவர்தான் என்கின்றன. ஆனால் இதுவரை இவர் 179 வயதுக்காரர் என்பதை உறுதிப்படுத்த எந்த ஒரு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கும் வகையில் பிரதமரின் மக்கள் நிதி திட்டம் (பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா) தொடங்கப்பட்டது. இதில் கணக்கு தொடங்குபவர்களுக்கு ரூ.1 லட்சம் விபத்து காப்பீடு நிதி அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. கணக்கு தொடங்கி 6 மாதத்துக்கு பிறகு இதன்மூலம் ஓவர்டிராப்டாக ரூ.5,000 கடன் பெறவும் வசதி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வரும் ஜனவரி 26ம் தேதிக்குள் 7.5 கோடி பேருக்கு கணக்கு தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இந்த திட்டத்தில் ஆயுள் காப்பீட்டுக்கு ரூ.90 செலுத்தினாலே போதும் என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது இந்த திட்டத்தில் கணக்கு தொடங்குபவர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 26ம் தேதிக்கு பிறகு பலன்பெறலாம். இதற்காக எல்ஐசி நிறுவனம் சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் காப்பீடு கோரி வரும் விண்ணப்பங்களை பொறுத்து கூடுதல் நிதியை அரசிடம் இருந்து இந்நிறுவனம் கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.1000க்கு 3 ரூபாய் என்ற அடிப்படையில் ரூ.30,000 காப்பீட்டுக்கு ரூ.90 செலுத்தினால் போதுமானது.

எல்ஐசி நிறுவனத்தின் ஆம் ஆத்மி பீமா யோஜனா ஏழைகளுக்காக வடிவமைக்கப்பட்டது. இதில் மிகக் குறைந்த தொகையே பிரிமியமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் சேரும்போது ரூ.200 வசூலிக்கப்படுகிறது. இதில் 50 சதவீதம் மத்திய அரசின் சமூக பாதுகாப்பு நிதியில் இருந்தும், நிலமற்ற குடும்பங்களுக்கு மீதி 50 சதவீதத்தை மாநில அரசும் வழங்குகின்றன. இதை அடிப்படையாக வைத்தே ஜன்தன் யோஜனாவிலும் ரூ.90 கட்டணத்தில் காப்பீடு வழங்க திட்டமிட்டதாக தெரிகிறது. முதன் முதலாக ஜன்தன் யோஜனா திட்டம் பற்றி பிரதமர் நரேந்திரமோடி சுதந்திரதின உரையில் அறிவித்தபோது இந்த காப்பீடு இல்லை. பின்னர் சேர்க்கப்பட்டது.

74% கணக்கில் பணம் இல்லை:

ஜன்தன் யோஜனாவில் 7 கோடிக்கும் மேற்பட்ட கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன. ரூ.5,400 கோடி டெபாசிட் செய்யப்ப்டடது. கடந்த 7ம் தேதி நிலவரப்படி, இதில் சுமார் 5.3 கோடி கணக்குகளில், அதாவது 74 சதவீத கணக்குகளில் பணம் இல்லை என்று நிதி சேவைகள் துறை புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 4.2 கோடி கணக்குகள் ஊரக பகுதிகளிலும், 2.9 கோடி கணக்குகள் புறநகர்களிலும் திறக்கப்பட்டுள்ளன.

-தினகரன்.

பெரம்பலூர் மாவட்டத்தில் அரையாண்டுதேர்வுகள் பிளஸ்2 விற்கு டிசம்பர் மாதம் 10ம்தேதியும், எஸ்எஸ்எல்சிக்கு டிசம்பர் 12ம்தேதியும் தொடங்குகிறது என  மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர்(பொ) கலையரசி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி எனப்படும் பத்தாம் வகுப்புக்கான அரை யாண்டுத்தேர்வுகள் டிசம்பர் மாதம் 12ம் தேதி தொடங்கி, 23ம் தேதி வரை நடக்கி றது. இதன்படி 12ம்தேதி தமிழ்முதல்தாள், 15ம்தேதி தமிழ் இரண்டாம்தாள், 16ம் தேதி ஆங்கிலம் முதல்தாள், 17ம் தேதி ஆங்கிலம் இரண்டாம்தாள், 19ம்தேதி கணிதம், 22ம் தேதி அறிவியல், 23ம் தேதி சமூகஅறிவியல் பாடங்களுக்குத் தேர்வுகள் நடக்கிறது. காலை 10மணிக்குத் தொடங்கி 12.45மணிவரை நடைபெறும் இந்தத்தேர்வுகளை உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகள் என 125பள்ளிகளை சேர்ந்த மாணவியர் எழுதவுள்ளனர்.
அதேபோல பிளஸ்2 அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 10ம்தேதி தொட ங்கி 23ம்தேதி வரை நடக்கிறது. இதன்படி 10ம்தேதி தமிழ் முதல்தாள், 11ம் தேதி தமிழ்இரண்டாம்தாள், 12ம் தேதி ஆங்கிலம் முதல்தாள், 15ம் தேதி ஆங்கிலம் இரண்டாம்தாள், 16ம் தேதி வணிகவியல், ஹோம்சயின்ஸ், புவி யியல், 17ம் தேதி கணிதம், மைக்ரோபயாலஜி, விலங்கியல், அரசியல் அறிவியல், நர்சிங், கணக்குப்பதிவியல் மற்றும் தணிக்கையியல் உள்ளிட்டப் பாடங்களுக்கும், 18ம் தேதி இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்டப் பாடங்களுக்கும் நடக்கிறது.
19ம்தேதி கணினிஅறிவியல், உயிர்வேதியியல், டைப்ரைட்டிங், புள்ளியியல் பாட ங்களுக்கும், 22ம்தேதி வேதியியல், கணக்குப் பதிவியல், 23ம்தேதி உயிரியியல், தாவ ரவியல், வரலாறு, வணிகக்கணிதம் பாடங்களுக்கும் நடக்கிறது. காலை 10 மணிக்குத் தொடங்கி, பகல் 1.15 மணிவரை நடைபெறும் இத்தேர்வுகளை 65 மேல்நிலைப்பள் ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் எழுதவுள்ளனர்.
 தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமைஆசிரியர்கள் செய்து வருகின்றனர் எனத்தெரிவித் துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 73 ஏரிகள் உள்ளன. மாவட்ட அளவில் கடந்த 11,12,13,14 ஆகிய தேதிகளில் தொடர்ச்சியாக நல்லமழை பெய்தது. குறிப்பாக வேப்பந்தட்டை தாலுகாவில் நல்லமழை பெய்தது. இதனால் அரும்பாவூர் பெரிய ஏரி, வெங்கலம் சின்ன ஏரி, பாண்டகப்பாடி ஏரி ஆகிய 3 ஏரிகள் கடந்த 14ம் தேதி முதல் நிரம்பி வழிந்து வருகின்றன. நிரம்பி வழிந்த தண்ணீரைக் கொண்டும், ஓடைகளில் வந்து சேர்ந்த தண்ணீரைக் கொண்டும் மேலும் சில ஏரிகள் 100 சதவீதக் கொள்ளளவை எட்டி வருகின்றன.

 இந்நிலையில் கடந்த 16ம்தேதி வேப்பந்தட்டை அருகேயுள்ள வெண்பாவூர் ஏரி நிரம்பி வழியத் தொடங்கியது. அதே போல குன்னம் தாலுகா, வடக்கலூர் ஏரியும் நிரம்பி வழியத் தொடங்கியது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கடல் போலக் காட்சி தரும் மிகப்பெரிய ஏரியான அரும் பாவூர் சித்தேரி நேற்று முதல் நிரம்பி வழியத் தொடங்கியுள்ளது. 52.63 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பெரியஏரி நிரம்பி வழிந்த போது, சித்தேரி 5 சதவீதத் தண்ணீர்கூட நிரம்பாமல் மாடுகள் மேய்ந்த நிலையில் தான் காணப்பட்டது.
 தொடர்ந்து பெரியஏரி தண்ணீரும், வேப்படி பாலக்காடு பகுதி மழை நீரும் வந்து சேர்ந்ததால் நேற்று முதல் அரும்பாவூர் சித்தேரி நிரம்பி வழிகிறது. சித்தேரி 18.11 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டதாகும். அரும்பா வூர் பெரிய ஏரி, சித்தேரி ஆகிய இரண்டு ஏரிகளின் மூலம் சுற்றுவட்டாரத்திலுள்ள 228.07எக்டேர் ஆயக்கட்டுபகுதி பாசன வசதி பெற்றுப் பயன் பெறும் வாய்ப்புள்ளது. இதனிடையே தொடர் மழையில் சிறிது தொய்வு ஏற்பட்டு வானம் காய்ந்து கிடப்பதால் நிரம்பும் நிலையில் இருந்த மற்ற ஏரிகள் அப்படியே நின்று விட்டன.
நேற்று முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. எதிர்பார்ப்புகளை ஏமாற்றி மாலையில் லேசான மழை தூறல்கள் மட்டுமே பெய்தது.

-தினகரன்.

வளம் பொருந்திய கோசல தேசத்தை. நந்திவர்மன் ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு பீமன் (மகாபாரத பீமன் அல்ல; இவன் வேறு) எனும் மகனும், அழகே  உருவெனத் திகழும் சுகுணா, சுந்தராங்கி என இரண்டு மகள்களும் இருந்தனர். ஒருநாள், இளவரசிகள் இரண்டு பேரும் கானகத்தில் விளையாடச் சென்றார்கள்.  அங்கே, மனத்தை அடக்கியாள்பவரும், பரப்பிரம்ம வஸ்துவும், மகா சாஸ்தாவின் திருவடிகளில் சரணடைந்தவருமான சுவேதபாஜு எனும் முனிவர் தவமிருந்து  வந்தார். அங்கு வந்த சகோதரிகள், அவரைக் கண்டதும் விளையாடுவதை நிறுத்தினார்கள். அவர் தவம் செய்வதையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆனால்  பாவம்... முனிவரின் பெருமையை, மகிமையை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

அங்கே மரத்தில், அவரின் தலைக்கு நேராக இருந்த தேன் கூட்டைப் பார்த்தார்கள். கற்களை எடுத்து வீசி, தேன்கூட்டைக் கலைத்தார்கள். சடசடவெனப் பறந்த  தேனீக்கள், முனிவரின் உடல் முழுவதும் கொட்டித் தீர்த்தன. இதனால் வலி அதிகமானது முனிவருக்கு. தவத்தில் இருந்து கலைந்து எழுந்தவர், தாங்க முடியாமல்  தவித்துக் கதறினார். தவம் கலைவதற்கும் தேனீக்கள் கலைந்து வந்து கொட்டியதற்கும் காரணமான அந்த இரண்டு பெண்கள் மீதும் கடும் கோபம் கொண்டார்.  அவர்கள் செடிகளாகக் கடவது என்று சபித்தார். அதன்படி சுகுணா என்பவள் நிலத்தில் வாழும் ஜவ்வந்தித் தாவரமாகவும், இளையவள் சுந்தராங்கி நீரில் வாழும்  செங்கழுநீர்த் தாவரமாகவும் பிறந்தார்கள். இதை அறிந்த மன்னர், கலங்கிப் போனார். மகள்களுக்கு இந்தக் கதி நேர்ந்துவிட்டதே! என்று கண்ணீர் மல்கக் கதறினார்.  மனம் வருந்தி, அவர்களுக்குச் சாப விமோசனம் அளிக்கும்படி முனிவரை வேண்டினார்.

முனிவரும் மகா சாஸ்தாவை நோக்கித் தவம் செய். நல்லது நடக்கும் என அருளினார். அதையடுத்து, தன் மகன் பீமனுக்கு முடிசூட்டிய மன்னன், ராஜ  வாழ்க்கையைத் துறந்து, கானகத்தை அடைந்து, வெறும் காற்றை மட்டுமே உட்கொண்டு, சாஸ்தாவை நோக்கிய தவத்தில் மூழ்கினான். அவனது தவத்தில்  மகிழ்ந்த சாஸ்தா, யானை மீது அமர்ந்தபடி வந்து, அவனுக்குத் திருக்காட்சி தந்தருளினார். உன் தவத்தில் மகிழ்ந்தேன். முனிவரின் சாபம் உன் மகள்கள் இரண்டு  பேருக்கும் வரமாக அமையட்டும். அதாவது, ஜவ்வந்திப் பூவாகவும் செங்கழுநீர்ப் பூவாகவும் மாறியிருக்கிற உன் மகள்கள், இனி என் பூஜையில் கட்டாயம்  இடம்பெறுவார்கள். இந்த மலர்களைக் கொண்டு என்னை அர்ச்சித்து வழிபடுபவர்களுக்கு, யாகங்கள் செய்த பலனையும், ஹோமங்கள் வளர்த்த புண்ணியத்தையும்  தந்தருள்வேன் என்றார். 

-தினகரன்.

பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை. அதுமட்டுமின்றி வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும். ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரணம் செய்யும் ஆற்றல் உள்ளதாம்.

பெண்கள் கர்ப்பம் அடையும் போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட வலிகள் குறையும். இதனை எப்போதும் செய்து கொண்டு இருக்க முடியாது என்பதற்காக, வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்ந்து வலியை குறைக்கிறது. கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால் தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கி இருக்கின்றனர்.


-தினகரன்

Wednesday, 12 November 2014


ஸ்மார்ட் கார்டு வடிவில் குடும்ப அட்டைகளை வழங்குவதற்கான பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. சோதனை அடிப்படையில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான கணக்கெடுப்புப் பணிகள் 80 சதவீதத்துக்கும் மேலாக முடிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, தேசிய வாக்காளர் பதிவேட்டில் பொதுமக்களின் பெயர்களைப் பதிவு செய்யும் பணியைத் தீவிரப்படுத்தி ஆதார் எண்ணை வழங்குவதற்கு வசதியாக, ஒவ்வொரு வட்டத்திலும் நிரந்தர முகாம்களை அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 1.98 கோடி குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. அவற்றில் போலி அட்டைகளைக் களையும் வகையில் தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, இப்போதுள்ள தாள்களை அடக்கிய குடும்ப அட்டைக்குப் பதிலாக, பயோமெட்ரிக் தகவல்களைக் கொண்ட ஸ்மார்ட் கார்டு வடிவிலான குடும்ப அட்டையை வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இரண்டு மாவட்டங்கள் தேர்வு: ஸ்மார்ட் கார்டு குடும்ப அட்டைகளைச் சோதனை அடிப்படையில் வழங்க அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் மக்கள் தொகை பதிவேட்டில் பதிவு செய்து ஆதார் அட்டை பெற்றவர்களின் எண்ணிக்கை 80 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. இந்தப் பதிவேட்டின்படி, விரல் ரேகைகள், கருவிழிப் படலம் ஆகியன படம் எடுக்கப்பட்டு, பொதுமக்களின் அடிப்படைத் தகவல்களும் (பெயர்-முகவரி) சேகரிக்கப்பட்டுள்ளன. இந்தத் தகவல்களை மையமாகக் கொண்டு ஆதார் எண் வழங்கப்படுகிறது. மக்கள் தொகை பதிவேட்டில் பதிவாகியுள்ள அனைத்துத் தகவல்களையும் அப்படியே பெற்று அதன் அடிப்படையில் ஸ்மார்ட் கார்டு வடிவில் குடும்ப அட்டைகளைத் தயாரிக்கும் பணியில் உணவுத் துறை ஈடுபட்டுள்ளது.

நிரந்தர முகாம்கள்: தமிழகத்தில் ஆங்காங்கே நடைபெறும் சிறப்பு முகாம்களின்போது மட்டுமே தேசிய வாக்காளர் பதிவேட்டில் பெயரைப் பதிவு செய்து, ஆதார் எண் வழங்கப்படுகிறது. இதனால், மாநிலம் முழுவதும் அனைத்துத் தரப்புக்கும் ஆதார் எண்ணை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை 73 சதவீதம் பேருக்கு மட்டுமே ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தச் சூழ்நிலையில், தேசிய வாக்காளர் பதிவேட்டில் பெயர் உள்ளிட்ட தகவல்களையும், கைவிரல் ரேகை, கருவிழிப் படலம் ஆகியவற்றையும் பதிவு செய்ய வசதியாக ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் நிரந்தர முகாமை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, மத்திய அரசின் ஆலோசனையைப் பெற்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையரகம் மூலமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த முகாம்களை அமைப்பதன் மூலம், பொதுமக்கள் எந்த நேரமும் அங்கு சென்று தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் விவரங்களைப் பதிவு செய்து ஆதார் எண் பெறுவதற்கு வழி ஏற்படும். பிறந்த குழந்தைகளுக்கும்கூட சிரமமின்றி தகவல்களைப் பதிவு செய்ய இந்த நிரந்தர முகாம்கள் வாய்ப்பாக அமையும் என்று வருவாய்த் துறை வட்டாரங்கள் கூறினர்.


தினகரன்.

பாஸ்போர்ட் வழங்குவதில் போலீசார் விசாரணை காரணமாக ஏற்படும் தாமதத்தை தவிர்ப்பதற்காக ஆதார் அட்டையை கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.பாஸ்போர்ட் வாங்க விரும்புவோர் விண்ணப்பித்த பிறகு அவர் மீது குற்ற வழக்குகள் ஏதும் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி சான்றிதழ் வழங்கிய பிறகே பாஸ்போர்ட் வழங்கும் நடைமுறை காணப்பட்டு வருகிறது. தற்போது இந்த முறையை மாற்றி பாஸ்போர்ட் வழங்குவதில் விரைவான நடைமுறையை கொண்டு வர மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

இந்த புதிய நடைமுறையில் ஆதார் அட்டை மூலமாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் உள்ள தகவல்களை ஒப்பிட்டு பார்த்து விண்ணப்பதாரரின் குற்ற வழக்குகளின் தன்மைகளை கண்டறிந்து விட முடியும். எனவே ஆதார் அட்டையை கட்டாயமாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நேற்று வெளியுறவுத்துறை, உள்துறை, சட்டத்துறை, புலனாய்வு பிரிவு ஆகியவற்றின் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஸ்போர்ட் வழங்குவதில் விரைவான நடைமுறைக்கு தேவையான ஆதார் உள்ளிட்ட பரிந்துரைகளை பிரதமர் மோடிக்கு தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.ஆதார் அட்டை இல்லாதவர்களின் ஆதார் எண்ணை வைத்து மட்டுமே இதனை ஏற்றுக் கொள்வது என்பது பற்றியும் பரிசீலிக்கப்பட்டது. 

பாஸ்போர்ட்டுக்கு ஆதாரை கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வரும் வேளையில், செப்டம்பர் 24ம் தேதி பிறப்பித்த உத்தரவு ஒன்றில் ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் உதவியின் மூலமாக விண்ணப்பதாரரின் குற்ற தன்மைகள் குறித்து உறுதி செய்வது இன்னும் இரண்டு மாதங்களில் நடைமுறைக்கு வர உள்ளதாக வெளியுறவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.


தினகரன்.

Tuesday, 11 November 2014

படம் - வசந்த ஜீவா
ஆசிரியர் தேர்வுவாரியத்தால் நடத்தப்படும் முதுகலைப் பட்டதாரிஆசிரியர் பணி யிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெரம்பலூரில் 10ம் தேதிமுதல் விநியோகிக்கப்படவுள்ளது என முதன்மைக் கல்விஅலுவலர்(பொ) கலையரசி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது :
டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்காக நடத்தப்படும் போட்டித்தேர்வு 2015 ஜனவரி 10ம்தேதி தமிழக அளவில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வில் பங்கேற்கத் தேவையான விண் ணப்பங்கள், பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர் அலுவலகத்தில் வரும் 10ம் தேதி தொடங்கி, 26ம் தேதி வரை, அலுவலக நேரங்களில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விநியோகிக்கப்பட உள்ளது. இதற்காக விண்ணப்பிக்க விரும்புவோர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ லர் அலுவலகத்திற்கு வந்து, ரூ.50 கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
இதனைத் தொடர்ந்து விண்ணப்பதாரர்களில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இனத்தவர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினர்களும் ரூ500க்கும், ஆதிதிராவிடர் இனத்தவர் ரூ.250 க்கும் டிடி எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து வருகிற 26ம் தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும். இதில் ஆதி திராவிடர் இனத்தவர் மட் டும் விண்ணப்பங்களைப் பெற வரும்போது, தங்களது சாதிச் சான்றிதழின் நகலை எடுத்துவர வேண்டும்.
இந்தத் தேர்வில் எம்எஸ்சி, எம்சிஏ, எம்ஏ, எம்காம் படித்து, பிஎட் பட்டம் பெற் றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவர், எனத்தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு டிஆர்பி மூலமாக விநியோகித்திட 4,400 விண்ணப்பங்கள் முதல்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.  .

Monday, 10 November 2014


நேற்று நடைபெற்ற RSS அணிவகுப்பு ஊர்வலத்தில் கலந்துகொண்ட தொண்டர்களை கைது செய்தது தமிழக காவல்துறை. அதன் பத்திரிக்கை செய்திகள் சில.. உங்கள் பார்வைக்கு.

Sunday, 9 November 2014


விசுவக்குடி அணைக்கட்டுத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை மார்ச் மாதத்திறகுள் துரிதமாகவும், துல்லியமாகவும் முடிக்க வேண்டும் எனஆய்வு செய்த பொதுப்பணித் துறையின் மண்டல கண்காணிப்புப் பொறியா ளர் உத்தரவிட்டார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவில் கல்லாற்றின் குறுக்கே பொதுப்பணித்துறை சார் பாக, செம்மலை, பச்சை மலை ஆகியமலைகளை இணைத்து விசுவக்குடி அணைக்கட்டுத் திட்டம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த அணைக் கட்டு மூலம் கல்லாற்றுநீர் வீணாகாமல் தடுத்து விவசா யம் மற்றும் குடிநீர்த் தேவைகளுக்குப் பயன்படுத்தும் வகையில் முதல்கட்ட பணி யாக ரூ.19 கோடியில் 665 மீட்டர் நீளமுள்ள கரையுடன்கூடிய கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. இந்த அணைக்கட்டு மூலம் 30.67மில்லியன் கனஅடி தண்ணீரை 10 மீட்டர் உயரத்துக்கு சேமிக்க இயலும். இதற்காக அணையின் நீர்ப்போக்கியை அமைத்திட 11 மீட்டர் உயரத்திற்கு கான் கிரீட் கட்டுமானம் அமைக்கப்பட்டுள்ளது. நீர்போக்கி யின் இருபுறமும் மலையுடன் இணைக்கும் வகையில் 12 மீட்டர் உயர கரைகள் அமைத்து, மண்அரிப்பு ஏற்படாதபடி கருங்கல் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது.
அணைக்கட்டு அமைக் கும் பணிக்காக 2ம் கட்ட மாக மறுமதிப்பீட்டின்படி ரூ.14.07 கோடி நிதிகேட்டு அரசுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகப் பரிந்துரை செய் யப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டுமூலம் நேரடியாக 859 ஏக்கர் புன்செய்நிலம் பாசன வசதி பெறும். மதகுகளின் மூலம் வெங்கலம் பெரியஏரிக்கு கீழுள்ள சுமார் 421.41 ஏக்கர் ஆயக்கட்டிற்கான நீராதாரம் உறுதி செய்யப்படும். நிலத்தடிநீர் செறிவூட்டப்படுவதால் கிணற்றுப்பாசனம் மூலம் கூடுதலாக 169 ஏக்கர் புன்செய் நிலங்களும் பாசன வசதி பெறும். அதோடு மறைமுகமாக 2ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனவசதி பெறும். இந்த அணையை அன்னமங்கலம் வழியாக நேரில் வந்து பார்ப்பதற்காக விசுவக்குடியிலிருந்து 1.20 கி.மீட்டர் நீளத்திற்கு 10.5 மீட்டர் அகலமுள்ள தார்சாலை அமைக்கப்படுகிறது. அணையின் திட்டப்பணிகளின் படி தேக்கப்படவுள்ள 30.67மில்லியன் கனஅடி நீருடன், உட்பகுதியில் ஆழப்படுத்துவதன்மூலம் மேலும் 10மில்லியன் கனஅடி நீரை சேமிக்கும் வகையிலான மாநில திட்டக்குழுவிற்கு மாவட்ட நிர்வாகத்தினால் கருத்துரு மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுப்பணித்துறையின் திருச்சிமண்டல (நடுக்காவிரி வடிநிலக் கோட்டம்) கண்காணிப்புப் பொறியாளர் ஜேம்ஸ்லூர்துசாமி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அணைக்கட்டு அமைக்கும் பணிகளில் ஷட்டர் மூலம் நீர் வெளியேற்றும் பகுதியில் நீரின் வேகத்தை கட்டுப்படுத்த பெரியஅளவிலான கற்கள் பொக்லைன் இயந்திரத்தால் நிரப்பும் பணிகள் நடைபெறுவதையும், ஏரிக்காக 12 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கரையின் மேல் நடந்து சென்று மலைப்பகுதியை இயற்கை எழிலோடு காண்பதற்கும், நீர்வழிந்தோடுவதற்காகவும் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டார். பிறகு அவர் பொறியாளர்களிடம் தெரிவிக்கையில், பணிகள் அனைத்தும் வருகிற மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் விதத்தில் துரிதமாகவம், துல்லியமாகவும் நடத்தி முடிக்க வேண்டு மென உத்தரவிட்டார். அணையின் முன்புறத்தில் பிரமாண்ட பூங்காவும், அணையின் கரையில் பொதுப்பணித்துறை ஆய்வுமாளிகை அமைக்கவும், அணையை பார்க்க பொதுமக்கள் வருவதற்காக தொண்டமாந்துறை வழியாக புதிதாக ஒரு சாலைஅமைக்கவும் பொதுப்பணித்துறை ஏற்பாடு செய்து வருகிறது.
இந்தஆய்வின்போது, பொதுப்பணித்துறையின் மருதையாறு வடிநிலக் கோட்டத் தின் (அரியலூர்) செயற்பொறியாளர் தெய்வீ கன், மருதையாறு உப வடிநிலக்கோட் டத்தின்(பெரம்பலூர்) உதவி செயற்பொறி யாளர் வேல்முருகன், உதவிப்பொறியாளர் கார்த் திக், இளநிலைப் பொறியா ளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்
.

-தினகரன்.
பெரம்பலூரில் கைது செய்யப்படும் RSS தொண்டர்கள்..
ராஷ்டிரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.), சோழரசர்களில் தலைசிறந்தவர்களில் ஒருவரான கங்கைகொண்ட சோழன் முடிசூட்டியக்கொண்டதன் 1000ஆவது ஆண்டை கொண்டாடும் வகையிலும், சமுக நல்லிணக்கத்தையும் வலியுறுத்தியும் இன்று (9.11.2014) மாலை ஊர்வலம் நடத்த காவல்துறையிடம் முன் அனுமதி கேட்டிருந்தது. ஆனால் காவல்துறை அதற்கு அனுமதி மறுத்தது. இதனை அடுத்து சென்னை உயர்நீதி மன்றத்தை அணுகி காவல்துறை அனுமதி வழங்க தீர்ப்பாணை பெற்ற நிலையில், இன்று காவல்துறை ஊர்வலத்தைத் தடை செய்து, ஊர்வலத்தில் வந்தவர்களை கைது செய்துள்ளது.

சென்னையில் 8000 பேர் கைது செய்யப்பட்டனர், தமிழகம் முழுவதும் 36 இடங்களில் 40,000க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தமிழக அரசின் ஜனநாயக விரோதப் போக்கைக் காட்டுகிறது. நீதிமன்றம் அனுமதிக்க வலியுறுத்தியும், நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை பின்பற்ற காவல்துறை மறுத்துள்ளது. இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கையை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

ஜனநாயக உரிமையை தமிழக அரசு துச்சமென மதித்துள்ளது மட்டுமல்ல, நீதிமன்றத்தை அவமதித்துள்ளது. தடை செய்ய எந்த மூகாந்திரமும் இல்லாத நிலையில் தமிழக அரசும், காவல்துறையும் நடந்துகொண்ட விதம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மக்களின் கடைசி நம்பிக்கையாக விளங்கும் நீதிமன்றம், இந்தப் பிரச்னையை தானாக முன்வந்து எடுத்து, தமிழக அரசின் செயல்பாடு குறித்த தகவல்களைத் திரட்டி சட்டத்தின் மாட்சியமையை மெய்ப்பிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)
    
சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி அளித்தும் கட்டுப்பாடு என்ற பெயரில் பல நிபந்தனைகளை விதித்து பெரம்பலூரில் நடக்கவிருந்த rss ன் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு தடை விதித்ததோடு மட்டுமல்லாமல் 350 றக்கும் மேற்பட்ட RSS ன் தொண்டர்களை கைது செய்தது பெரம்பலூர் காவல்துறை.

காவல்துறை விதிக்கும் கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்கிறோம் என்று கையெழுத்துப்போட நிர்பந்தித்தது மட்டுமல்லாமல், அவ்வாறு கையெழுத்து போடவில்லை என்றால் பெரம்பலூர் மாவட்ட RSSன் முக்கிய பொறுப்பாளர்களை கைது செய்வோம் என மிரட்டியதாக கூறப்பட்ட நிலையில்  ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

பெரம்பலூர், துறையூர் மற்றும் அரியலூர் பகுதிகளைச்சேர்ந்த RSS தொண்டர்களின் அணிவகுப்பு ஊர்வலம் பெரம்பலூர் பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகம் முன்பு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. சரியாக மாலை 5 மணிக்கு ஊர்வலம் தொடங்கும் என கூறப்பட்ட நிலையில் 3 மணி முதற்கொண்டே தொண்டர்கள் அணிவகுக்கத்தொடங்கினர்.

மாலை 5 மணிவரை காவல்துறை அணிவகுப்புக்கு அனுமதி அளிக்காத நிலையில் கைது செய்யப்படுவோம் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியது. நாம் எதிர்பார்த்தது போலவே ஆரம்பத்தில் இரண்டு காவல்துறை வாகனங்கள் மட்டுமே இருந்த நிலையில் தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க மேலும் மூன்று வண்டிகளை கொண்டுவந்த நிறுத்தினர்.

பெரம்பலூர் கிருஷ்ணா தியேட்டர் அருகே RSS ன் சீருடை அணிந்த தொண்டர்கள் அணிவகுத்து நின்ற காட்சி பெரம்பலுருக்கு புதிது என்றே சொல்லும் அளவுக்கு மக்களின் கருத்து இருந்தது. பிரார்த்தனா பாடப்பட்ட பிறகு ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை... மீறி ஊர்வலம் சென்றால் கைது செய்யப்படுவீர்கள்...... என காவல் துறை அதிகார்கள் கூறியதால் வேறு வழியின்றி காவல்தறையின் தடையை மீறி ஊர்வலம் செல்ல தீர்மானிக்கப்பட்டு RSS தொண்டர்கள் அணிவகுத்து செல்லத்தொடங்கினர்.

எல்லோரும் கைது செய்யப்படுகிறீர்கள்.......  எனக்கூறிய காவல்துறை அதிகாரிகள் தொண்டர்களை போலிஸ் வண்டியில் ஏறச்சொன்னனர். வரிசையாக ஒவ்வொரு வாகனமாக பெரம்பலூர் பாலக்கரை அருகே உள்ள சின்னமணி ராஜேஸ்வரி திருமண மண்டபம் நோக்கி கொண்டு செல்லப்பட தொண்டர்கள் சுமார் 2 மணி நேரம் அங்கேயே தங்கவைக்கப்பட்டனர். மேலும் 5 முக்கிய பொறுப்பாளர்கள் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டது,

இரண்டு மணி நேரம் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்ட ஸ்வயம் சேவகர்கள் மறுபடியும் காவல்துறை வாகனத்திலேயே பாஜக அலுவலகம் அருகே இறக்கிவிடப்பட்டனர்.

பள்ளி மாணவர்கள் முதல் முப்படைந்த வயதானவர்கள் வரை அணிவகுப்பில் கலந்துகொள்ள வந்தது பெரம்பலூர் மக்களுக்கு பஒரு புதிய அனுபவம் என்றே கூறவேண்டும்.










Saturday, 8 November 2014


சென்னை உயர் நீதி மன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து பெரம்பலூரில் நாளை (09-11-2014 ஞாயிறு) மாலை 05.00 மணியளவில் கிருஷ்ணா தியேட்டர் எதிரில் உள்ள விநாயகர் கோவிலில் பேரணி தொடங்குகிறது.
தேசத்திற்காக பாடுபடும் RSS இயக்கத்தின் பேரணியில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்...
(தர்மத்திற்க்காக குரல் கொடுக்காதவர்கள் அனைவருமே அதர்மத்திற்கு ஆதரவு கொடுக்கிறோம் என்பதை நினைவில் கொள்வோம்.)

Friday, 7 November 2014



ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வரும் 9-ம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்.எஸ்.எஸ். ஆண்டு விழா பேரணி நடத்த அந்த அமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சில இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டது.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை, கோவை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட காவல் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், பொது அமைதியை நிலைநாட்டவும் பேரணிக்குத் தடை விதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

ஆர்எஸ்எஸ் சார்பில் வாதாடிய வழக்க்கறிஞர்கள் நாட்டின் எந்த ஒரு மாநிலத்திலும் தடை விதிக்காத பட்சத்தில் தமிழகத்தில் மட்டும் தடை விதிப்பது உள்நோக்கம் கொண்டது , மேலும் இந்திய - சீனப்போரில் சிறப்பாக ராணுவத்துக்கு உதவியாக செயல்பட்ட காரணத்தால் 1963 ல் நடைபெற்ற சுதந்திர தின அணிவகுப்பில் கலந்துகொள்ள நேரு அழைப்பு விடுத்த காரணத்தால் முழு சீருடையோடு கலந்துகொண்டனர். இந்த கவுரவம் வேறு எந்த அமைப்புக்கும் வழங்கப்படாதது என்பதை நீதிமன்றத்தில் எடுத்துரைத்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், பேரணிக்கு  அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

பத்திரிக்கைச்செய்திகள்


பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோக திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும் சிறப்பு பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம் நாளை (சனிக்கிழமை) அனைத்து வட்டங்களிலும் நடைபெற உள்ளது. 

இதில் பெரம்பலூர் வட்டம் களரம்பட்டி கிராமத்தில் தனித்துணை கலெக்டர் பன்னீர்செல்வம்  தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், தொண்டபாடி கிராமத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலும், குன்னம் வட்டம் முருக்கன் குடி கிராமத்தில் துணைப்பதிவாளர் (பொது வினியோக திட்டம்) ராஜா
சுவாமிநாதன் தலைமையிலும், ஆலத்தூர் வட்டம் நக்க சேலம் கிராமத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முனு.துரைசாமி தலைமையிலும் நாளை காலை 10 மணி அளவில் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பொது மக்கள் கலந்து கொண்டு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயனடையலாம்.

-தினமணி.

Wednesday, 5 November 2014


சென்னை : ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, அந்தந்த மாவட்ட போலீசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உத்தரவிடப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்., நிறுவன தினத்தை ஒட்டி, சென்னை, கோவை, தூத்துக்குடி, திருவாரூர், கரூர், தென்காசி,
தக்கலை ஆகிய நகரங்களில், வரும், 9ம் தேதி, ஊர்வலம், நிகழ்ச்சி நடத்த, முடிவு
செய்யப்பட்டது. இந்த ஊர்வலத்துக்கு, அந்தந்த மாவட்டங்களில், போலீசார் அனுமதி
அளிக்கவில்லை. இதையடுத்து, சென்னையைச் சேர்ந்த, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி, துரைசங்கர், கோவை மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி பாலகிருஷ்ணன் மற்றும் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள், ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்துக்கு, அனுமதியளிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனர்.

அமைதியாக : மனுக்களில், 'ஆர்.எஸ்.எஸ்., அமைப்பானது, தேசிய, தேசப்பக்தி, பண்பாடு கொண்ட அமைப்பு. ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில், ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, தமிழகத்தில், அனுமதி மறுக்கப்படுகிறது. அமைதியாக நடக்க உள்ள, ஊர்வலத்துக்கு அனுமதியளிக்க, உத்தரவிட வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. இம்மனுக்கள், நீதிபதி ராமசுப்ரமணியன் முன், விசாரணைக்கு
வந்தன. மனுக்களுக்கு பதிலளிக்கும்படி, மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, வரும், 6ம் தேதிக்கு, நீதிபதி ராமசுப்ரமணியன் தள்ளிவைத்தார்.

-தினமலர்.

நீண்ட பைஜாமா குர்தா. கையில் ஒரு சூட்கேஸ். விமான நிலையத்தின் வெளியே தன்னைக் கடந்து செல்பவர்களிடம் “எக்ஸ்கியூஸ் மீ. சார் ஒரு நிமிடம்” எனச் சொல்லி சூட்கேசைத் தூக்கிக் காண்பிக்கிறார் அந்த
வாலிபர். சூட்கேசின் வெளிப்புறத்தில் ‘அரேபியாவில் ஆடு மேய்த்தவன்’ என எழுதப்பட்டிருந்தது. இவர் மனநலம் சரியில்லாதவரா.. என்ற ஐயம் தான் நமக்கும் முதலில் எழுந்தது. அவரிடம் பேசியபோது.. அவரது உயரத்தை விட அவர் மீதான மதிப்பு பன்மடங்கு அதிகரித்தது.

அவர் பெயர் சேரன். கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்தவர். பொங்கல் தினத்தன்று நாம் அவரிடம் பேசினோம்.. அன்றைக்கும் சூட்கேஸ் சகிதம் மெரீனா பீச்சிற்கு கிளம்பிக்கொண்டிருந்தார்.. இனி சேரன் நம்மிடம்..
“திட்டக்குடியில், மனைவி, மகனுடன் வசித்து வருகிறேன். தொடக்கத்தில் டெய்லர் வேலை செய்து சிலருக்கு வேலைகொடுத்து வந்தேன். 1994களிலேயே ஆறாயிரம் ரூபாய்க்கு குறைவில்லாமல் சம்பாதித்து வந்தேன். வெளிநாடு போவதற்கு கடன் வாங்கி ஏஜெண்டிடம் எண்பதாயிரம்” கொடுத்தேன். ‘வெளிநாட்டிலும் டெய்லர் வேலைதான் பார்ப்பேன்’ என ஏஜெண்டிடமும் ஸ்டிரிக்டாகச் சொன்னேன்.
அவரும் ‘என்ன தம்பி அப்படி சொல்லிட்டீங்க. அங்க உங்களை ஆடுமாடு மேய்க்கவா அனுப்பப் போறோம். டெய்லரிங் விசா தான் வாங்கித் தருவோம்.’என்றார். இதெல்லாம் 1995-ல் நடந்தது. நான்கைந்து மாதங்களுக்குப் பிறகு, வெளிநாடு போக ஏற்பாடு செய்துவிட்டதாகச் சொல்லி கூட்டிட்டுப் போனாங்க.
மும்பையில் விமானம் ஏறி ரியாத்தில் இறங்கினோம். அங்கிருந்து அல்பஹா என்ற ஊருக்கு கூட்டிட்டுப் போனாங்க. அங்கிருந்து நூற்றைம்பது கி.மீட்டர் தொலைவிலுள்ள காடும் மலையும் நிறைந்த பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு ஏராளமான டென்ட் கொட்டகைகள் இருந்தன. சில கட்டடங்களும் இருந்தன. அதில் ஒரு கட்டட உரிமையாளர் முன்பாக என்னைக் கொண்டு போய் நிறுத்தினாங்க. மின்சார வசதி இல்லாத பகுதி அது.. ‘இங்கு நமக்கு என்ன வேலை தரப்போறாங்க..’ என யோசித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது என்னை கூட்டிச் சென்ற டிரைவரிடம் அங்கிருந்த உரிமையாளர் ஏதோ சொல்ல அவர் என்னிடம் அதை மொழி பெயர்த்தார். ‘உனக்கு இங்கு ஆடு மேய்க்கிற வேலை. மாசம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம். அந்தச் சம்பளமும் ஆறு மாதத்துக்குப் பிறகு தான்.’ என்றார். எனக்கு பூமியே பிளந்து அதுக்குள்ளாற நான் விழறது மாதிரி தோணுச்சு.
‘எனக்கு டெய்லர் வேலை. செலவு போக மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம்னு சொல்லித்தானே கூட்டியாந்தீங்க..’ எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘ஆடுமேய்க்கத்தான் மூன்றாண்டு ஒப்பந்தம் போட்டு உன்னைக் கூட்டி வந்தோம். எங்களை மீறி நீ வெளியில் போகமுடியாது. அப்படி போனால் நாங்க சொல்லவில்லையென்றாலும் கூட போலீசார் உன்னை கைது செய்வார்கள்..’ என மிரட்டியதோடு பாஸ்போர்ட்டையும் வாங்கி வைத்துக் கொண்டார்கள். ஒரு தகரக் கொட்டகையைக் காண்பித்து, அங்கு போய் தங்கிக்கொள்.. என்றார்கள். www.puradsifm.com
இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்தேன். அதிகாலையில் தூங்கிவிட்டேன். முதலாளி வந்து பிரம்பால் அடித்து எழுப்பினார். கொஞ்சம் காய்ந்து போன ரொட்டித்துண்டுகளையும் ஐந்து லிட்டர் தண்ணீர் கேனையும் தந்து அறுபது ஆடுகளைக் காண்பித்து ‘மேய்ச்சுட்டு வா..’ என்றார். காலை எட்டு மணிக்கு கொளுத்தும் வெயிலில் ஆடுகளோடு கிளம்பினேன். மாலை ஏழு மணிக்கு களைச்சு போய் திரும்பினேன். கொஞ்சம் அரிசியும் பருப்பும் தந்து சமைச்சு சாப்பிட்டுக்கோ.. என்றார்.
மறுநாள் காலை ஐந்து ஜோடி வெள்ளை நிற பைஜாமா குர்தா தந்து ‘போட்டுக்கோ.. இதை போட்டுட்டு தான் ஆடு மேய்க்கப் போகணும்’ என்றார். எனக்கு சந்தோஷமாக இருந்தது. ஷேக் மாதிரி கற்பனை செய்து கொண்டேன். கம்பீரமாக நடந்து ஆடு மேய்க்கப்போனேன்.
அன்று மாலை வீடு திரும்பியதும் முதலாளி என்னை ஏற இறங்க பார்த்துட்டு கடுப்பானார். கோபத்துடன் உள்ளே போனவர் பிரம்புடன் வந்து என்னை விளாசினார். காரணம் புரியாமல் அடி வாங்கிக்கொண்டேன். “எதுக்கு அடிச்சீங்க-?’ என்றேன். வெள்ளை பைஜாமாவில் ஒட்டியிருந்த அழுக்கைக் காண்பித்து, ‘ஆடு மேய்க்க அனுப்பினால் ஒரு இடத்தில் உட்கார்ந்து வேலை பார்த்திருக்கிறாய்.. இனி அப்படி நடந்தால் தொலைச்சுப்போடுவேன்’ என்றார். அப்போது தான் அவர் வெள்ளை நிற பைஜாமா தந்ததன் மர்மம் புரிந்தது.
என்னைப் போல தமிழர்கள் பலர் ஆடு மேய்ப்பதைப் பார்த்தேன். ஆறு மாதம் முடிந்ததும் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் தந்தார்கள். அது என் சாப்பாட்டுக்கே செலவானது. அதுவும் பாதி வயிறுக்குத் தான் சாப்பிட முடிந்தது. கொஞ்சம் அதிகமாக சம்பளம் தாருங்க.. என்றால் போலீசில பிடித்து கொடுத்துடுவேன் என மிரட்டினாங்க. என்னைப் போல லட்சக்கணக்கான தமிழன் அங்கு இப்படி வேலை செய்கிறான். நகர்புறங்களில் வாழும் தமிழன் காரைத் துடைத்தும் கடைகளைப் பெருக்கி கழுவிவிட்டும் சொற்பமாக சம்பாதிக்கிறான். யார் முகத்திலும் நீங்கள் சிரிப்பைப் பார்க்கமுடியாது.
அங்கிருக்கும் தமிழர்களிடையே ஒற்றுமையும் பரஸ்பர அன்பும் இருந்தாலும் யாருக்கும் யாராலும் பொருளாதாரரீதியாக உதவி செய்யமுடியாது. கவலையைத் தான் பகிர்ந்து கொள்ள முடியும்.
மூணு வருசத்துக்குப் பிறகு டிக்கெட் எடுத்துக் கொடுத்து அனுப்பினாங்க. ஊருக்கு வந்ததும் எனக்கு மனதே சரியில்லை. ஏமாத்திப் போட்டாங்களேங்கிற வருத்தம். கூட்டிட்டுப் போய் ஆடு மேய்க்க வைச்சுட்டாங்களேன்னு கோபம். குடிக்க ஆரம்பித்தேன்.
ஒருநாள் எனக்குள் தெளிவு பிறந்தது. ‘எதுக்கு குடிக்கணும். நம்மைப் போல பிறர் பாதிக்காமல் இருப்பதற்கான சமூகச் சேவையைச் செய்யலாமே’ எனத் தோன்றியது. உடனடியாக சில மாத குடிப்பழக்கத்தை உதறினேன்.
என்ன செய்யலாம் என யோசித்தபோது தான் சூட்கேசில் ‘வெளிநாட்டில் ஆடுமேய்த்தவன்’ என எழுதி வலம் வந்தேன். பலர் பார்த்துக் கேட்டார்கள். விஷயத்தைச் சொன்னேன். வெளிநாடு செல்வதால் ஏற்படும் விளைவுகளை விளக்கினேன். நம் உழைப்பை உள்ளூரிலேயே கொடுக்கலாமே என்றும் அறிவுறுத்தினேன். 1998-லேயே இந்தப் பிரசாரத்தைத் தொடங்கிட்டேன். அரேபியாவில் ஆடுமேய்த்த அதே சீருடையில் தான் என் பிரசாரம் இன்றைக்கும் தொடர்கிறது.
இப்பவும் மாதத்துக்கு பதினைந்து நாள் சென்னை மெரீனா பீச், கோயம்பேடு பஸ்ஸ்டாண்ட், விமானநிலையம் மற்றும் தமிழகத் திலிருந்து வெளிநாடுகளுக்கு விமானம் செல்லும் விமானநிலையங்களுக்கு இதே சூட்கேசோடு போகிறேன். துண்டு நோட்டீஸ் கொடுக்கிறேன்.
இந்த சூட்கேஸ் சமாச்சாரத்தால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. ஆனால் என் மனைவி தையல் தொழில் செய்து குடும்பத்தை நடத்தத் தொடங்கிவிட்டாள். இப்படி பெட்டியோடு போறது மனதுக்கு ஆறுதலாகவும் சமூக சேவையாகவும் இருக்கிறது. என்னை அப்படியே விட்டுவிடுன்னு என் மனைவியிடம் சொல்லிவிட்டேன். ‘என் கூட வர்றப்ப மட்டும் இந்த சூட்கேஸைக் கொண்டு வராதீங்க..’ என்றாள். இப்போது அதற்கும் ஓ.கே. நானும் அவ்வப்போது டெய்லர் வேலை பார்க்கிறேன்.
ஆரம்பத்தில் தனி மனிதனாக பிரசாரம் செய்து வந்த என் பின்னால் வெளிநாடு போய் நொந்து வந்தவர்களும் சமூக ஆர்வலர்களும் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். மூன்றாண்டுகளுக்கு முன்பு என்னையொத்த கருத்தைக் கொண்ட சிலரை இணைத்து மீட்பு அறக்கட்டளை உருவாக்கினேன். அவரவர் சம்பாதிக்கும் பணத்திலிருந்து கொஞ்சம் போட்டு அதை நடத்திட்டு வர்றோம்.
வெளிநாட்டில் சிக்கித் தவிப்பவர்கள் குறித்து தகவல் வந்தவுடன் களத்தில் இறங்கிவிடுவோம். இதுவரை எழுநூறு பேரை மீட்டிருக்கிறோம்.
டிசம்பர் மாதம் மலேசியாவில் இறந்த அழகப்பன், பெருமாள் என்கிற இரு தொழிலாளர்கள் உடலை அரசின் செலவில் இங்கு கொண்டு வந்தோம். எங்கள் தொடர் முயற்சியால் அரசே இறங்கி வந்து செய்த வேலை இது.
நான் இப்ப சொல்றது ரொம்ப முக்கியம் சார்” எனப் பீடிகையோடு தொடர்ந்தார்..
“தன் பிள்ளை நல்லா படிக்கணும்னுதான் நினைக்கணுமே தவிர வெளிநாட்டில் வேலைக்குப் போய் சம்பாதிக்கணும்னு பெற்றோர்கள் நினைக்கக்கூடாது. இதை வலுவா சொல்லுங்க சார்..” என்றவாறே பெட்டியுடன் கிளம்பினார் சேரன்....